Post Office Savings Schemes: போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில், சாமானியர்கள் சிறு சேமிப்பு மூலம், பெரிய அளவில் நிதியை உருவாக்க உதவும் திட்டங்களும், மூத்த குடிமக்களுக்கும் வழக்கமான வருமானத்தை தரும் திட்டங்களும் உள்ளன.

Post Office Savings Schemes: பாதுகாப்பான முதலீட்டிற்கான சிறந்த முதலீடுகள் என்றால், அஞ்சலக திட்டங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். நல்ல வட்டியுடன், பெரிய அளவிலான நிதியை உருவாக்கக்கூடிய தபால் நிலையத்தின் 5 திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அவை வரியைச் சேமிப்பதிலும் உதவியாக இருக்கும். பாதுகாப்பு மற்றும் லாபம் உள்ள ஒரு விருப்பத்தையும் நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த 5 திட்டங்கள் உங்களுக்கு மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும்.
போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில், சாமானியர்கள் சிறு சேமிப்பு மூலம், பெரிய அளவில் நிதியை உருவாக்க உதவும் திட்டங்களும், மூத்த குடிமக்களுக்கும் வழக்கமான வருமானத்தை தரும் திட்டங்களும் உள்ளன.
1. பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
PPF என்பது சாதாரண மக்களுக்கு மிகவும் பிரபலமான சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். நீண்ட கால முதலீடு செய்து பெரிய ஓய்வூதிய நிதியை உருவாக்க அல்லது வேறு ஏதேனும் பெரிய இலக்கை அடைய விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வு.
வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7.1% கூட்டு வட்டி விகிதம்.
முதலீட்டு வரம்பு: குறைந்தபட்சம் ரூ. 500 மற்றும் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம்.
முதிர்வு காலம்: 15 ஆண்டுகள், இதை தலா 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.
வரி சலுகைகள்: இது E-E-E (விலக்கு-விலக்கு-விலக்கு) நன்மையை வழங்குகிறது. முதலீடு, வட்டி மற்றும் முதிர்ச்சி தொகை என அனைத்திற்கும் வரிவிலக்கு
இதில் நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1.5 லட்சத்தை 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 7.1% என்ற விகிதத்தில் உங்கள் நிதி ரூ. 1.5 கோடி என்ற அளவில் பெருகும்
2. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS)
ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானம் பெற உதவும் இந்தத் திட்டம் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதம்: ஆண்டுக்கு 8.2%.
முதலீட்டு வரம்பு: அதிகபட்ச முதலீடு ரூ. 30 லட்சம் வரை.
முதிர்வு காலம்: 5 ஆண்டுகள், பின்னர் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.
வட்டி : வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் (ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும்) உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.
மூத்த குடிமக்களுக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான வழக்கமான வருமானத்தை அளிக்கிறது. 8.2% என்ற அதிக வட்டி விகிதம் வங்கி FD-ஐ விட மிகவும் அதிக அளவு. இருப்பினும், இதில் பெறப்படும் வட்டி வரியின் கீழ் வருகிறது.
3. சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY)
சுகன்யா சம்ரிதி யோஜனா என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் மகள்களின் எதிர்கால பாதுக்காப்பிற்கான சிறந்த. உங்களுக்கு 10 வயதுக்குட்பட்ட மகள் இருந்தால் இதனிய பயன்படுத்திக் கொள்ளலாம்.
வட்டி விகிதம்: ஆண்டுக்கு 8.2% (அஞ்சல் அலுவலகத் திட்டங்களில் மிக உயர்ந்தது).
முதலீட்டு வரம்பு: குறைந்தபட்சம் ரூ. 250 மற்றும் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம்.
முதிர்வு: கணக்கு திறக்கும் தேதியிலிருந்து 21 ஆண்டுகள் அல்லது மகள் 18 வயதுக்குப் பிறகு திருமணம் செய்து கொள்ளும்போது.
வரிச் சலுகைகள்: PPF போலவே, இது E-E-E இன் நன்மையையும் வழங்குகிறது. முதலீடு செய்யப்பட்ட தொகைக்கும் 80C பிரிவின் கீழ் விலக்கு கிடைக்கிறது.
4. தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC)
பாதுகாப்பான வரி சேமிப்புத் திட்டம்மாக விளங்கும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில், ஒரு மொத்தத் தொகையை முதலீடு செய்வதன் மூலம் வரியைச் சேமிக்க விரும்புவோருக்கும், உத்தரவாதமான வருமானத்தைப் பெற விரும்புவோருக்கும் இது ஒரு சிறந்த தேர்வு.
வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7.7%
முதலீட்டு வரம்பு: குறைந்தபட்சம் ரூ. 1000, அதிகபட்ச வரம்பு இல்லை.
முதிர்வு: 5 ஆண்டுகள்.
வரிச் சலுகைகள்: இதில் முதலீடு செய்யப்படும் ரூ. 1.5 லட்சம் வரை பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குக்குத் தகுதியுடையது.
5. கிசான் விகாஸ் பத்ரா (KVP)
உங்கள் பணத்தை இரட்டிப்பாக்குவதே உங்கள் இலக்காக இருந்தால், கிசான் விகாஸ் பத்ரா உங்களுக்கானது. இது ஒரு விவசாயியின் பெயரில் உள்ள திட்டம். ஆனால் எந்த இந்திய குடிமகனும் இதில் முதலீடு செய்யலாம்.
வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7.5% (கூட்டு).
முதலீட்டு வரம்பு: குறைந்தபட்சம் ரூ. 1000, அதிகபட்ச வரம்பு இல்லை.
முதிர்வு: 115 மாதங்கள் (9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள்).
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ