)
Central Government Scheme for Women: தபால் நிலையத்தில் பல வித சிறுசேமிப்பு திட்டங்கள் செயலில் உள்ளன. இவற்றில் இல்லத்தரசிகளுக்கான ஒரு சிறந்த திட்டமாக இருப்பது தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டம் (MIS). இந்தத் திட்டத்தில், வீட்டில் இருந்தபடியே பெண்கள் மாதத்திற்கு ரூ.9,250 சம்பாதிக்கலாம். இது பெண்களுக்கு ஏற்ற திட்டமாக கருதப்பட்டாலும், ஆண்கள் மற்றும் பெண்கள் என யார் வேண்டுமானாலும் இதில் முதலீடு செய்யலாம்.
சமீபத்தில், தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டம் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதில் எப்படி முதலீடு செய்வது? இதன் வட்டி விகிதம் என்ன? இவற்றை பற்றியும் அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தின் பிற விவரங்களை பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
தபால் நிலைய எம்ஐஎஸ் திட்டம் பெண்கள், குறிப்பாக இல்லத்தரசிகளுக்கான பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து எந்த ஆபத்தும் இல்லாமல் மாதாந்திர வருமானத்தைப் பெறலாம். இது இல்லத்தரசிகளின் வாழ்க்கையை எளிதாக்குகிறது. MIS இன் தற்போதைய வட்டி விகிதம் 7.4%. இது அரசாங்க உத்தரவாதத்துடன் வருகிறது.
இந்தத் திட்டம் நிலையான வைப்புத்தொகை அல்லது தொடர் வைப்புத்தொகை ஆகிய திட்டங்களை விட சிறந்த திட்டமாக கருதப்படுகின்றது. இதில் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட வருமானம் கிடைக்கின்றது. இதில் முதலீடு செய்யப்படும் பணம் சந்தை மாற்றங்களால் பாதிக்கப்படாது என்பதால், இதில் பணத்தின் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் கிடைக்கின்றது. இந்த காரணங்களால் இந்த திட்டம் இல்லத்தரசிகளுக்கான சிறந்த தபால் நிலையத் திட்டமாக பரிந்துரைக்கப்படுகின்றது.
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் (MIS), முதலீட்டாளர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்கிறார். இதற்கு ஒவ்வொரு மாதமும் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலம் மாதா மாதம் ஒரு வழக்கமான வருமானம் கிடைக்கிறது.
இதில் அதிகபட்சமாக ஒரு கணக்கில் ரூ.9 லட்சதையும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சத்தையும் டெபாசிட் செய்யலாம். அசல் பணம் ஐந்து வருட முடிவில் திரும்பக் கிடைக்கும். இந்தத் திட்டம் இல்லத்தரசிகள் பயன்படுத்த எளிதானது மற்றும் எளிய விதிகளைக் கொண்டுள்ளது.
தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டம் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? ஒரு உதாரணத்தின் மூலம் இதை தெரிந்துகொள்ளலாம்.
- ஒரு முதலீட்டாளர் கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.9,250 கிடைக்கும்.
- இந்த திட்டத்தின் வட்டி விகிதம் வருடத்திற்கு 7.4%.
- உங்கள் ஆண்டு வருமானம் சுமார் ரூ.1,11,000 ஆக இருக்கும்.
- ஐந்து ஆண்டுகளில், முதலீட்டாலரின் மொத்த வருமானம் ரூ.5,55,000 ஆக உயரலாம்.
இல்லத்தரசிகள் இந்தப் பணத்தை வீட்டுச் செலவுகளுக்குப் பயன்படுத்தி, நிதி அழுத்தத்தில் நிவாரணம் பெறலாம்.
- ஐந்து வருடங்களுக்கு முன் முதலீட்டாளர் பணத்தை எடுத்தால், அரசாங்கம் அபராதம் விதிக்கும்.
- முதல் வருடத்தில் பணத்தை எடுக்க முடியாது.
- ஒன்று முதல் மூன்று வருடங்களுக்குள் பணத்தை எடுத்தால், 2% அபராதம் விதிக்கப்படும் .
- மூன்று முதல் ஐந்து வருடங்களுக்குள் பணத்தை எடுத்தால், 1% அபராதம் விதிக்கப்படும்.
- ஐந்து வருடங்கள் கணக்கை வைத்திருந்தால், எந்த அபராதமும் இல்லை.
இந்திய குடிமக்கள் அனைவரும் தபால் அலுவலக MIS கணக்கைத் திறக்கலாம். இதற்கு முதலில், உங்களுக்கு ஒரு தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு இருக்க வேண்டும். கணக்கைத் திறக்க உங்கள் ஆதார் அட்டை மற்றும் பான் அட்டையைக் அளிக்க வேண்டியது அவசியமாகும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் இந்த கணக்கை திறக்க முடியும். இது ஒரு பாதுகாவலரால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் ஒற்றை (சிங்கிள்) அல்லது கூட்டுக் கணக்குகளைத் (ஜாயிண்ட்) தேர்வு செய்யலாம். கணக்கைத் திறந்து, முதலீடு செய்து, முதலீட்டாலர்கள் மாத வருமானத்தை பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ