)
Post Office Monthly Income Scheme: தபால் அலுவலகம் மூலம் பல வித சிறுசேமிப்பு திட்டங்கள் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பான மற்றும் மாதா மாதம் நிலையான வருமானத்தை அளிக்கும் முதலீட்டுத் திட்டங்கள் தபால் நிலையத்தில் பல உள்ளன. அவற்றில் ஒரு சூப்பர்ஹிட் திட்டமாக கருதப்படும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) பற்றி இந்த பதிவில் காணலாம்.
தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டம்
நிலையான வருமானத்துடன் பாதுகாப்பான திட்டத்தை தேடும் முதலீட்டாளர்களுக்கு தபால் அலுபலக மாதாந்திர வருமானத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த சிறந்த திட்டம் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகிறது. ஆகையால், இதில் ஆபத்துகளுக்கான சாத்தியம் மிகக் குறைவு.
இந்தத் திட்டத்தில் ஒரு மொத்தத் தொகையை டெபாசிட் செய்யும்போது, ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகை வட்டியாக கிடைக்கிறது. இது உங்கள் மாதாந்திர வருமானத்தை உறுதி செய்கிறது. இதில் மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் என்னவென்றால், மூத்த குடிமக்களும் இதில் கூடுதல் சலுகைகளைப் பெறுகிறார்கள். மேலும் இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் தனியாகவோ அல்லது கூட்டுக் கணக்கிலோ முதலீடு செய்யலாம்.
POMIS: பாதுகாப்பான மற்றும் நம்பகமான திட்டம்
- தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான திட்டமாக கருதப்படுகின்றது.
- இது இந்திய தபால் மூலம் நிர்வகிக்கப்படுகின்றது.
- இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், முதலீட்டாளர்கள் தங்கள் மொத்தத் தொகையை டெபாசிட் செய்து ஒவ்வொரு மாதமும் நிலையான வட்டி வடிவில் வழக்கமான வருமானத்தைப் பெறக்கூடிய ஒரு தளத்தை வழங்குவதாகும்.
- இந்தத் திட்டம் முதியவர்கள், இல்லத்தரசிகள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ரிஸ்க் எடுக்காமல் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- இந்த திட்டத்தில் முதலீட்டு வரம்பு மற்றும் வட்டி விகிதம் முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுகிறது.
POMIS: வட்டி விகிதம் எவ்வளவு?
- ஜூலை-செப்டம்பர் 2025 காலாண்டில், அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் (POMIS) ஆண்டுக்கு சுமார் 7.40% வட்டி விகிதம் கிடைக்கிறது.
- இது ஒவ்வொரு மாதமும் முதலீட்டாளரின் கணக்கிற்கு மாற்றப்படும்.
- இதன் சிறப்பு என்னவென்றால், இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒரு கூட்டுக் கணக்கைத் திறந்து அதிகபட்சமாக ரூ.18 லட்சம் டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தைப் பெறலாம்.
அதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்:
முதலீட்டுத் தொகை: ₹18,00,000
வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7.4%
ஆண்டு வட்டி: ₹18,00,000 × 7.4% = ₹1,33,200
மாதாந்திர வருமானம்: ₹1,33,200 ÷ 12 = ₹11,100
அதாவது, நீங்கள் தபால் அலுவலக POMIS திட்டத்தில் கூட்டுக் கணக்கைத் திறந்து ₹18 லட்சம் முதலீடு செய்தால், அரசாங்கப் பாதுகாப்புடன், எந்த ஆபத்தும் இல்லாமல், ஒவ்வொரு மாதமும் ₹11,100 உத்தரவாத வருமானத்தைப் பெறலாம்.
POMIS திட்டத்தின் முதலீட்டு விவரங்கள் என்ன?
- அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இந்தியர்கள் அனைவரும் முதலீடு செய்யலாம்.
- இந்தத் திட்டம் குழந்தைகளுக்கும் கிடைக்கிறது.
- ஆனால் அவர்களின் கணக்குகள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களால் நிர்வகிக்கப்படுகின்றன.
- இந்தத் திட்டத்தில் ஒரு தனி கணக்கிற்கான அதிகபட்ச முதலீட்டு வரம்பு ₹ 9 லட்சம்.
- அதே சமயம் கூட்டுக் கணக்கில் ₹ 15 லட்சம் முதல் ₹ 18 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
- இது தவிர, இதில் குறைந்தபட்ச முதலீடு ₹ 1,000 ஆகும்.
- முதலீட்டாளர்கள் இதில் ₹ 100 இன் மடங்குகளில் தொகையை டெபாசிட் செய்யலாம்.
POMIS திட்டத்தில் கணக்கை எவ்வாறு திறப்பது
- அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் முதலீடு செய்ய, முதலில் அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.
- முதலீட்டாளர் ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை அதனுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
- கணக்கை தனியாகவோ அல்லது கூட்டாகவோ திறக்கலாம்.
- முதலீட்டுத் தொகையை ரொக்கம், காசோலை அல்லது ஆன்லைன் பரிமாற்றம் மூலம் டெபாசிட் செய்யலாம்.
- ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தை விரும்புவோருக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
(குறிப்பு: இந்தக் கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எந்த வகையிலும் முதலீட்டு ஆலோசனையாகக் கருதக்கூடாது. முதலீடு செய்யும் முன் நிதி ஆலோசகர்களை அணுகி ஆலோசனை பெற அறிவுறுத்தப்படுகின்றது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ