Banks 5 Day Working: வங்கித் தொடர்பான பணிகளுக்காக அடிக்கடி வங்கி கிளைக்கு செல்லும் நபராக நீங்கள் இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். ஏனெனில் நீண்ட காலமாக வங்கிகளில் 5 நாட்கள் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வங்கி ஊழியர்களும் அவர்களது தொழிற்சங்கங்களும் கோரி வருகின்றன. இது தொடர்பாக, வங்கி தொழிற்சங்கங்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வருகிற மார்ச் 24-25 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை வங்கி ஊழியர்கள் அறிவித்து உள்ளனர்.
இதனிடையே வரும் ஏப்ரல் 1 முதல் வாரத்திற்கு இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை கிடைக்கும், அதாவது வாரத்தில் 6 நாட்கள் வங்கிகள் செயல்பட்டு, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை மட்டும் 5 நாட்கள் செயல்பட்ட நிலையில் இனி இந்த விதி மாறுகிறது. ஏனெனில் மத்திய அரசு தற்போது ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் விளைவாக வங்கி ஊழியர்களின் கனவு நனவாகும் நேரம் வந்துவிட்டது என்று கூறப்பட்டு வருகிறது.
5 நாட்கள் வேலை.. உண்மை என்ன?
உண்மையில், ஏப்ரல் 1 முதல் 5 நாட்கள் வங்கி செயல்படும் என்று ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்தச் செய்திகள் வெளிவந்த உடனேயே, அரசாங்கத்தின் உண்மைச் சரிபார்ப்பு நிறுவனம் இந்தக் கூற்றுக்களை விசாரித்தது. அதன்படி அரசாங்கமோ அல்லது ரிசர்வ் வங்கியோ அத்தகைய உத்தரவை பிறப்பிக்கவில்லை என்று PIB உறுதியாக தெரிவித்துள்ளது.
A news report by Lokmat Times claims that starting from April, banks across the country would operate 5 days a week, following a new regulation issued by @RBI #PIBFactCheck
This claim is #Fake
For official information related with Reserve Bank of India, visit :… pic.twitter.com/MrZHhMQ0dK
— PIB Fact Check (@PIBFactCheck) March 20, 2025
வங்கி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு:
இதனிடையே நாடு தழுவி அளவில் பேங்க் ஸ்ட்ரைக் நடைபெற இருக்கிறது. அகில இந்திய வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வங்கி பணிகள் வரும் சனிக்கிழமை முதலே பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் வரும் சனிக்கிழமை நான்காவது சனிக்கிழமை என்பதால், வங்கிகளுக்கு பொதுவாக விடுமுறை ஆகும். எனவே சனிக்கிழமை வங்கிகள் செயல்படாது. ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் அன்றைக்கும் வங்கிகள் செயல்படாது.
திங்கட்கிழமை (மார்ச் 24) மற்றும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) இந்த இரண்டு நாட்களும் வங்கி ஊழியர்கள் அகில இந்திய வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறார்கள். இதிலே வங்கி ஊதியர்கள் மட்டுமல்ல, அதிகாரிகள், இயக்குனர் உட்பட அனைத்து பணியிடங்களை சேர்ந்தோரும் பங்கேற்கப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தக் காரணம் என்ன என்றால், மக்கள் சேவையை அதிகரிக்க வேண்டும், பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்கள், அதிகாரிகள் இயக்குனர் உட்பட அனைத்து பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிரப்பினால் தான் மக்கள் சேவையை சிறப்பாக செய்ய முடியும். அதேபோன்று வாரத்தில் ஐந்து நாட்கள் வேலையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பணித்திரனை ஆய்வு செய்தல் மற்றும் பணித்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை ஆகிய உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடித்திருக்கிறது.
எனவே திட்டமிட்டபடி அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் நடைபெறும் என வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெற்றால் மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ