Latest Transaction Charges For Post Office ATM Card: தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு (POSA) வைத்திருப்பவர்களுக்கான ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களில், குறிப்பாகப் பிற வங்கி ஏடிஎம்களில், நவம்பர் 1, 2025 முதல் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. தபால் அலுவலக ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பிற வங்கி ஏடிஎம்களில் இலவச வரம்பைத் தாண்டிய நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதன் விவரங்களை பார்ப்போம்.
தபால் அலுவலக ஏடிஎம் அட்டை பரிவரத்தனை கட்டணம் உயர்வு:
உங்களுக்கான இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகு, தபால் அலுவலக ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் மற்ற வங்கி ஏடிஎம்களில் தங்கள் அட்டைகளிலிருந்து பணம் எடுப்பதற்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதாவது பெருநகரங்களில் உள்ள மற்ற வங்கி ஏடிஎம்களில் மூன்று இலவச பரிவர்த்தனைகளும், பெருநகரம் அல்லாத நகரங்களில் ஐந்து இலவச பரிவர்த்தனைகளும் கிடைக்கும். அதன்பிறகு, ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் ₹23 + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ₹11 + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
புதிய கட்டணம் எப்பொழுது அமலுக்கு வந்தது?
தபால் அலுவலக ஏடிஎம் அட்டை பயனர்களுக்கான திருத்தப்பட்ட கட்டணங்கள் நவம்பர் 1, 2025 முதல் பொருந்தும் என்பதை கவனித்தில் கொள்ளுங்கள். அதேநேரம் உங்கள் தபால் அலுவலக ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி, தபால் அலுவலக ஏடிஎம்களில் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை.
தபால் அலுவலக ஏடிஎம்களில் (DOP ATM) கட்டணங்கள்:
தபால் துறையால் நடத்தப்படும் ஏடிஎம்களில் பரிவர்த்தனை கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை.நிதி பரிவர்த்தனைகள் மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு மாதத்திற்கான 5 பரிவர்த்தனைகள் இலவச வரம்பு கிடைக்கும். அதேநேரம் இலவச வரம்பைத் தாண்டிய மேற்கொள்ளப்படும் நிதி பரிவர்த்தனைகளுக்கு ₹10 + ஜிஎஸ்டி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ₹5 + ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும்.
பிற வங்கி ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்கள்:
நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு மெட்ரோ போன்ற பெருநகரங்களில் மாதத்திற்கு 3 இலவச பரிவர்த்தனைகள் கிடைக்கும். அதேபோல நான்-மெட்ரோ போன்ற பெருநகரங்கள் அல்லாத பகுதிகளில் மாதத்திற்கு 5 இலவச பரிவர்த்தனைகள் கிடைக்கும்.
இலவச வரம்பைத் தாண்டிய மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணத்தின் கீழ், ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் பெருநகரங்களில் ₹23 + ஜிஎஸ்டி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ₹11 + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
முக்கிய அம்சங்கள்:
1. இந்த திருத்தப்பட்ட கட்டணங்கள் நவம்பர் 1, 2025 முதல் நடைமுறைக்கு வருகின்றன.
2. தபால் அலுவலக ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்கள், பிற வங்கிகளின் ஏடிஎம்களில் இலவச வரம்புகளைத் தாண்டிச் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே அதிக கட்டணம் செலுத்த வேண்டும்.
3. தபால் அலுவலக ஏடிஎம்களில் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கான (இலவச வரம்பைத் தாண்டி) கட்டணங்களில் மாற்றம் இல்லை.
4. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) வாடிக்கையாளராக இருந்தால், உங்கள் கணக்கின் வகையைப் பொறுத்து (Basic Savings Account, Regular Savings Account, Current Account) கட்டணங்கள் வேறுபடலாம்.
குறிப்பு:
தபால் நிலையத்தின் ஏடிஎம் கட்டணங்கள் அவ்வப்போது (குறிப்பாக ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி) மாறக்கூடும். எனவே, சமீபத்திய மற்றும் துல்லியமான விவரங்களுக்கு உங்கள் தபால் அலுவலகம் அல்லது IPPB இணையதளத்தைப் பார்க்கவும்.
மேலும் படிக்க - தபால் துறையில் வேலை.. மாதம் ரூ.30,000 சம்பளம்.. விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









