)
Central Government : குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் சுஸ்ரீ ஷோபா கரந்தலாஜே, மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், "குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் (KVIC) மூலம் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை (PMEGP) செயல்படுத்துகிறது. இது கிராமப்புறங்களில் புதிய குறுந்தொழில்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கும் ஒரு மத்திய அரசின் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களைச் சேர்ந்த மற்றும் பட்டியல் சாதியினத்தைச் சேர்ந்தவர்கள் சிறப்புப் பிரிவினராகக் கருதப்படுகிறார்கள். அவர்களுக்கு அதிக மானிய விகிதமும், திட்டச் செலவில் குறைந்த பங்களிப்பும் வழங்கப்படுகிறது.
அதேபோல், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், 'தேசிய பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் மையம்' என்ற திட்டத்தையும் நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இதன் முக்கிய நோக்கம், பட்டியல் சாதி (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) தொழில்முனைவோரின் திறனை மேம்படுத்துவதன் மூலம், அரசாங்க பொதுக் கொள்முதலில் அவர்கள் அதிக அளவில் பங்கேற்க உதவுவதாகும். இத்திட்டத்தின் கீழ், திறன் மேம்பாடு, சந்தை இணைப்பு, நிதி உதவி, மற்றும் டெண்டர் ஏலத்தில் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல்கள் போன்ற தொழில்முறை ஆதரவுகள் வழங்கப்படுகின்றன.
பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டத்தின் கீழ், பிணையில்லா நிறுவனக் கடன்கள், வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவைத் துறைகளில் வருமானம் ஈட்ட விரும்பும் எந்தவொரு தனிநபரும், ரூ.20 லட்சம் வரை கடன் பெற முடியும். இத்திட்டத்தின் கீழ், சிசு (ரூ.50,000 வரை), கிஷோர் (ரூ.50,000க்கு மேல் ரூ.5 லட்சம் வரை), தருண் (ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரை), மற்றும் தருண் பிளஸ் (ரூ.10 லட்சத்துக்கு மேல் ரூ.20 லட்சம் வரை) என நான்கு கடன் பிரிவுகள் உள்ளன. 24.10.2024 முதல், 'தருண்' பிரிவின் கீழ் கடன் பெற்று வெற்றிகரமாக திருப்பிச் செலுத்திய தொழில்முனைவோருக்கு 'தருண் பிளஸ்' கடன் கிடைக்கும்" என தெரிவித்துள்ளார்.
1. பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP)
இந்தத் திட்டம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தால் (KVIC) செயல்படுத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் புதிய குறுந்தொழில்களை நிறுவ விரும்பும் தொழில்முனைவோருக்கு நிதி உதவி வழங்குகிறது. தொழிலுக்கு ஏற்ப நிதியுதவி பெறலாம். அதிகபட்சம் 50 லட்சம் கூட இந்த திட்டத்தின் கீழ் கடனுதவி கிடைக்கும்.
மானியம் உண்டு. 18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள், சுய உதவிக் குழுக்கள், கூட்டு நிறுவனங்கள், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் விண்ணப்பிக்கலாம். ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ் (பொருந்தினால்), இருப்பிடச் சான்றிதழ் மற்றும் திட்ட அறிக்கை (Project Report) ஆவணங்களாக தேவை. PMEGP-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று (https://www.kviconline.gov.in/pmegp.jsp) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
2. தேசிய பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் மையம் (NSSH)
இந்தத் திட்டம், பட்டியல் சாதி (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) தொழில்முனைவோரின் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் SC/ST தொழில்முனைவோருக்குத் தேவையான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நிதி வசதிகளைப் பெற உதவுவதுடன், டெண்டர் ஏலத்தில் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல் வழக்கப்படுகின்றன.இந்த திட்டத்துக்கு MSME அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான (https://www.nsic.co.in/nsh) NSSH போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும்.
3. பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PMMY)
பிணையில்லா நிறுவனக் கடன்களை குறுந்தொழில்களுக்கு வழங்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவைத் துறைகளில் வருமானம் ஈட்ட விரும்பும் தனிநபர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.
கடன் வகைகள்: சிசு: ரூ. 50,000 வரை கடன், கிஷோர்: ரூ. 50,000க்கு மேல் ரூ. 5 லட்சம் வரை கடன். ரூ. 5 லட்சத்துக்கு மேல் ரூ. 10 லட்சம் வரை கடன், தருண் பிளஸ்: ரூ. 10 லட்சத்துக்கு மேல் ரூ. 20 லட்சம் வரை கடன். தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் விண்ணப்பிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ