Free UPI Transaction End Soon: இலவச UPI பரிவர்த்தனைகளின் சகாப்தம் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார். ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா சொன்ன தகவலைக் கேட்டு நாட்டு மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் கூறிய தகவலின் அடிப்படையில் வரும் காலங்களில் இனி UPI பரிவர்த்தனைகள் இலவசமாக இருக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இதனால் மில்லியன் கணக்கான இந்தியர்கள் இடையே கவலையும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
எனவே இனி UPI-க்கு கட்டணம் வசூலிக்கப்படுமா? UPI பரிவர்த்தனை கட்டணம் குறித்தது ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா சொன்னது என்ன ? போன்ற விவரங்களை பார்ப்போம்.
ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியது என்ன ?
தற்போது UPI-க்கு எந்த கட்டணமும் இல்லை என்று சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார். இந்த முறை இலவசமாக இருக்க, வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு அரசாங்கம் மானியம் வழங்கி வருகிறது. தற்போது UPI பரிவர்த்தனைக்கு செலவிடப்படும் பணத்தை அரசாங்கம் ஏற்கிறது. ஆனால் இது நீண்ட காலத்திற்கு தொடர முடியாது. எனவே, UPI-க்கு கட்டணம் வசூலிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
எல்லா வகையிலும் சிறந்த ஒரு அமைப்பு நமக்குத் தேவை. இப்போது UPI பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் இல்லை. UPI கட்டண முறையில் வங்கிகள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு அரசாங்கம் மானியம் வழங்கி வருகிறது. வெளிப்படையாக, சில செலவுகள் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது UPI-ஐ இயக்குவதற்கான செலவை யாராவது ஒருவர் செலுத்த வேண்டும். இதனுடன், தற்போதைய MDR கொள்கையை, அதாவது வணிகர் தள்ளுபடி விகிதத்தைத் தொடரலாமா வேண்டாமா என்பதை அரசாங்கம் முடிவு செய்யும் என்றும் சஞ்சய் மல்ஹோத்ரா தெளிவுபடுத்தியுள்ளார்.
இரட்டிப்பான UPI பரிவர்த்தனைகள்
நமது நாட்டில் நாளுக்கு அதிகரித்து வரும் UPI பரிவர்த்தனைகளைக் கருத்தில் கொண்டு, ஆர்பிஐ ஆளுநரின் இந்த அறிக்கை மிகவும் முக்கியமானது. கடந்த இரண்டு ஆண்டுகளில் UPI பரிவர்த்தனைகள் இரட்டிப்பாகியுள்ளன. தற்போது தினமும் 60 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றன.
நாடு முழுவதும் UPI பயன்பாடு அதிகரிப்பு
கர்நாடகாவின் காய்கறி விற்பனையாளருக்கு ரூ.29 லட்சம் ஜிஸ்டி (GST) நோட்டீஸ் அனுப்பப்பட்டதன் மூலம் UPI பரிவர்த்தனை அதிகரிப்பு குறித்து நீங்கள் யூகிக்க முடியும். அவரது டிஜிட்டல் பரிவர்த்தனை ₹ 1 கோடியே 63 லட்சம் என்பதால் ஜிஸ்டி துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. காய்கறிகளை வாங்கிய பிறகு, பெரும்பாலான மக்கள் UPI-யில் மட்டுமே பணம் செலுத்தி வந்தனர் என்று காய்கறி விற்பனையாளர் கூறுகிறார். UPI பயன்பாடு எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
MDR என்றால் என்ன? யாருக்கு பயன்?
MDR (Merchant Discount Rates) என்பது வணிகர் வங்கிக்கு செலுத்தும் கட்டணம் ஆகும். ஒரு வாடிக்கையாளர் QR குறியீடு அல்லது அட்டை (ATM Card / Credit Card / Debit Card) மூலம் பணம் செலுத்தும்போது, அதற்கான கட்டணத்தை வணிகர்கள் செலுத்தி வந்தனர். இது முன்பு செலுத்திய ஒரு கட்டணமாகும், ஆனால் UPI ஏற்றுக்கொள்ளலை அதிகரிப்பதற்காக 2019 இல் அது ரத்து செய்யப்பட்டது.
பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்ன?
UPI பரிவர்த்தனையில் ஏதேனும் கட்டணம் விதிக்கப்பட்டாலும், அது பெயரளவில் மட்டுமே இருக்கும், இதனால் சாதாரண பயனர்களுக்கு எந்த சுமையும் இருக்காது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். UPI-ஐ முழுமையாக நிதி ரீதியாக நிலையானதாக மாற்றுவதே RBI-யின் நோக்கம், அதிலிருந்து லாபம் ஈட்டுவது அல்ல எனவும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றன.
UPI பரிவர்த்தனையின் எதிர்காலம் என்னவாகும்?
UPI பரிவர்த்தனை செலவை யார் இறுதியில் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை RBI இன்னும் தெளிவுபடுத்தவில்லை. பயனர்களா அல்லது வணிகர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியாகி வருகிறது. முற்றிலும் இலவச UPI பரிவர்த்தனை சகாப்தம் அதன் முடிவை நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.
இலவச UPI பரிவர்த்தனை தொடருமா?
பயனர்கள் அல்லது வணிகர்களிடம் கட்டணம் வசூலிக்காமல் UPI தொடர்ந்து நிலையான முறையில் செயல்பட முடியுமா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கான பதிலை ஆர்பிஐ தான் அளிக்க முடியும். டிஜிட்டல் இந்தியாவின் பயணத்தில் UPI முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால், எதிர்காலத்தில் சேவை தடையின்றி தொடர்வதை ஆர்பிஐ உறுதி செய்யலாம். விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகலாம்.
மேலும் படிக்க - ஆர்பிஐ அதிரடி... இந்த முன்னணி வங்கிக்கு அபராதம் - கஸ்டமர்களுக்கு பாதிப்பா?
மேலும் படிக்க - இனி இந்த வங்கிகளில் Minimum Balance இல்லாமல் கணக்கு திறக்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









