நாம் பாடுபட்டு சேர்த்த பணத்தை அதிக லாபம் கிடைக்கும் இடத்தில் பணத்தை முதலீடு செய்யவே விரும்புவோம். அதோடு பணம் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், அதற்கு பொது வருங்கால வைப்பு நிதி (PPF) சிறந்த தேர்வாக இருக்கும். மேலும் வருமான வரி விலக்கிற்கு உட்பட்டது என்பதால், வரியையும் சேமிக்கலாம். நீண்ட கால முதலீட்டில் நல்ல வருமானம் பெற விரும்பினால், PPF திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.
பிபிஎஃப் ஏன் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது?
பொது வருங்கால வைப்பு நிதி அதிகம் விரும்பப்படுவதற்கான காரணம், அதில் டெபாசிட் செய்யப்படும் பணம், பெறப்பட்ட வட்டி மற்றும் முதிர்வு காலத்தில் பெறப்பட்ட தொகை அனைத்திற்கும் முற்றிலும் வரி விலக்கு உண்டு. அதாவது இது EEE பிரிவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டெபாசிட்களுக்கு வரி விலக்கு கோரலாம். ஒவ்வொரு ஆண்டும் பெறும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. கணக்கு முதிர்ச்சியடைந்தவுடன் கிடைக்கும், முழுத் தொகைக்கும் வரி விலக்கு அளிக்கப்படும்.
PPF திட்டத்தில் யார் முதலீடு செய்யலாம்?
நாட்டின் எந்தவொரு குடிமகனும் PPF என்னும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதை தபால் அலுவலகம் அல்லது எந்த வங்கியிலும் திறக்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம். வட்டி ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இருப்பினும், வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது PPF முதலீடுகளுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. முதிர்வு காலம் 15 ஆண்டுகள். திட்டத்தில் கூட்டுக் கணக்கு தொடங்க வசதி இல்லை.
PPF முதலீட்டின் மூலம் கோடீஸ்வரர் ஆவது எப்படி?
கோடீஸ்வரர் ஆக PPF கணக்கில் தொடர் முதலீடு தேவை. உங்கள் 25 வயதில் PPF கணக்கை தொடங்கியுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நிதியாண்டின் தொடக்கத்தில் 1 முதல் 5ம் தேதி வரை கணக்கில் ரூ.1,50,000 (அதிகபட்ச வரம்பு) டெபாசிட் செய்தால், அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தில் வட்டியாக மட்டும் ரூ.10,650 டெபாசிட் செய்யப்படும். அதாவது, அடுத்த நிதியாண்டின் முதல் நாளில் உங்கள் இருப்பு ரூ.1,60,650 ஆக இருக்கும். அடுத்த ஆண்டும் இதையே தொடர்ந்தால், கணக்கு இருப்பு ரூ.3,10,650 ஆக இருக்கும். 15 வருட பிபிஎஃப் முதலீட்டை இவ்வாறு தொடரும் நிலையில், உங்கள் கணக்கில் ரூ.40,68,209 இருக்கும். இவற்றில் மொத்த டெபாசிட் தொகை ரூ.22,50,000 என்ற அளவில் இருக்கும். வட்டி ரூ.18,18,209 என்ற அளவில் கிடைக்கும்.
15 வருட முதிர்ச்சியின் போது கிடைக்கும் தொகை
PPF 25 வயதில் தொடங்கப்பட்ட நிலையில், 40 வயதில், 15 வருட முதிர்ச்சியின் போது 40 லட்சத்திற்கும் அதிகமான தொகை கையில் இருக்கும். PPF முதலீட்டை முதிர்ச்சியடைந்த பிறகு, கணக்கை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். முதலீட்டாளர் பிபிஎஃப் கணக்கை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், 45 வயதிற்குள் மொத்தத் தொகை ரூ.66,58,288 ஆக இருக்கும். இதில் முதலீடு ரூ.30,00,000 ஆகவும், வட்டி வருமானம் ரூ.36,58,288 ஆகவும் இருக்கும்.
25 வருட முதிர்ச்சியின் போது கிடைக்கும் தொகை
PPF கணக்கை மீண்டும் 5 ஆண்டுகளுக்கு அதாவது 25 ஆண்டுகள் வரை நீட்டிக்க வேண்டும். மீண்டும் நீங்கள் ஆண்டுக்கு ரூ.1,50,000 முதலீடு செய்ய வேண்டும். 50 வயதில் மொத்தம் ரூ.1,03,08,014 பிபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இதில் முதலீடு ரூ.37,50,000 ஆகவும், வட்டி ரூ.65,58,015 ஆகவும் இருக்கும்.
வட்டி வருவாய் ரூ. 1 கோடியைத் தாண்டும்
PPF திட்டத்தின் இரண்டாவது அம்சம் என்னவென்றால், நீங்கள் அதை 5 ஆண்டுகளுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நீட்டிக்கலாம். இப்போது மீண்டும் ஒருமுறை கணக்கை 5 ஆண்டுகள் நீட்டித்தால், 55 வயதில் உங்களிடம் ரூ.1 கோடியே 54 லட்சத்து 50 ஆயிரத்து 910 இருக்கும். இதில் முதலீடு ரூ.45,00,000 மட்டுமே, ஆனால் வட்டி வருமானம் ரூ.1 கோடியைத் தாண்டி மொத்த வருமானம் ரூ.1,09,50,911 ஆக இருக்கும்.
35 ஆண்டுகளில் ரூ. 2.25 கோடி கையில் இருக்கும்
ஓய்வூதிய நிதிக்காக முதலீடு செய்திருந்தால், PPF மீண்டும் ஒருமுறை நீட்டிக்கலாம். அதாவது ஒட்டுமொத்த முதலீடு 35 ஆண்டுகளுக்கு தொடரும். 60 வயதில் இருக்கும். பிபிஎஃப் கணக்கில் உள்ள மொத்த டெபாசிட் தொகை ரூ.2,26,97,857 (ரூ. 2.25 கோடி)ஆக இருக்கும். இதில் மொத்த முதலீடு ரூ.52,50,000 ஆகவும், வட்டி வருமானம் ரூ.1,74, 47,857 (ரூ. 1.74 கோடி)ஆகவும் இருக்கும்.
உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க உதவும் முதலீடு
நீங்கள் 60 வயதில் ஓய்வு பெறும்போது, 2 கோடி ரூபாய்க்கு மேல் PPF கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பெரும் தொகைக்கு வரி ஏதும் இருக்காது. பொதுவாக, இவ்வளவு பெரிய தொகையை வேறு வழிகளில் சம்பாதித்தால், அதற்கு அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும். கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து 35 ஆண்டுகள் பிபிஎஃப் கணக்கை இயக்கினால், இருவரின் மொத்த இருப்பு ரூ.4,53,95,714 (ரூ. 4.5 கோடி) என்ற அளவில் இருக்கும்.
மேலும் படிக்க | பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் வேண்டாம்... மாதம் ₹60,000 வருமானம் கிடைக்க உதவும் PPF
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









