PPF: ஆயிரங்களில் முதலீடு... லட்சங்களில் வட்டி... 20 ஆண்டுகளில் ரூ.58 லட்சம் கார்பஸ்

PPF என்னும் பொது வருங்கால வைப்பு நிதியில் மாதந்தோறும் ரூ.3,000 முதல் ரூ.11,000 வரை முதலீடு செய்வதன் மூலம் 20 ஆண்டுகளில் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 22, 2025, 04:48 PM IST
  • தபால் அலுவலகம் அல்லது வங்கியில் PPF கணக்கைத் திறக்கலாம்
  • PPF கணக்கிலிருந்து பணம் எடுப்பது தொடர்பான விதிகள்
  • மாதம் ரூ.3,000 முதலீட்டில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் கார்பஸ்.
PPF: ஆயிரங்களில் முதலீடு... லட்சங்களில் வட்டி... 20 ஆண்டுகளில் ரூ.58 லட்சம் கார்பஸ்

முதலீட்டாளர்கள் அதிகம் இலாபம் தரும் முதலீட்டையே அதிகம் விரும்புவார்கள். 15 முதல் 20 ஆண்டுகள் போன்ற குறுகிய காலத்தில் கணிசமான தொகையை சம்பாதிக்க உதவும் முதலீடுகள் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும். கூடுதலாக, வரிச் சலுகைகளுடன், உறுதியான வருமானமும் கிடைத்தால், அது மிக சிறந்த முதலீடாக கருதப்படும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்த வகையில், தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி இதற்கான சிறந்த தேர்வாக இருக்கும்

Add Zee News as a Preferred Source

PPF என்னும் பொது வருங்கால வைப்பு நிதியில் மாதந்தோறும் ரூ.3,000 முதல் ரூ.11,000 வரை முதலீடு செய்வதன் மூலம் 20 ஆண்டுகளில் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி என்றால் என்ன?

தபால் அலுவலகத்தில் உள்ள பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது நீண்ட காலத்திற்கு பணத்தைச் சேமிக்க உதவும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்த திட்டத்திற்கு வரிச் சலுகைகள் கிடைக்கிறது. அதோடு உத்தரவாத வருமானம் கிடைப்பதால், உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

PPF கணக்கைத் திறப்பதற்கான விதிமுறைகள்

1. வேலை செய்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள் அல்லது ஓய்வூதியம் பெறுபவர்கள் உட்பட எந்தவொரு நபரும் PPF கணக்கைத் திறக்கலாம்.

2. ஒரு மைனர் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது PPF கணக்கைத் திறக்க முடியும்.

3. நாடு முழுவதும் தபால் அலுவலகம் அல்லது வங்கியின் மூலம் PPF கணக்கை தொடங்கலாம்.

PPF கணக்கில் முதலீடு செய்யப்படும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வைப்புத் தொகை அளவு

ஒரு நிதியாண்டில் தேவைப்படும் குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.500, அதே நேரத்தில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வைப்புத்தொகை ரூ.1.50 லட்சம்.

PPF கணக்கை எங்கு திறப்பது?

நீங்கள் ஒரு தபால் அலுவலகம் அல்லது வங்கியில் PPF கணக்கைத் திறக்கலாம். இரண்டில் எதில் தொடங்கினாலும், ஒரே மாதிரியான விதிகள் மற்றும் சலுகைகள் தான். எனவே உங்களுக்கு ஏற்ற ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.

PPF கணக்கின் முதிர்வு தொடர்பான விதிகள்

கணக்கு திறக்கப்பட்ட நிதியாண்டைத் தவிர்த்து, 15 நிதியாண்டுகளுக்குப் பிறகு கணக்கு முதிர்ச்சியடைகிறது.

PPF முதிர்வுக்குப் பிறகு என்ன செய்வது?

உங்கள் PPF கணக்கு முதிர்ச்சியடையும் போது, ​​உங்களுக்கு சில விருப்பங்கள் உள்ளன:

1. முதிர்வுத் தொகையை எடுத்துக் கொள்ளலாம்: கணக்கு மூடல் படிவத்தை நிரப்பி, அதை உங்கள் பாஸ்புக்குடன் சமர்ப்பித்து, உங்கள் பணத்தைப் பெறலாம்.

2. பணத்தை கணக்கில் வைத்திருக்கலாம்: நீங்கள் முதிர்வுத் தொகையை கணக்கில் தொடர்ந்து வட்டியைப் பெறலாம். அதோடு, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுக்கலாம் அல்லது வருடத்திற்கு ஒரு முறை பணம் எடுக்கலாம்.

3. கணக்கை நீட்டிக்கலாம்: முதிர்ச்சியடைந்த ஒரு வருடத்திற்குள், அஞ்சல் அலுவலகத்தில் நீட்டிப்பு படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் PPF கணக்கை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.

PPF கணக்கிலிருந்து பணம் எடுப்பது தொடர்பான விதிகள் 

கணக்கு திறக்கப்பட்ட ஆண்டைத் தவிர்த்து, கணக்கு திறக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தான் நீங்கள் ஒரு நிதியாண்டிற்கு ஒரு முறை பணம் எடுக்க முடியும். அனுமதிக்கப்பட்ட பணம் எடுக்கும் தொகை, நான்காவது முந்தைய ஆண்டின் இறுதியில் அல்லது முந்தைய ஆண்டின் இறுதியில் கணக்கில் வரவு வைக்கப்படும் இருப்பில் 50 சதவீதம் வரை. இதில் எது குறைவாக உள்ளதோ அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

தபால் அலுவலக PPF கணக்கீடு

முதலீட்டுத் தொகை: ரூ.3,000, ரூ.7,000, ரூ.11,000 என்ற அளவிலான முதலீட்டில், 20 ஆண்டுகளுக்கு பின்  எவ்வளவு கிடைக்கும் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஆண்டு வருமான விகிதம்: 7.1 சதவீதம்
முதலீட்டு காலம்: 20 ஆண்டுகள்

மாதம் ரூ.3,000 முதலீட்டில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் கார்பஸ் 

ஆண்டு முதலீடு ரூ.36,000 (3,000x12) என்ற அளவில் இருக்கும். 20 ஆண்டுகளில் உங்கள் மொத்த முதலீட்டுத் தொகை ரூ.7,20,000. இந்தக் காலகட்டத்தில் ஈட்டப்படும் மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.8,77,989 ஆகவும், மதிப்பிடப்பட்ட முதிர்வுத் தொகை ரூ.15,97,989 ஆகவும் இருக்கும்.

மாதம் ரூ.7,000 முதலீட்டில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் கார்பஸ் 

ஆண்டு முதலீடு ரூ.84,000 (7,000x12) என்ற அளவில் இருக்கும். 20 ஆண்டுகளில் உங்கள் மொத்த முதலீட்டுத் தொகை ரூ.16,80,000 ஆக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் ஈட்டப்படும் மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.20,48,641 ஆகவும், முதிர்வுத் தொகை ரூ.37,28,641 ஆகவும் இருக்கும்.

மாதத்திற்கு ரூ.11,000 முதலீட்டில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் கார்பஸ்

ஆண்டு முதலீடு ரூ.1,32,000 (11,000x12) என்ற அளவில் இருக்கும். 20 ஆண்டுகளில் உங்கள் மொத்த முதலீட்டுத் தொகை ரூ.26,40,000 ஆக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் ஈட்டப்படும் மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.32,19,294 ஆகவும், முதிர்வுத் தொகை ரூ.58,59,294 ஆகவும் இருக்கும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: HRA எவ்வளவு அதிகரிக்கும்? 7வது ஊதியக்குழுவில் எவ்வளவு அதிகரித்தது?

மேலும் படிக்க | ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம். PFRDA வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை.. முழு விபரம் இதோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News