PPF என்னும் பொது வருங்கால வைப்பு நிதியில், முதலீடு செய்வதன் மூலம் ரூ.90,000/மாதம் வரி இல்லாத வருமானத்தை பெறுவது எப்படி என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி என்பது மத்திய அரசாங்கத்தின் முதலீட்டு திட்டமாகும். வருமான வரி சட்டத்தின் 80C பிரிவின் கீழ் PPF கணக்கில் செய்யப்படும் வைப்புத்தொகை, வட்டி வருமானம் மற்றும் முதிர்வுத் தொகை என அனைத்திற்கு வரிவிலக்கு பெறலாம். PPF கணக்கின் லாக்-இன் காலம் 15 ஆண்டுகள். 15 ஆண்டுகளுக்குப் பிறகு, கணக்கு வைத்திருப்பவர்கள் அதை 5 - 5 ஆண்டுகள் என தொகுதிகளாக நீட்டிக்க முடியும்.
ஓய்வுக்கு பிறகு ரூ.90,000 வரியில்லா மாத வருமானம்
PPF என்னும் பொது வருங்கால வைப்பு நிதியில், ஒரு வருடத்தில் செய்யப்படும் குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.500, அதேசமயம் ஒரு வருடத்தில் அனுமதிக்கப்படும் அதிகபட்ச வைப்புத்தொகை ரூ.1.5 லட்சம். இந்நிலையில் PPF முதலீட்டிலிருந்து ரூ.90,000/மாதம் வரி இல்லாத வருமானத்தை பெறுவது எப்படி என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
PPF முதலீட்டில் இருந்து ரூ.90,000/மாதம் வருமானத்தை பெறுவது எப்படி?
PPF கணக்கின் மூலம் ரூ.90,000/மாதம் வருமானத்தை ஈட்ட, ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.50 லட்ச முதலீட்டில் தொடங்கி 15 ஆண்டுகள் முதிர்வு காலம் வரை அதைத் தொடர வேண்டும். பின்னர், அதிகபட்ச வருமானத்திற்காக கணக்கை 5 - 5 ஆண்டுகள் என தொகுதிகளாக 3 முறை கணக்கை நீட்டிக்க வேண்டும்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் பிபிஎஃப் கார்பஸ்
15 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகை ரூ.22,50,000 என்ற அளவிலும், மதிப்பிடப்பட்ட வட்டி வருமானம் ரூ.18,18,209 ஆகவும், மதிப்பிடப்பட்ட முதிர்வு தொகை ரூ.40,68,209 என்ற அளவிலும் இருக்கும். முதலீட்டாளர் 5 ஆண்டுகள் கணக்கை நீட்டித்து, முன்பு போலவே வருடத்திற்கு ரூ.1.50 லட்சத்தை முதலீடு செய்யலாம்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் பிபிஎஃப் கார்பஸ்
20 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ.30,00,000 என்ற அளவிலும், மதிப்பிடப்பட்ட வட்டி வருமானம் ரூ.36,58,288 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.66,58,288 என்ற அளவிலும் இருக்கும். இந்த கட்டத்தில், முதலீட்டாளர் 5 ஆண்டுகளுக்கு மேலும் நீட்டித்து, வருடத்திற்கு ரூ.1.50 லட்சம் முதலீடு செய்யும் நடைமுறையைத் தொடரலாம்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் பிபிஎஃப் கார்பஸ்
25 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ.37,50,000 என்ற அளவிலும், மதிப்பிடப்பட்ட வட்டி வருமானம் ரூ.65,58,015 என்ற அளவிலும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.1,03,08,015 என்ற அளவிலும் இருக்கும்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் பிபிஎஃப் கார்பஸ்
30 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ.45,00,000 என்ற அளவிலும், மதிப்பிடப்பட்ட வட்டி வருமானம் ரூ.1,09,50,911 என்ற அளவிலும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.1,54,50,911 என்ற அளவிலும் இருக்கும்.
30 வருட முதலீட்டிற்குப் பிறகு எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை
PPF கணக்கில் 30 ஆண்டுகள் முதலீட்டை தொடர்ந்த பிறகும், கணக்கை தொடர்ந்து முழு கார்பஸிலிருந்தும் வட்டியை எடுக்கத் தொடங்கலாம். கணக்கு வைத்திருப்பவர் வருடத்திற்கு ஒரு முறை வட்டித் தொகையை எடுக்க அனுமதிக்கப்படுவார். 7.1 சதவீத வட்டி விகிதத்தில், ஒரு வருடத்தில் கிடைக்கும் வட்டி ரூ.12,87,575 ஆக இருக்கும், இது மாதத்திற்கு ரூ.91,417 ஆக இருக்கும். எனவே இதன் மூலம் உங்களுக்கு வாழ் நாள் முழுவதும் மாதம் ரூ.90,000 என்ற அளவில் வரியில்லா வருமானம் பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ