பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஓய்வூதிய நிதியை சேர்ப்பதற்கும் பென்ஷன் வருமானத்திற்கு திட்டமிடவும் உதவும் சிறந்த முதலீடு. மத்திய அரசின் இந்த திட்டம் சந்தையுடன் இணைக்கப்படாத, நிலையான வட்டி விகிதம் கொண்ட சிறு சேமிப்புத் திட்டமாகும். முதலீட்டாளர்கள் தங்கள் ஓய்வூதிய நிதியை ஒருங்கிணைக்க சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீட்டு விருப்பங்களுடன் இணைந்து இதைப் பயன்படுத்தலாம்.
ரூ.1 கோடிக்கு மேல் வரி இல்லாத ஓய்வூதிய நிதி
நீண்ட கால முதலீடாக செய்யப்படும், PPF முதலீடு வருமான வரி இல்லாத வருமானத்தை கொடுக்கிறது. அது மட்டுமல்லாமல், வரி இல்லாத வாழ்நாள் பென்ஷன் வருமானத்தையும் ஈட்டுவதற்கான வாய்ப்பையும் கொடுக்கிறது. PPF திட்டத்தின் நீண்ட காலத்திற்கு ரூ.1,50,000 ஆண்டு முதலீடு செய்வது, ரூ.1 கோடிக்கு மேல் வரி இல்லாத ஓய்வூதிய நிதியையும், கிட்டத்தட்ட ரூ.43,000 வாழ்நாள் மாத வருமானத்தையும் ஈட்ட உதவும். அது எப்படி சாத்தியமாகும் என்பதை இந்த கட்டுரையில் எளிய கணக்கீடுகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஓய்வூதியத் திட்டமிடலுக்கான PPF முதலீடு
PPF என்னும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஆண்டுதோறும் 7.1 சதவீத வட்டி கிடைக்கிறது. இது கூட்டு வட்டி என்பதால், பணம் எளிதில் பன்மடங்காகிறது. PPF கணக்கை தபால் அலுவலகம் அல்லது வங்கியில் திறக்கலாம். ஒரு நிதியாண்டில் ஒருவர் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை தங்கள் PPF கணக்கில் டெபாசிட் செய்யலாம்.
PPF திட்டத்தில் அதிகபட்ச நன்மையை பெற செய்ய வேண்டியவை
ஏப்ரல் 1 முதல் 5 வரை PPF திட்டத்தில் டெபாசிட் செய்தால், PPF முதலீட்டில் 7.1 சதவீத வட்டி விகிதத்தின் அதிகபட்ச நன்மையைப் பெறலாம். வட்டி ஒவ்வொரு நிதியாண்டின் மார்ச் 31ம் தேதி அன்று வரவு வைக்கப்படும்.
PPF திட்டத்திற்கான வரி விலக்கு
PPF முதலீட்டுத் திட்டம் EEE (விலக்கு-விலக்கு-விலக்கு) பிரிவின் கீழ் வருகிறது. அதாவது, பொது வருங்கால வைப்பு நிதியில் செய்யப்படும் முதலீடு, அதற்குக் கிடைக்கும் வட்டி வருமானம் மற்றும் முதிர்வுத் தொகை ஆகிய அனைத்திற்கும் வரிச் சலுகை கிடைக்கும்.
PPF முதிர்வு காலம்
PPF திட்டம் 15 ஆண்டுகள் முதிர்வு காலத்தைக் கொண்டுள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு, கணக்கு வைத்திருப்பவர் தொகையை எடுக்கலாம் அல்லது முதலீட்டுடன் அல்லது இல்லாமல் மேலும் 5 ஆண்டுகள் - 5 ஆண்டுகள் என கணக்கை நீட்டிக்கலாம்.
நீட்டிக்கப்பட்ட காலத்தில் PPF பணத்தை திரும்பப் பெறும் விதி
நீட்டிப்பு காலத்தில், ஒரு கணக்கு வைத்திருப்பவர் ஒவ்வொரு நிதியாண்டிலும் 1 முறை பணம் எடுக்கலாம். இது 5 வருட கால முதிர்வு நேரத்தில் இருப்பில் உள்ள பணத்தில் அதிகபட்சமாக 60 சதவீதம் எடுக்கலாம்.
PPF மூலம் வரி இல்லாத கார்பஸ், வாழ்நாள் முழுவதும் மாத வருமானம் பெறுவது எப்படி
PPF கணக்கில் தொடர்ந்து 31 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். அந்தக் காலத்திற்குப் பிறகு அவர்கள் தங்கள் கார்பஸில் 60 சதவீதத்தை திரும்பப் பெறலாம், மீதமுள்ள தொகையை அடுத்த நிதியாண்டிலிருந்து மாதந்தோறும் கிட்டத்தட்ட ரூ.43,000 வருமானமாக பெறலாம்.
ரூ.43,000 மாத வருமானமாக பெறுவது எப்படி?
31 ஆண்டுகளில் PPF திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்யும் போது, மொத்த முதலீடு ரூ.46,50,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.1,20,58,575 ஆகவும், மதிப்பிடப்பட்ட முதிர்வு ரூ.1,67,08,575 ஆகவும் இருக்கும். 31 ஆண்டுகளுக்குப் பிறகு, ரூ.1,67,08,575 கார்பஸிலிருந்து 60 சதவீதம் திரும்பப் பெற்றால் ரூ.1,00,25,145 ஆக இருக்கும். இந்தத் தொகை வரி விலக்கு அளிக்கப்படும். சுமார் ரூ.1 கோடி திரும்பப் பெற்ற பிறகு, மீதமுள்ள தொகை ரூ.66,83,430 ஆக இருக்கும். மீதமுள்ள கார்பஸில் 7.1 சதவீதம் வட்டி வருமானம் மூலம் ரூ.43,000 தொகையை மாத வருமானமாக பெறலாம்.
வாழ்நாள் முழுவதும் ரூ.42,649 மாதாந்திர வருமானம் பெற உதவும் கணக்கீடு
பிபிஎஃப் கணக்கில் மீதமுள்ள ரூ.66,83,430 கார்பஸில் ஈட்டப்படும் வட்டி ரூ.4,74,523.53 ஆக இருக்கும். எனவே, ஒரு வருடத்திற்குப் பிறகு கார்பஸ் ரூ.71,57,954 ஆக இருக்கும். இந்தத் தொகையை மாதாந்திர வருமானம் ஈட்டப் பயன்படுத்தலாம். இந்த கட்டத்தில் இருந்து, கார்பஸிலிருந்து வட்டித் தொகையை மட்டும் திரும்பப் பெற திட்டமிடலாம். 7.1 சதவீத வட்டி விகிதத்தில், கிடைக்கும் ஒரு வருட வட்டி வருமானம் ரூ.5,11,794 ஆக இருக்கும். மாதாந்திர அடிப்படையில், இந்த தொகை ரூ.42,649 ஆக இருக்கும். இதன் மூலம் உங்களுக்கு தோராயமாக ரூ. 43,000 மாத பென்ஷன் போன்ற வருமானம் கிடைக்கும்.
மேலும் படிக்க | ஆயிரங்களை கோடிகளாக்குவது எளிது தான்... உங்களுக்கு கை கொடுக்கும் 7 ஃபார்முலாக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









