PPF முதலீடு: பொது வருங்கால வைப்பு நிதி என்பது மத்திய அரசின் நீண்ட கால முதலீட்டு திட்டமாகும். ஓய்வு காலத்தில் வழக்கமான வருமானத்தை பெற உதவும் சிறந்த திட்டமாகவும் உள்ளது. PPF திட்டத்தில் வங்கி ஆர்டி திட்டம் போல ஒவ்வொரு மாதமும் சிறிது தொகையை சேமித்து முதலீடு செய்யலாம். இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் மிகச் சிறிய தொகையை டெபாசிட் செய்து எதிர்காலத்திற்காக லட்சங்களில் பணம் சேர்க்கலாம்.
PPF (பொது வருங்கால வைப்பு நிதி) திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்வது என்பது உங்கள் வசதி, விருப்பம் மற்றும் திறனைப் பொறுத்தது. எனினும், ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1,50,000 டெபாசிட் செய்யலாம். தற்போது, PPF கணக்கிற்கு 7.1 சதவீத ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். இதில் மாதந்தோறும் ரூ.3,000, ரூ.5,000 அல்லது ரூ.10,000 முதலீடு செய்தால், முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
PPF கால்குலேட்டர்: மாதாந்திர முதலீடு ரூ.3,000
PPF திட்டத்தில் மாதாந்திர முதலீடு: ரூ.3,000
ஒரு வருடத்தில் கணக்கில் செய்யப்படும் முதலீடு: ரூ.36,000
PPF வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7.1%
15 ஆண்டுகளில் செய்யப்படும் மொத்த வைப்புத் தொகை: ரூ.5,40,000
15 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த நிதி: ரூ.9,76,370
முதலீட்டிற்கான வட்டி வருமானம்: ரூ.4,36,370
முதிர்வு வரை அதாவது 15 ஆண்டுகளுக்கு PPF திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 டெபாசிட் செய்தால், தற்போதைய வட்டி விகிதத்தின்படி, ரூ.9,76,370 என்ற அளவில் நிதியை திரட்டலாம்.
PPF கால்குலேட்டர்: மாதாந்திர முதலீடு ரூ.5,000
PPF திட்ட மாதாந்திர முதலீடு: ரூ.5,000
ஒரு வருடத்தில் கணக்கில் செய்யப்படும் முதலீடு: ரூ.60,000
PPF வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7.1%
15 ஆண்டுகளில் செய்யப்பட்ட மொத்த வைப்புத் தொகை: ரூ.9,00,000
15 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் மொத்த நிதி: ரூ.16,27,284
முதலீட்டில் கிடைக்கும் வட்டி வருமானம்: ரூ.7,27,284
முதிர்வு வரை அதாவது 15 ஆண்டுகளுக்கு PPF திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 டெபாசிட் செய்தால், தற்போதைய வட்டி விகிதத்தின்படி, ரூ.16,27,284 என்ற அளவில் நிதியை திரட்டலாம்..
PPF கால்குலேட்டர்: மாதாந்திர முதலீடு ரூ.10,000
PPF திட்ட மாதாந்திர முதலீடு: ரூ.10,000
ஒரு வருடத்தில் கணக்கில் செய்யப்பட்ட மொத்த முதலீடு: ரூ.1,20,000
PPF வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7.1%
15 ஆண்டுகளில் செய்யப்பட்ட மொத்த வைப்புத்தொகை: ரூ.18,00,000
15 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் மொத்த நிதி: ரூ.32,54,567
முதலீட்டில் கிடைக்கும் வட்டி வருமானம்: ரூ.14,54,567
முதிர்வு வரை, அதாவது 15 ஆண்டுகளுக்கு PPF திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 டெபாசிட் செய்தால், தற்போதைய வட்டி விகிதத்தின்படி, ரூ.32,54,567 என்ற அளவில் நிதியை திரட்டலாம்.
PPF முதலீட்டில் அதிக அளவில் நிதி திரட்ட செய்ய வேண்டியது என்ன?
பொது வருங்கால வைப்பு நிதியின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். ஆனால் நீங்கள் விரும்பும் வரை, 5 - 5 ஆண்டுகளாக பல முறை நீட்டிக்கலாம். முதிர்வுக்குப் பிறகு, நீங்கள் விரும்பினால், அதில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் நீட்டிக்கலாம் அல்லது எதையும் முதலீடு செய்யாமல் நீட்டிக்கலாம்.
PPF கணக்கை தொடங்குவதற்கான வழிமுறைகள்
எந்தவொரு இந்திய குடிமகனும் பொதுத் துறை வங்கிகளில் தபால் அலுவலகத்தில் இந்தக் கணக்கைத் திறக்கலாம். இதற்குத் தேவையான ஆவணங்களில், முதலீட்டாளரின் அடையாளத்தை சரிபார்க்கும் KYC ஆவணங்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை அடங்கும். PAN அட்டை, முகவரி சான்று, நாமினி அறிவிப்பிற்கான படிவம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களும் தேவை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









