பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானத்திற்கான சிறந்த வழிகளில் ஒன்று, பொது வருங்கால வைப்பு நிதி என்னும் (PPF) திட்டத்தில் செய்யப்படும் முதலீடு என்றால் மிகையில்லை. இதில் முதலீடு செய்வதன் மூலம், ஓய்வுக்குப் பிறகு மாதம்தோறும் ரூ.60,000 வழக்கமான வருமானத்தை பெற இயலும்.
PPF திட்ட முதலீடு
PPF திட்டத்தில் ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 1.5 ரூபாய் முதலீடு செய்யலாம். தற்போது, இந்தத் திட்டத்தில் 7.1% வட்டி கிடைக்கிறது., மேலும் இந்த வட்டி கூட்டுவட்டியின் அடிப்படையில் கிடைப்பதால் வருமானம் அதிகரிக்கிறது. PPF திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும், ஆனால் நீங்கள் அதை 5 ஆண்டுகள் என இரண்டு முறை நீட்டித்து முதலீட்டைத் தொடர வேண்டும். அதாவது, 1.5 லட்ச ரூபாய் முதலீட்டை 25 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும்.
15 ஆண்டுகளில் ரூ.1 கோடி என்ற அளவில் நிதி
தொடர்ந்து 25 வருடங்கள் PPF திட்டத்தில் வருடந்தோறும் 1.5 லட்ச ரூபாய் முதலீடு செய்யும் போது, உங்களின் மொத்த முதலீடு 37,50,000 ரூபாயாக இருக்கும். மேலும் 7.1 சதவிகிதம் வட்டி விகிதத்தில் உங்களுக்கு வட்டி வருமானமாக 65,58,015 ரூபாய் கிடைக்கும். இந்த வழியில், உங்கள் PPF கணக்கில் உள்ள மொத்தத் தொகை ரூ.1,03,08,015 என்ற அளவில் இருக்கும்.
PPF கணக்கில் இருந்து பணத்தை எடுக்காமல் தொடர்ந்தால்...
25 ஆண்டுகளுக்குப் பிறகு, சேர்ந்திருக்கும் பணத்தை கணக்கில் இருந்து எடுக்க வேண்டியதில்லை. உங்கள் PPF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை வட்டியுடன், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முழுமையாக எடுக்கலாம் அல்லது வருடத்திற்கு ஒருமுறை எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மாதம் ரூ.60,000 வருமானம் கிடைக்க செய்ய வேண்டியது என்ன?
PPF முதலீட்டில் சேர்ந்துள்ள ரூ.1,03,08,015 முழுவதையும் எடுக்காமல் வைத்திருந்தால், 7.1% வீதத்தில் ரூ.7,31,869 வட்டியாகப் பெறுவீர்கள். இதில் ஆண்டுதோறும் வட்டித் தொகையை மட்டும் பெறலாம். ரூ.7,31,869 என்ற தொகையை 12 மாதங்களுக்கான வருமானமாக பிரித்தால் ரூ.60,989 வரும். இந்த வழியில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.60,989 வருமானம் பெற ஏற்பாடு செய்யலாம். தவிர, ரூ. 1,03,08,015 நிதியும் குறையாமல் உங்கள் கணக்கில் இருக்கும்.
PPF கணக்கை நீட்டிக்கும் விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவை
PPF கணக்கை 5 ஆண்டுகளுக்குள் பங்களிப்புடன் நீட்டிக்க, கணக்கு பராமரிக்கப்படும் வங்கி அல்லது தபால் அலுவலகத்திற்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். முதிர்வு தேதியிலிருந்து 1 வருடம் முடிவதற்குள் இந்த விண்ணப்பத்தை நீங்கள் கொடுக்க வேண்டும். குறிப்பாக PPF கணக்கில் 25 ஆண்டுகள் பங்களிப்பைத் தொடர இதை மனதில் கொள்ளுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









