)
Post Office RD Savings Scheme: இன்றைய காலத்தில் சேமிப்பு என்பது பிரதானமாக உள்ளது. என்னதான் மாத மாதம் வருமானம் வந்தாலும், அவற்றை சரியான இடத்தில் முதலீடு செய்வது பிற்காலத்தில் பெரிதும் உதவும். இதற்காக பலரும் பாதுகாப்பான முதலீடு திட்டங்களை தேடி வருகின்றனர். அவர்களுக்காக மத்திய அரசு சூப்பரான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதாவது, அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் சாமானிய மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
இதில் ஒன்று தான், தபால் அலுவலக RD திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் எந்தவொரு தனிநபரும் ஒற்றை அல்லது கூட்டுக் கணக்கைத் திறக்கலாம். குழந்தைகளின் பெயரிலும் கணக்கை திறக்கலாம். இந்தத் திட்டம், மொத்தத் தொகை இல்லாமல், நிலையான மாதாந்திர சேமிப்பைச் செய்ய விரும்புவோருக்கு ஏற்றது. இந்த திட்டத்திற்கு அரசு உத்தரவாதம் அளிக்கிறது. எந்த ஆபத்தும் கிடையாது. கணவன் மனைவி இருவரும் இந்த திட்டத்தின் கீழ் கணக்கு திறந்து, குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் டெபாசிட் செய்யலாம். தற்போது இந்த திட்டத்திற்கு 6.7 சதவித வட்டி வழங்கப்படுகிறது. 18 வயதை நிரம்பியவர்கள் கணக்கை தொடங்கி, பணத்தை முதலீடு செய்யலாம். ரூ.100 முதல் அதிகபட்சம் எவ்வளவு தொகை என்றாலும் சேமிக்க முடியும்.
தபால் நிலைய ஆர்டி திட்டத்தில் உதாரணமாக மாதந்தோறும் ரூ.30,000 முதலீடு செய்து வந்தால், 6.7% வட்டியில் மொத்த முதலீடு ஐந்து ஆண்டுகளில் ரூ.3,43,091 ஆக வளரும். முதிர்ச்சியில், மொத்த தொகை ரூ.2,143,091 ஆக இருக்கும். இந்த திட்டத்தில் கீழ் 5 ஆண்டுகள் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்து வர வேண்டும். இந்த ஆர்டி திட்டத்தில் மற்றொரு சூப்பரான அம்சம் என்னவென்றால், நீங்கள் கடன் பெற முடியும்.
நீங்கள் முதலீடு செய்து வரும்போது, 3 ஆண்டுகளுக்கு பிறகு, பணம் தேவைப்பட்டால் ஆர்டி தொகை மீது உங்களால் கடன் வாங்க முடியும். உங்களது கணக்கில் இருந்து 50 சதவீத தொகையை கடனாக பெறலாம். இதனை மாத தவணையாகவோ அல்லது ஆண்டு தவணையாக செலுத்த வேண்டும். ஒருவேளை உங்களால் கடனுக்கான தவணை செலுத்த முடியாவிட்டால், உங்களது முதிர்வு தொகையில் இருந்து பணம் கழித்து கொள்ளப்படும்.
உங்களுக்கு மாத வருமானமே ரூ.30,000 இருந்தால், நீங்கள் சிறிய தொகையை கூட டெபாசிட் செய்யலாம். அதாவது, உதாரணமாக ரூ.5,000 செலுத்துகிறீர்கள் என்றால் 5 ஆண்டுகளில் உங்களுக்கு ரூ.3,56,830 கிடைக்கும். இதில் வட்டியாக மட்டும் ரூ.56000 கிடைக்கும். நீங்கள் ரூ.3,000 செலுத்தினால் 5 ஆண்டுகளில் வட்டி தொகையுடன் ரூ.2.14 லட்சம் கிடைக்கும்.
நீங்கள் தபால் அலுவலக RD திட்டத்தின் கீழ் ஒரு கணக்கைத் திறக்க விரும்பினால், அருகிலுள்ள தபால் நிலையத்தில் எளிதாகச் செய்யலாம். இதைச் செய்ய, அருகிலுள்ள தபால் அலுவலகம் அல்லது வங்கிக்குச் சென்று திட்டப் படிவத்தை நிரப்பவும். தேவைப்படும். இதனை சமர்ப்பித்து உங்களுக்கான தபால் நிலைய ஆர்டி கணக்கை திறக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் கணக்கு திறக்கப்பட்டவுடன், உங்களுக்கான நிலையான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். இதற்கு பிறகு, அடுத்தடுத்த மாதங்களில் சரியாக, உங்களது தொகை செலுத்த வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ