Railway Budget 2026: இன்னும் சில நாட்களில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2026 அன்று நாட்டின் 88வது பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வார். அவர் தொடர்ச்சியாக ஒன்பதாவது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து துறைகளிலும் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு வரக்கூடிய அறிவிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Indian Railways: பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு உள்ள எதிர்பார்ப்புகள் என்ன?
2026 பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு பிரத்யேகமாக என்னென்ன அரிவிப்புகள் வரும் என்பதை அறிய அனைவரும் ஆவலாக உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதில் சாதனை அளவிலான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிக முதலீடுகள் தொடரும் என்றே பலர் கூறினாலும், செலவினங்களின் வேகம் சற்று குறைக்கப்படலாம் என்ற கருத்தும் உள்ளது.
Railway Budget 2026: ரயில்வே துறைக்கான ஒதுக்கீடு எப்படி இருக்கும்?
2026-27 நிதியாண்டில் இந்திய ரயில்வேக்கான மொத்த பட்ஜெட் ஆதரவில் (GBS) குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என அரசாங்க வட்டாரங்களும் துறை சார்ந்த நிபுணர்களும் கூறுகிறார்கள். தற்போது, FY26 க்கு ரயில்வே ₹2.52 லட்சம் கோடி GBS பெற்றுள்ளது. கூடுதலாக, PPP திட்டங்களை உள்ளடக்கிய கூடுதல் பட்ஜெட் வளங்களின் (EBR) கீழ் தோராயமாக ₹10,000 கோடி செலவிட அனுமதிக்கப்படுகிறது.
தற்போதுள்ள நிதியைக் கொண்டே உள்கட்டமைப்பு மேம்பாடுகளின் வேகத்தை பராமரிக்க முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆகையால், இந்த பட்ஜெட்டில் ரவில்வேவுக்கான நிதி ஒதுக்கீடு அதிகமாக உயர வாய்ப்பில்லை என்றும் அதற்கான அவசியமும் இல்லை என்றும் நிபுனர்கள் கூறுகிறார்கள்.
Indian Railways Budget 2026: 80% -க்கும் மேலான தொகை செலவானது
ரயில்வே அமைச்சகம் ஏற்கனவே அதன் பட்ஜெட்டில் பெரும் பகுதியைப் பயன்படுத்தியுள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 2026 தொடக்கம் வரை, ரயில்வே அதன் மொத்த GBS இல் 80.54 சதவீதத்தை செலவிட்டுள்ளது. இந்தத் தொகை தோராயமாக ₹2,03,138 கோடி ஆகும்.
ஏப்ரல் முதல், ரயில்வேயின் மூலதனச் செலவு சுமார் ₹1.95 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்தப் பணம் புதிய ரயில் பாதைகள், டிராக் டப்ளிங், ரயில் நிலையங்களின் மேம்பாடு மற்றும் நவீன ரயில்களை அறிமுகப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய வேகத்தில் பணிகள் தொடர்ந்தால், இந்த நிதியாண்டின் இறுதிக்குள் முழு பட்ஜெட் தொகையும் பயன்படுத்தப்படும் என்று அமைச்சகம் கூறுகிறது.
பட்ஜெட் முன்னுரிமைகள் மாறும்
ரயில்வே துறைக்கான மொத்த பட்ஜெட் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காணாவிட்டாலும், அதற்குள் நிதி ஒதுக்கீடு நிச்சயமாக மாறும். புதிய முன்னுரிமைகளை பிரதிபலிக்கும் வகையில் GBS மறுசீரமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெளிவாகக் கூறி வருகின்றனர். புல்லட் ரயில்கள், தண்டவாள பாதுகாப்பு மற்றும் நெட்வொர்க் நெரிசலை நீக்குவதற்கு தொழில்நுட்ப ஏற்பாடுகள் ஆகியவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கப்படலாம்.
வந்தே பாரத் மற்றும் அம்ருத் பாரத் ரயில்களில் கவனம்
அடுத்த நிதியாண்டில் வந்தே பாரத் மற்றும் அம்ருத் பாரத் ரயில்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில்கள் பயணிகளுக்கு வேகமான, வசதியான மற்றும் சரியான நேரத்தில் சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மின்மயமாக்கல் நிறைவடைவதால் செயல்பாட்டு செலவுகள் குறையும் என்றும் சரக்கு வருவாய் மூலம் பயணிகள் கட்டணங்களுக்கு மானியம் வழங்குவது எளிதாகும் என்றும் ரயில்வே வாரியம் நம்புகிறது.
நிதி ஒதுக்கீட்டில் 5% அதிகரிப்பா?
மதிப்பீட்டு நிறுவனமான ICRA, ரயில்வேக்கான பட்ஜெட் சுமார் 5 சதவீத வரம்பில் அதிகரிக்கக்கூடும் என்று நம்புகிறது. இப்போது புதிய பாதைகள், பாதை மாற்றம், பாதை இரட்டிப்பாக்குதல் மற்றும் நெரிசலைக் குறைக்க அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்றும் இந்த ஏஜென்சி தெரிவித்துள்ளது. கூடுதலாக, ரயில் நிலைய மறுவடிவமைப்பு, ரோலிங் ஸ்டாக் நவீனமயமாக்கல் மற்றும் கவாச் 4.0 மற்றும் மேம்பட்ட சிக்னலிங் போன்ற பாதுகாப்பு அமைப்புகளில் குறிப்பிடத்தக்க முதலீடுகள் இருக்கும்.
பாதுகாப்பு அம்சங்களில் சாதனை செலவு
FY26 இல் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களுக்கு தோராயமாக ₹1.17 லட்சம் கோடி செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் தண்டவாள மேம்பாடுகள், சிக்னலிங், பாலங்கள் மற்றும் கோச் பாதுகாப்பு ஆகியவை அடங்கும். விபத்துகளைக் குறைக்க கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே இந்த பகுதியில் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி அதிக பணத்தை முதலீடு செய்து வருகிறது.
இந்திய ரயில்வேயின் கவனம் புதிய ரயில் தடங்களை அமைப்பதைத் தாண்டி நகர்ந்துள்ளதாக அரசாங்கம் கருதுகிறது. நெட்வொர்க்கை வேகமாகவும், பாதுகாப்பாகவும், திறமையாகவும் மாற்றுவதே இப்போது புதிய இலக்காக உள்ளது. மின்மயமாக்கல் கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில், நெரிசலைக் குறைத்தல், அதிவேக ரயில்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இப்போது அதிக கவனம் இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









