இன்றைய காலத்தில் நாம் சாப்பிட விரும்பும் உணவுகளை இருக்கும் இடத்தில் இருந்தே ஆர்டர் செய்தால்போதும், அது உங்களை தேடி வந்து விடும். அப்படி டெலிவரி செய்யப்படும் நிறுவனங்களில் ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ மிகவும் பிரபலமானவை. ஃபுட் டெலிவரி என்றாலே அனைவரும் நினைவுக்கு வருவது இந்த இரண்டு அப்-கள் தான். அந்த அளவிற்கு இந்த இரண்டு நிறுவனங்களும் இந்த துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில், இவர்களின் ஆதிக்கத்தை உடைக்க புறப்படுகிறது ரேபிடோ நிறுவனம். டாக்ஸி துறையில் எப்படி ஒரு புரட்சியை கொண்டு வந்ததோ, அதேபோல் தற்போது ஃபுட் டெலிவரி துறையிலும் ஆதிக்கம் செய்ய திட்டம் தீட்டி உள்ளது. ஸ்விக்கி மற்றும் சோமேட்டோவின் ஆதிக்கத்தை உடைக்க உணவங்களுடன் மிகக் குறைந்த கமிஷனில் சேவை வழங்க தயாராகி உள்ளது. குறிப்பாக இந்த முயற்சி சிறு உணவங்களுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மை காலமாக அதிக கமிஷன் காரணமாக சிறு உணவகங்கள் ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ நிறுவனத்தில் இருந்து வெளியேறி வருகிறது. இது இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் சரிவை ஏற்படுத்தியது. இச்சூழலில் இந்த நிறுவனங்களுக்கு புதிய தலைவலியாக ரேபிட்டோ வந்திருக்கிறது.
பெங்களூருவில் அறிமுகம்
ரேபிட்டோ முதலில், பெங்களூருவில் ஃபுட் டெலிவரி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. பொதுவாக இது போன்ற நிறுவனங்கள், முதலில் பெரு நகரங்களில் தொடங்கி, அதில் கிடைக்கும் வெற்றியை பொறுத்து மற்ற நகரங்களில் தொடங்க திட்டமிடுவார்கள். ரேபிட்டோவின் பைக் டாக்ஸியும் அப்படிதான். கடந்த 2015ஆம் ஆண்டு முதலில் பெங்களூருவில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், சென்னை, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களுக்கு விரிவடைந்தது. அப்படியே இம்முறையும் பின்தொடர உள்ளது.
தேசிய உணவகங்கள் சங்கத்துடன் செய்த ஒப்பந்தம் படி ரேபிடோ ஃபுட் டெலிவரிக்கு வெறும் 8 முதல் 15 சதவீதம் மட்டுமே கமிஷனாக வசூலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ வசூலிக்கும் கமிஷனை விட குறைவாகும். அந்நிறுவனங்கள் 16 முதல் 30 சதவீதம் வரை கமிஷன் வசூலிக்கிறது.
கட்டண அமைப்பு
ரேபிட்டோவின் கட்டண அமைப்பு மிகவும் எளிமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ. 400க்கு குறைவான ஆர்டர்களுக்கு ரூ. 25 மற்றும் அதற்கு மேல் உள்ள ஆர்டர்களுக்கு ரூ. 50 என்ற நிலையான கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி ரேபிட்டோ அப்பில் வாடிக்கையாளர்கள், பைக், ஆட்டோ, டாக்ஸி புக் செய்வது போல் உணவையும் ஆர்டர் செய்ய முடியும்.
ரேபிட்டோவின் இந்த புதிய முயற்சி உணவு விநியோக சந்தையில் புதிய போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் பெங்களூருவில் தொடங்கும் இந்த ரேபிட்டோவின் ஃபுட் டெலிவரி முறை வெற்றி பெறுவதை பொறுத்து மற்ற நகரங்களில் கொண்டுவரப்படலாம்.
மேலும் படிங்க: ரயிலில் இருந்து விழுந்த பயணிகள்! 4 பேர் உயிரிழப்பு! பலர் காயம்! காரணம் இதுதான்!
மேலும் படிங்க: ஹனிமூனில் கணவர் கொலை; மனைவியே கொன்றது அம்பலம்.. சினிமாவையே மிஞ்சும் ட்விஸ்ட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









