)
பணத்தை பாதுகாப்பான மற்றும் நல்ல வருமானம் தரும் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு PPF சிறந்த தேர்வாக இருக்கும். நீங்கள் கடினமாக சம்பாதித்த பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், அதில் நல்ல வட்டியைப் பெற வேண்டும் என்பதோடு, பென்ஷன் போன்ற வழக்கமான் வருமானத்தை பெற வேண்டும் என நினைப்பவர்களுக்கு, பொது வருங்கால வைப்பு நிதி (PPF) கை கொடுக்கும் . PPF என்பது அரசாங்க உத்தரவாதத் திட்டமாகும், இதில் நீங்கள் ரூ.500 என்ற அளவில் கூட முதலீடு செய்யத் தொடங்கலாம். இதில் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
வாழ்நாள் முழுவதும் பென்ஷன் போன்ற வருமானம்
PPF திட்டத்தில் 15 ஆண்டு கால தொடர் முதலீட்டிற்கு பிறகு, ஒரு புதிய பைசா கூட முதலீடு செய்யாமல் ஆண்டுக்கு ரூ. 2.88 லட்சம் வரை வட்டி சம்பாதிக்க ஒரு வழி உள்ளது. அதாவது மாதம் ரூ.24,000 என்ற அளவில் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் ஆனால் ஒரே நிபந்தனை என்னவென்றால், நீங்கள் 15 ஆண்டுகளாக தொடர்ந்து முதலீடு செய்திருக்க வேண்டும்.
சுமார் 7.1% என்ற விகிதத்தில் கூட்டு வட்டி
நீங்கள் PPF இல் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.5 லட்சம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், மொத்தம் ரூ.22.5 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். இதில், நீங்கள் ஆண்டுக்கு சுமார் 7.1% என்ற விகிதத்தில் சுமார் ரூ. 18.18 லட்சம் வட்டி பெறலாம். அதன்படி உங்கள் நிதி முதிர்ச்சியில் உங்கள் முதலீடு ரூ.40.68 லட்சமாக வளரலாம். இந்த நிதியை புதிய முதலீடு ஏதும் செய்யாமல், PPF திட்டத்தில் தொடர முடியும். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ரூ. 2.88 லட்சம் வரை வட்டி கிடைக்கும். அதாவது, ஒரு முறை முதலீடு செய்வதன் மூலம், எதிர்காலத்தில் நீங்கள் ஆண்டுதோறும் மாதம் ரூ.24,000 என்ற அளவில் வரியில்லாத வருமானம் பெறலாம். அதாவது இதற்கு முற்றிலும் வரி விலக்கு உண்டு.
முதலீடுகள் எதுவும் இல்லாமல் கணக்கை நீட்டிக்கலாம்
முதலீட்டாளர் 15 ஆண்டுகள் இடைவிடாமல் PPF திட்டத்தில் முதலீடு செய்து, முதிர்ச்சியடைந்திருந்தால், நீங்கள் உடனடியாக பணத்தை எடுக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையில், புதிய முதலீடுகள் எதுவும் இல்லாமல் கணக்கை நீட்டிக்கலாம். இது " PPF Extension Without Contribution" என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் பணத்தை எடுக்கவில்லை என்றால், PPF கணக்கு நீட்டிப்புக்கு எந்த விண்ணப்பமும் தேவையில்லை. இந்த வசதி தானாகவே தொடங்கும். நல்ல விஷயம் என்னவென்றால், இந்த நீட்டிக்கப்பட்ட காலகட்டத்தில், டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு ஒவ்வொரு ஆண்டும் வட்டி சேர்க்கப்படுகிறது.
மாதம் ரூ.24,000 என்ற அளவில் வரியில்லாத வருமானம்
ஒரு முதலீட்டாளர் PPF கணக்கை 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.5 லட்சத்தை டெபாசிட் செய்தால், முதிர்ச்சியின் போது சுமார் ரூ.40.68 லட்சத்திற்கான நிதியை உருவாக்க முடியும். எனவே இப்போது இந்த நிதியை PPF கணக்கில் தொடர அனுமதிப்பதன் மூலம் 7.1% வட்டியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.2.88 லட்சம் வட்டியைப் பெறலாம். அதாவது மாதம் ரூ.24,000 என்ற அளவில் வரியில்லாத வருமானம் பெறலாம். பணம் PPF கணக்கில் இருக்கும் வரை, அதில் வட்டியைப் பெறலாம். முதலீடு இல்லாமல் கூட நீண்ட காலத்திற்கு சிறந்த வருமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை இந்தத் திட்டம் வழங்குவதற்கான காரணம் இதுதான்.
வாழ் நாள் முழுவதும் வரி இல்லாத வருமானம்
PPF கணக்கை முதிர்வுக்குப் பிறகு முதலீடு இல்லாமல் மட்டுமல்ல, முதலீட்டுடனும் நீட்டிக்க முடியும். இருப்பினும், கணக்கு முதிர்ச்சியடைந்த ஒரு வருடத்திற்குள் முதலீட்டாளர்கள் ஒரு படிவத்தின் மூலம் நீட்டிப்பைக் கோருவது அவசியம். பங்களிப்புடன் நீட்டிப்பை நீங்கள் தேர்வுசெய்யும்போது, PPF கணக்கு நேரடியாக 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இந்த வசதியை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பெறலாம் - ஒவ்வொரு முறையும் 5 ஆண்டுகள் தொகுதிகளாகஎன நீட்டித்து, வாழ் நாள் முழுவதும் வரி இல்லாத வருமானம் பெற சிறந்த வழி.
(குறிப்பு: இந்தக் கட்டுரை தகவலுக்காக மட்டுமே, எந்த வகையிலும் முதலீட்டு ஆலோசனையாகக் கருதப்படக்கூடாது, முதலீட்டிற்கான நிதி ஆலோசகர்களை அணுக பரிந்துரைக்கவும்)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ