)
RBI Repo Rate Latest News: இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. மத்திய அரசு ஜிஎஸ்டி விகிதங்ளை குறைத்து ஏற்கனவே பொது மக்களுக்கு மிகப்பெரிய தீபாவளி பரிசை அளித்துள்ளது. இந்த நிலையில், அடுத்ததாக இந்திய ரிஸர்வ் வங்கியும், பொது மக்களுக்கு தீபாவளி பரிசை வழங்க தயாராகி வருவதாக கூறப்படுகின்றது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அடுத்த நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் சாதகமான நிலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ரிசர்வ் வங்கி அதன் வரவிருக்கும் பணவியல் கொள்கையில் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைப்பது பொருத்தமானதாகவும் தர்க்கரீதியாக சாத்தியமானதாகவும் இருக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். இதைத்தான் எஸ்பிஐ ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளது.
ரெப்போ விகிதக் குறைப்பு என்பது பொதுமக்களுக்கு ஒரு பெரிய தீபாவளி பரிசாக இருக்கும். செப்டம்பர் 22 முதல் புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் அமல்படுத்தப்பட்டதன் மூலம் பொதுமக்கள் ஏற்கனவே ஒரு பெரிய பரிசைப் பெற்றுள்ளனர். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்தால், தீபாவளிக்கு முன் பொதுமக்களுக்கு இது இரண்டாவது பெரிய பரிசாக இருக்கும்.
நுகர்வோர் விலைக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் குறைந்து வரும் நிலையில், பிப்ரவரி முதல் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 100 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது. தொடர்ச்சியாக மூன்று ரெப்போ விகிதக் குறைப்புகளுக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருந்தது.
ரிசர்வ் வங்கி அக்டோபர் 1 ஆம் தேதி ரெப்போ விகிதக் குறைப்பை அறிவிக்கலாம் என கூறப்படுகின்றது. கொள்கை வட்டி விகிதங்களை முடிவு செய்யும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையிலான பணவியல் கொள்கைக் குழு செப்டம்பர் 29 அன்று தொடங்கி மூன்று நாட்கள் கூட உள்ளது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அக்டோபர் 1 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
இந்திய ஸ்டேட் வங்கியின் (SBI) பொருளாதார ஆராய்ச்சித் துறையின் "MPC கூட்டத்திற்கான முன்னுரை" என்ற ஆராய்ச்சி அறிக்கை, "செப்டம்பரில் வட்டி விகிதங்களைக் குறைப்பது பொருத்தமானதாகவும் பகுத்தறிவு சர்ந்ததாகவும் இருக்கும். ஜூன் மாதத்திற்குப் பிறகு விகிதக் குறைப்புக்கான வாய்ப்பு உண்மையில் அதிகமாக உள்ளன. ஆனால் இது நடக்க, RBI MPC-க்குள் ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும்" என்று கூறுகிறது.
அடுத்த நிதியாண்டிலும் பணவீக்கம் மிதமாகவே இருக்கும். செப்டம்பரில் விகிதங்களைக் குறைக்காமல் இரண்டு தவறுகளை (நடுநிலை நிலைப்பாடு மற்றும் விகிதங்களை குறைக்காமல் இருப்பது) மீண்டும் செய்வதில் அர்த்தமில்லை என்று அறிக்கை கூறுகிறது. ஏனெனில் பணவீக்கம் நிதியாண்டு 27 இல் மிதமாகவே இருக்கும். நிதியாண்டு 26-27 க்கான CPI புள்ளிவிவரங்கள் தற்போது சுமார் 4 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக இருப்பதாக அறிக்கை கூறுகிறது. GST சீர்திருத்தத்திற்கு பிறகு, CPI அக்டோபரில் 1.1 சதவீதத்தை நெருங்கக்கூடும். இது 2004 க்குப் பிறகு மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
GST சீர்திருத்தம் பணவீக்கத்தில் 65-75 அடிப்படைப் புள்ளி சரிவுக்கு வழிவகுக்கும். GST யின் ஒரு பெரிய சீர்திருத்தம் விலைக் குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கத்தில் மேலும் 65-75 அடிப்படைப் புள்ளிகள் சரிவுக்கு வழிவகுக்கும் என்று SBI குழுமத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்தி கோஷ் அறிக்கையில் மதிப்பிடுகிறார்.
2019 ஆம் ஆண்டின் அனுபவம், விகித சீரமைப்பு (முக்கியமாக பொதுவான பொருட்களின் விகிதங்களை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைப்பது) ஒரு சில மாதங்களில் ஒட்டுமொத்த பணவீக்கத்தில் சுமார் 35 அடிப்படைப் புள்ளிகள் சரிவுக்கு வழிவகுத்துள்ளது என்பதைக் காட்டுகிறது என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆர்பிஐ ரெப்போ விகித குறைப்பு சுருக்கமாக.....
- இந்திய ரிசர்வ் வங்கி இந்த முறை ரெப்போ விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- இது நடந்தால், பொதுமக்களுக்கு இது ஒரு மிகப்பெரிய தீபாவளி பரிசாக இருக்கும்.
- பணவியல் கொள்கைக் குழு கூட்டம் செப்டம்பர் 29 அன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைறும்.
- அக்டோபர் 1 அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ