)
PM Vishwakarma Yojana: நாட்டு மக்களின் வாழ்க்கையையும் பொருளாதார நிலைமையையும் மேம்படுத்த இந்திய அரசும் மாநில அரசுகளும் பல வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அனைத்து பிரிவு மக்களுக்கும் பிரத்யேகமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள், மூத்த குடிமக்கள், பெண்கள், குழந்தைகள், அமைப்புசாரா துறை ஊழியர்கள் என அனைவருக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அப்படிப்பட்ட திட்டங்களில் ஒரு அற்புதமான திட்டம்தான் 'பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா' திட்டம். பிரதமர் நரேந்திர மோடி 2023 ஆம் ஆண்டு தனது பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று இந்த திட்டத்தைத் தொடங்கினார்.
சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் நபர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு நபர் சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பினால், இந்த அரசாங்கத் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ், எந்த உத்தரவாதமும் இல்லாமல் கடன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த திட்டத்தொற்காக அரசாங்கம் 18 தொழில்களை நிர்ணயித்துள்ளது. இந்த திட்டத்தின் பலன்களை பெற, அவற்றில் ஏதாவது ஒரு தொழிலுடன் பயனாளி இணைந்திருக்க வேண்டும்.
பிஎம் விஸ்வகர்மா யோஜனாவின் கீழ் வரும் தொழில்கள் என்ன? இதற்கு எப்படி விண்ணப்பிப்பது? இந்த அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.
விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ், பொற்கொல்லர், கொல்லர், நாவிதர் (முடிதிருத்துபவர்கள்) மற்றும் செருப்பு தைப்பவர் போன்ற பாரம்பரிய திறன்களைக் கொண்ட கைவினைஞர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் அரசாங்கம் 18 பாரம்பரிய திறன்களுக்கான திறமையான தொழில்களைச் சேர்த்துள்ளது. இது நாடு முழுவதும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினைஞர்களுக்கு உதவும்.
தச்சர்கள்
படகு கட்டுபவர்கள்
கொல்லர்கள்
பூட்டு செய்யும் தொழிலாளிகள்
பொற்கொல்லர்
குயவர்கள்
சிற்பிகள்
கொத்தனார்கள்
மீன்பிடி வலை தயாரிப்பாளர்கள்
டூல் கிட் தயாரிப்பாளர்கள்
கல் உடைப்பவர்கள்
செருப்பு தைப்பவர்கள்/காலணி தயாரிப்பாளர்கள்
கூடை/பாய்/துடைப்பம் தயாரிப்பாளர்கள்
பொம்மை மற்றும் பிற பொம்மை தயாரிப்பாளர்கள் (பாரம்பரிய முறையில்)
நாவிதர்கள்
மாலை தயாரிப்பாளர்கள்
சலவை செய்பவர்கள்
தையல்காரர்கள்
- நீங்கள் இந்த திட்டத்திற்கு தகுதியுடையவராகவும், உங்கள் வயது 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டதாகவும் இருந்தால், முதலில் உங்கள் அருகிலுள்ள ஜனசேவா மையத்திற்குச் செல்ல வேண்டும்.
- இங்கே நீங்கள் தொடர்புடைய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- அதன் பிறகு, ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தால், உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.
- பயனாளிகளுக்கு ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும்.
- கருவிகள் வாங்க ரூ.15,000 முன்பணம் வழங்கப்படும்.
- பிணையம் ஏதும் இல்லாமல் ரூ.1 லட்சம் கடன் வழங்கப்படும்.
- இதை பயனாளிகள் 18 மாதங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
- எதிர்காலத்தில் பயனாளிகள் இன்னும் அதிக பணத்தைப் பெற முடியும்.
- ஊக்கத்தொகை போன்ற வசதிகளும் பயனாளிகளுக்குக் கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ