)
PPF Vs Mutual Fund SIP: மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) இரண்டுமே நீண்ட கால முதலீடுகளுக்கான சிறந்த தேர்வுகள். சந்தை சார்ந்த வருமானத்தை வழங்குவதில் மியூச்சுவல் ஃபண்டுகள் மிக சிறந்த முதலீடாக இருக்கும் அதே நேரத்தில், பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்களுக்கு PPF திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். உங்களுக்கு ஏற்ற வகையில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது என்பது உங்கள் நிதி இலக்குகள், முதலீட்டு காலம் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றை பொறுத்தது.
SIP என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட பரஸ்பர நிதி முதலீடாகும். இதில் மிகச்சிறந்த ரிட்டன் கிடைக்கும். ஆனால், ரிஸ்கும் உண்டு. அதே நேரத்தில் PPF என்பது கூட்டு வட்டி வருமானத்துடன் நல்ல ரிட்டன் தரும் பாதுகாப்பான திட்டம். இருப்பினும், இரண்டு திட்டங்களுக்கும் இலக்கு நிதியை அடைய நீண்ட கால தொடர் முதலீடு தேவை. இந்த கட்டுரையில், 30 ஆண்டுகளுக்கு ரூ.11,000 மாதாந்திர முதலீட்டின் மூலம் அதிக ஓய்வூதிய நிதியை உருவாக்க முடியும் என்பதை அறிந்து கொள்வோம்.
முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) என்றால் என்ன?
SIP என்பது பரஸ்பர நிதிகளில் ஒரு நிலையான தொகையை வழக்கமான இடைவெளியில் முதலீடு செய்யும் செயல்முறையாகும். தனிநபர்கள் ஒரு பரஸ்பர நிதி திட்டத்தில் தினசரி, மாதாந்திர, காலாண்டு அல்லது ஆண்டுதோறும் முதலீடு செய்யலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்றால் என்ன?
பொது வருங்கால வைப்பு நிதி என்பது ஓய்வூதியத்தை மையமாகக் கொண்ட திட்டமாகும். இது வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குகளை வழங்குகிறது. இதில் செய்யப்படும் முதலீடு, ஈட்டப்படும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகை என அனைத்திற்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
SIP முதலீடு செய்ய குறைந்தபட்ச தொகை
SIP முதலீடு செய்ய வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச தொகை எதுவும் இல்லை. சில மியூச்சுவல் ஃபண்டுகள் ரூ.100 என்ற அளவிலான குறைந்தபட்ச தொகையை முதலீடு செய்ய கூட அனுமதிக்கின்றன. அதிக பட்ச முதலீட்டிற்கும் வரம்பு ஏதும் இல்லை. முதலீட்டாளர் விருப்பத்திற்கு ஏற்ப SIP முதலீட்டை அதிகரிக்கலாம், குறைக்கலாம் அல்லது நிறுத்தலாம்.
குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச PPF முதலீடு
ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.500. அதே நேரத்தில் ஒரு வருடத்தில் அனுமதிக்கப்படும் அதிகபட்ச வைப்புத்தொகை ரூ.1.5 லட்சம்.
SIP எவ்வாறு செயல்படுகிறது?
தேர்ந்தெடுக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் யூனிட்களை (NAV) வாங்குவதற்கு ஒரு நிலையான தொகை தானாகவே உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்பட்டு, நீங்கள் விரும்பும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்படும்.
PPF எவ்வாறு செயல்படுகிறது?
எந்தவொரு இந்திய குடிமகனும் PPF கணக்கைத் திறக்கலாம். முதலீட்டில் குறிப்பிட்டுள்ள வரம்பிற்கு உட்பட்டு, தங்களால் முடிந்த தொகையை தொடர்து முதலீடு செய்யலாம். 15 ஆண்டு லாக்-இன் காலம். அதன் பிறகு 5 - 5 ஆண்டுகள் என நீட்டிக்கக்கூடிய வசதியும் உண்டு. தற்போது, பொது வருங்கால வைப்பு நிதி ஆண்டுக்கு 7.1 சதவீத கூட்டு வட்டி விகிதம் கிடைக்கிறது.
PPF கணக்கீடு: 30 ஆண்டுகளுக்கு மாதாந்திர ரூ.11,000 முதலீடு
ஆண்டு முதலீடு: ரூ.1,32,000 (மாதாந்திர முதலீடு ரூ.11,000 x 12 மாதங்கள்)
காலம்: 30 ஆண்டுகள்
வட்டி விகிதம்: 7.1 சதவீதம்
PPF கணக்கில் ரூ.11,000 மாதாந்திர முதலீட்டில் 30 ஆண்டுகளில் உங்களிடம் சேரும் கார்பஸ்
ரூ.11,000 மாதாந்திர பங்களிப்பில், 30 ஆண்டுகளில் மதிப்பிடப்பட்ட முதிர்வு தொகை ரூ.1,35,96,801 ஆக இருக்கும். மதிப்பிடப்பட்ட மொத்த வட்டி ரூ.96,36,801 ஆக இருக்கும்.
SIP முதலீடு
SIP முதலீட்டில் நிலையான வருமானம் இல்லாததால், 8 சதவீதம் (கடன் நிதி), 10 சதவீதம் (பங்கு நிதி) மற்றும் 12 சதவீதம் (கலப்பின நிதி) வருடாந்திர வருமானத்தின்படி இங்கே கணக்கிடப்பட்டுள்ளது.
SIP: ரூ.11,000 முதலீட்டில் 30 ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும் கார்பஸ் (கலப்பின நிதி)
12 சதவீத வருடாந்திர வருமானத்தில், 30 ஆண்டுகளில் மதிப்பிடப்பட்ட நிதி ரூ.3,38,90,705 ஆக இருக்கும். அந்த நேரத்தில், முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.39,60,000 ஆகவும், மூலதன ஆதாயங்கள் ரூ.2,99,30,705 ஆகவும் இருக்கும்.
SIP: ரூ.11,000 முதலீட்டில் 30 ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும் கார்பஸ் (பங்கு நிதி)
10 சதவீத வருடாந்திர வருமானத்தில், 30 ஆண்டுகளில் மதிப்பிடப்பட்ட நிதி ரூ.2,28,72,220 ஆக இருக்கும். மதிப்பிடப்பட்ட மூலதன ஆதாயங்கள் ரூ.1,89,12,220 ஆக இருக்கும்.
SIP: ரூ.11,000 முதலீட்டில் 30 ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும் கார்பஸ் (கடன் நிதி)
8 சதவீத வருடாந்திர வருமானத்தில், 30 ஆண்டுகளில் மதிப்பிடப்பட்ட மூலதன ஆதாயங்கள் ரூ.1,55,93,746 ஆக இருக்கும். மதிப்பிடப்பட்ட மூலதன ஆதாயங்கள் ரூ.1,16,33,746 ஆக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ