)
PM SVANidhi Scheme Latest News: பல்வேறு பிரிவினரின் நலனுக்காக மத்திய அரசு பல வித நலத்திட்டங்களை நடத்தி வருகின்றது. தற்போது பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டத்தில் தெரு வியாபாரிகள் ரூ.90,000 வரை கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் இந்தத் திட்டத்தை நீட்டித்தது. தற்போது இந்த திட்டம் மார்ச் 2030 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு மற்றும் நீட்டிப்பின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 1.15 கோடி தெரு வியாபாரிகள் இந்தத் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- புதன்கிழமை, பிரதம மந்திரி தெரு வியாபாரிகள் ஆத்மநிர்பர் நிதி அதாவது பிரதமர் ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் மறுசீரமைப்பு மற்றும் நீட்டிப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- இப்போது இந்தத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் காலம் டிசம்பர் 31, 2024 க்கு பதிலாக மார்ச் 31, 2030 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இந்தத் திட்டத்தின் மொத்த பட்ஜெட் அளவு ரூ.7,332 கோடியாக வைக்கப்பட்டுள்ளது.
- மேலும் 1.15 கோடி தெரு வியாபாரிகளுக்கு பயனளிப்பதே இந்த திட்டத்தின் இலக்காக உள்ளது.
- இதில் 50 லட்சம் புதிய பயனாளிகளும் அடங்குவர்.
மறுசீரமைப்பு மற்றும் நீட்டிப்பின் கீழ், முதல் தவணை கடன் ரூ.10,000-லிருந்து ரூ.15,000 ஆகவும், இரண்டாவது தவணை ரூ.20,000-லிருந்து ரூ.25,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது தவணை ரூ.50,000 ஆகவே இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் பயனாளிகளுக்கு அவசர வணிகம் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கு உடனடி கடன் வசதி கிடைக்கும்.
இதற்காக, அத்தகைய பயனாளிகளுக்கு UPI-இணைக்கப்பட்ட RUPAY கிரெடிட் கார்டு (UPI-linked RUPAY Credit Card) கிடைக்கும். சிறு வணிகர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் செய்ய அரசாங்கம் ஊக்குவிக்கும். இதன் கீழ், தெருவோர விற்பனையாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் சில்லறை மற்றும் மொத்த பரிவர்த்தனைகளில் ரூ.1,600 வரை டிஜிட்டல் கேஷ்பேக்கைப் பெற முடியும்.
- டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க, தெருவோர விற்பனையாளர்கள் சில்லறை மற்றும் மொத்த பரிவர்த்தனைகளில் ரூ.1,600 வரை கேஷ்பேக்கைப் பெறலாம். இந்தத் திட்டம் தொழில்முனைவு, நிதி கல்வியறிவு மற்றும் டிஜிட்டல் திறன்கள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது.
- இதன் கீழ், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்துடன் (FSSAI) இணைந்து தெரு விற்பனையாளர்களுக்கு நிலையான சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.
- மேலும், 'சுவானிதி சே சம்ரிதி' பிரச்சாரம் ஒவ்வொரு மாதமும் லோக் கல்யாண் மேளாக்கள் மூலம் மேலும் வலுப்படுத்தப்படும்,
- இதனால் அரசாங்கத் திட்டங்களின் நன்மைகள் பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை முழுமையாகச் சென்றடையும்.
- COVID-19 தொற்றுநோய் காலத்தில் தெருவோர விற்பனையாளர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் இந்த திட்டத்தை ஜூன் 1, 2020 அன்று தொடங்கியது. இந்தத் திட்டம் இதுவரை 68 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.13,797 கோடி மதிப்புள்ள 96 லட்சத்திற்கும் அதிகமான கடன்களை வழங்கியுள்ளது.
- சுமார் 47 லட்சம் டிஜிட்டல் முறையில் செயல்படும் பயனாளிகள் 557 கோடிக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் செய்தனர். இதன் மூலம் அவர்கள் மொத்தம் ரூ.241 கோடி கேஷ்பேக்கைப் பெற்றனர்.
- 'சுவாநிதி சே சம்ரிதி' பிரச்சாரத்தின் கீழ், 3,564 நகர்ப்புற அமைப்புகளில் 46 லட்சம் பயனாளிகளின் ப்ரொஃபைல்கள் தயாரிக்கப்பட்டு, 1.38 கோடிக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்தத் திட்டத்திற்கு அதன் சிறந்த பங்களிப்புக்காக பிரதம மந்திரி விருது 2023 மற்றும் வெள்ளி விருது 2022 வழங்கப்பட்டுள்ளது.
- தெருவோர வியாபாரிகளை தொழில் ரீதியாகவும் சமூக-பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்துவதே இதன் நோக்கமாக உள்ளது.
- இதன் மூலம், தெருவோர வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் வளர்ச்சியடைவது மட்டுமல்லாமல், நகர்ப்புறங்களில் வாழ்வாதாரம், உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் தன்னம்பிக்கையையும் இது மேம்படுத்தும்.
PM ஸ்வாநிதி திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு இப்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை (DFS) ஆகியவற்றின் கூட்டுக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என PIB இன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.
- வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் மூலம் தெருவோர வியாபாரிகளுக்கு கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான அணுகலை எளிதாக்குவதே DFS இன் பணியாக இருக்கும்.
- இது ஒரு உத்தரவாதமில்லாத கடன் திட்டம் என்பது பிரதம மந்திரி ஸ்வாநிதி யோஜனாவின் மிகப்பெரிய அம்சமாக பார்க்கப்படுகின்றது.
- இதன் கீழ், தெருவோர வியாபாரிகள் கடன் பெற எந்த வகையான சொத்தையும் அடமானம் வைக்க வேண்டியதில்லை.
- ஆதார் அட்டை மூலமே கடன் படிப்படியாகக் கிடைக்கிறது.
- பயனாளி இந்த கடனை ஒரு வருடத்திற்குள் திருப்பிச் செலுத்த வேண்டும், மேலும் இதற்கு EMI செலுத்தும் வசதியும் உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ