உங்கள் சிறிய முதலீடுகளை 'ரிட்டர்ன் மெஷினாக' மாற்றும் ஆற்றல் கொண்ட முதலீடு திட்டங்களில் முதலீடு செய்தால், நீங்கள் நினைத்து பார்க்க முடியாத நிதிநிலையை அடையலாம் . ஒரு நாளைக்கு ரூ.200 சேமித்தாலே ரூ.2 கோடியின் உரிமையாளராக ஆகிவிடலாம். PPF மற்றும் SIP என்னும் மியூச்சுவல் பண்ட் முதலீடு இரண்டுமே பணத்தை பன்மடங்காக பெருக்கும் ஆற்றல் பெற்றவை. இவை இரண்டில், ரூ.200 தின சேமிப்பில் உங்களை விரைவில் ரூ.2 கோடிக்கு உரிமையாளராக ஆக்கும் என்பதை ஒரு எளிய கணக்கீட்டின் மூலம் புரிந்துகொள்வோம்.
PPF திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ. 6,000 (ஒரு நாளைக்கு ரூ. 200) முதலீடு செய்தால் கிடைக்கும் கார்பஸ்
குறிப்பு: இந்தக் கணக்கீடு தற்போதைய வருடாந்திர வட்டி விகிதமான 7.1% ஐ அடிப்படையாகக் கொண்டது.
15 ஆண்டுகளில்: உங்கள் மொத்த முதலீடு ரூ.10.80 லட்சமாக இருக்கும், உங்களுக்கு ரூ.19.52 லட்சம் கிடைக்கும்.
20 ஆண்டுகளில்: நீங்கள் அதே முதலீட்டைத் தொடர்ந்தால், உங்களுக்கு ரூ.31.95 லட்சம் கிடைக்கும்.
25 ஆண்டுகளில்: நீங்கள் முதலீட்டை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், உங்களுக்கு ரூ.49.47 லட்சம் கிடைக்கும்.
PPF நிலையான மற்றும் பாதுகாப்பான வருமானத்தைத் தருகிறது என்பது தெளிவாகிறது. ஆனால், ரூ.2 கோடி இலக்கு இன்னும் வெகு தொலைவில் உள்ளது.
SIP என்னும் பணத்தை பன்மடங்காக்கும் சூத்திரம்
மியூச்சுவல் ஃபண்ட் SIP (முறையான முதலீட்டுத் திட்டம்) திட்டத்தில் மாதம் ரூ.6,000 முதலீடு செய்தால் கிடைக்கும் வருமானத்தை அறிந்து கொள்வோம். SIP சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றாலும், நீண்ட கால முதலீட்டில் சிறந்த வருமானத்தை அளிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இதில் 12% என்ற அளவில் ஆண்டு சராசரி வருமானம் கிடைக்கிறது என பொருளாதார நிபுணர்கள் கூறும் நிலையில், அதன் அடிப்படையில், இதில் கிடைக்கும்
ஆண்டு சராசரி வருமானம் 12%
முதலீடு: மாதத்திற்கு ரூ.6,000 (ஒரு நாளைக்கு ரூ.200)
காலம்: 30 ஆண்டுகள்
மொத்த முதலீடு: ரூ.21.60 லட்சம்
மதிப்பிடப்பட்ட மூலதன வருமானம்: ரூ.2.11 கோடி
ஆம், 30 ஆண்டுகள் பொறுமையாக இருந்து, ஒரு நாளைக்கு ரூ.200 மட்டும் சேமித்து முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் ரூ.2 கோடிக்கும் அதிகமானவற்றின் உரிமையாளராக எளிதாக மாறலாம். கூட்டு வட்டி வருமானம் மற்றும் SIP சூத்திரத்தில் மறைந்திருக்கும் சக்தி இதுதான்.
PPF vs SIP: 30 ஆண்டுகளில் கிடைக்கும் கார்பஸ்
பொது வருங்கால வைப்பு நிதியில் மதிப்பிடப்பட்ட வருமானம் 7.1% என்ற அளவில் கிடைக்கும் கார்பஸ்
மொத்த முதலீடு (30 ஆண்டுகள்) ரூ.21.60 லட்சம்
மொத்த தொகை (30 ஆண்டுகளுக்குப் பிறகு) ரூ.73 லட்சம் என்ற அளவில் இருக்கும்.
PPF ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு, பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானத்தை விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். பெரிய இலக்குகளைக் கொண்டவர்களுக்கு, பணவீக்கத்தை வென்று நீண்ட காலத்திற்கு பெரிய செல்வத்தை உருவாக்க விரும்புபவர்களுக்கு SIP சிறந்தது
SIP திட்டத்தில் நீண்ட காலத்திற்கு (15 ஆண்டுகளுக்கு மேல்) முதலீடு செய்வது ஆபத்தை கணிசமாகக் குறைத்து சிறந்த வருமானத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க | SIP : ரூ. 3000 முதலீட்டிலும் கோடீஸ்வரன் ஆகலாம்... எளிய கணக்கீடு இதோ
மேலும் படிக்க | PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்! புதிய வசதிகள் வந்தாச்சு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ