)
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் டிஜிட்டல் பரிமாற்றம் அதிகரித்து வருகிறது. பலரும் யுபிஐ மூலம் பணம் அனுப்ப வழங்கி உள்ளனர். இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துவதற்கு எளிதாக இந்த டிஜிட்டல் பரிமாற்றம் உள்ளதால் பத்து ரூபாய் சோப்பு வாங்குவது முதல் தங்க நகைகள் வாங்குவது வரை அனைத்திற்கும் யுபிஐ மூலம் பணம் செலுத்துகின்றனர். இருப்பினும் சில சமயங்களில் நெட்வொர்க் கோளாறுகள் காரணமாக பணம் அனுபவத்தில் சிரமம் ஏற்படுகிறது. இக்கட்டான நேரங்களில் பணம் செலுத்த முடியாமல் பலரும் சிரமப்படுவதையும் நாம் பார்த்து வருகிறோம்.
கையில் பணம் வைத்திருப்பது குறைந்துள்ளதா?
டிஜிட்டல் பரிமாற்றங்கள் அதிக அளவில் நடைபெற்றாலும் இன்றும் ஒரு பொருளை கையில் பணம் கொடுத்து வாங்கும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகின்றனர். இந்நிலையில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அதிகம் பயன்படுத்தும் மக்களின் வசதியை மேம்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வங்கிகள் மற்றும் ஏடிஎம் ஆபரேட்டர்கள் ஒவ்வொரு ஏடிஎம்களிலும் கண்டிப்பாக ரூபாய் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை வைக்க தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. பல ஏடிஎம்களில் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வருவதாக புகார்கள் எழுந்த நிலையில் ஆர்பிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் இதனை அனைத்து வங்கிகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆர்பிஐ கொடுத்துள்ள டெட்லைன்
செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனைத்து ஏடிஎம்களிலும் 75 சதவீதம் ரூபாய் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் 90% ஏடிஎம்களில் ரூபாய் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் வைக்க வைக்கப்பட வேண்டும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்ட பிறகு 2017 ஆம் ஆண்டு புதிதாக 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் புதிய வடிவில் ரூபாய் 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்திற்கு வந்தது. சிறிய பரிவர்த்தனைகளை எளிதாக்கும் விதமாக இந்த புதிய நடைமுறையை ஆர்பிஐ கொண்டு வந்தது. மேலும் பத்து ரூபாய் மற்றும் இருபது ரூபாய் நாணயங்களையும் புழக்கத்திற்கு கொண்டு வந்தனர். இவை ஆரம்பத்தில் கம்மியாக கிடைத்தாலும் அதன் பிறகு அனைவருக்கும் எளிதாக கிடைக்க தொடங்கியது.
200 ரூபாய் நோட்டுகள் எங்கும் கிடைப்பதில்லை என்று மக்கள் புகார்கள் தெரிவித்து வரும் நிலையில் 200 ரூபாய் நோட்டுகளின் உற்பத்தியை அதிகரித்து நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தற்போது உறுதி அளித்துள்ளது. வரும் நாட்களில் அனைவரது கைகளிலும் 200 ரூபாய் நோட்டுகள் நிச்சயம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை அனைவரது கையிலும் பணப்புழக்கம் இருப்பதை மேம்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது. தங்களுக்கு தேவையான பணத்தை மக்கள் ஏடிஎம்களில் இருந்து எடுத்துக் கொள்ள இது வசதியாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ