)
Post Office RD: இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், எதிர்காலத்திற்காக பணத்தைச் சேமிப்பது அவசியமாகிவிட்டது. குழந்தைகளின் கல்வி, வீடு கட்டுதல், திருமணச் செலவுகள், ஓய்வூதியத் திட்டங்கள் என ஒரு மனிதனுக்கு பல தேவைகள் இருக்கின்றன. இவை அனைத்திற்கும் பணம் தேவைப்படுகிறது.
சிலர் ஆபத்துகள் நிறைந்த பங்குச்சந்தை போன்ற இடங்களில் பணத்தை முதலீடு செய்து லாபம் காண விரும்புகிறார்கள். ஆனால் சிலரோ தங்கள் சேமிப்பை எந்த ஆபத்தும் இல்லாத இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட திட்டங்களில் பாதுகாப்பான வழியில் நல்ல வருமானம் ஈட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த ஆபத்து மற்றும் அரசாங்க உத்தரவாதம் உள்ள திட்டங்களைத் தேடும் முதலீடாளர்களுக்கு தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகை திட்டம் ஒரு சிறந்த திட்டமாக இருக்கும். இந்தத் திட்டத்தில், நீங்கள் ஐந்து ஆண்டுகளில் ரூ.7 லட்சம் வரை சேமிக்கலாம்.
- தபால் அலுவலக RD திட்டம் என்பது ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்யும் ஒரு சேமிப்புத் திட்டமாகும்.
- இந்தத் திட்டம் அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது.
- ஆகையால், இது முற்றிலும் பாதுகாப்பானது.
- இது ஒரு நம்பகமான திட்டமாகவும் பார்க்கப்படுகின்றது.
- ஒவ்வொரு காலாண்டிலும் (மூன்று மாதங்களுக்கு ஒரு முறை) வட்டி கூட்டுச் சேர்க்கப்படுகிறது.
- இது உங்கள் பணத்தை விரைவாக வளரச் செய்கிறது.
- இதில் சிறந்த விஷயம் என்னவென்றால், இந்தத் திட்டத்தை முதலீட்டாளர்கள் மாதத்திற்கு வெறும் ரூ.100 உடன் தொடங்கலாம்.
- ஆனால் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 டெபாசிட் செய்தால், வாடிக்கையாளர்கள் ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ரூ.7,13,659 பெறலாம்.
- இதில், உங்கள் மொத்த வைப்புத் தொகை ரூ.6 லட்சமாக இருக்கும்.
- மேலும் வட்டி வடிவில் ரூ.1,13,659 நன்மை கிடைக்கும்.
- இந்தத் திட்டம் ஆரம்பகட்ட கால அளவு ஐந்து ஆண்டுகளாகும்.
- ஆனால் முதலீட்டாளர் விரும்பினால், அதை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.
- அதாவது, மொத்தம் 10 ஆண்டுகளுக்கு இதில் முதலீடு செய்து முதலீட்டாளர்கள் ஒரு பெரிய நிதியை உருவாக்க முடியும்.
- தற்போது, ஜூலை முதல் செப்டம்பர் 2025 வரையிலான காலாண்டிற்கு, தபால் அலுவலக RD திட்டத்தில் 6.7% வருடாந்திர வட்டி கிடைக்கிறது.
- இந்த வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் கூட்டு சேர்க்கப்படுகிறது.
- இது உங்கள் சேமிப்பை விரைவாக அதிகரிக்கிறது.
- இந்த வட்டி விகிதம் அரசாங்கத்தால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால், உங்களுக்கு திடீரென்று பணம் தேவைப்பட்டால், ஒரு வருடத்திற்குப் பிறகு உங்கள் டெபாசிட் தொகையில் 50% வரை கடன் பெறலாம். இருப்பினும், இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் RD -யின் வட்டி விகிதத்தை விட 2% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை தகவலுக்காக மட்டுமே எழுதப்படுள்ளது. இது எந்த வகையிலும் முதலீட்டு ஆலோசனையாகக் கருதப்படக்கூடாது. முதலீட்டு முடிவுகளை எடுக்க உங்கள் நிதி ஆலோசகர்களை அணுக பரிந்துரைக்கப்படிகின்றது).
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ