சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்... RBI விதிகள் கூறுவது என்ன...

நாம் அவ்வப்போது பணத்தை கணக்கில் டெபாஸிட் செய்கிறோம். ஆனால் ரிசர்வ் வங்கி மற்றும் வருமான வரியின் சில முக்கியமான விதிகளைப் பற்றி பலருக்கு தெரியாமல் தான் உள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 14, 2025, 10:18 PM IST
  • சேமிப்புக் கணக்கில் பணத்தை வைத்திருப்பதற்கான வரம்பு உங்களுக்குத் தெரியுமா?
  • சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணத்தை வைத்திருக்கலாம்?
  • எந்தெந்த பரிவர்த்தனைகளுக்கு PAN எண் அவசியம்?
சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்... RBI விதிகள் கூறுவது என்ன...

ரிசர்வ் வங்கியின் சேமிப்பு கணக்கு விதிகள்: வங்கிக் கணக்கு வைத்திருப்பது என்பது அனைவருக்கும் அவசியமாகிவிட்டது. அது மிகவும் நல்ல விஷயமும் கூட, இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு வங்கியில் சேமிப்புக் கணக்கு உள்ளது. ஏனெனில் வங்கியில் வைக்கப்படும் பணம் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. வேலை செய்யும் நிபுணராக இருந்தாலும் சரி, மாணவராக இருந்தாலும் சரி, தொழிலதிபராக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவருக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சேமிப்புக் கணக்குகள் உள்ளன. 

Add Zee News as a Preferred Source

சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணத்தை வைத்திருக்கலாம்

சேமிப்பு கணக்குகளில் எவ்வளவு பணத்தை டெபாசிட் செய்யலாம் என்பது குறித்த விதி உங்களுக்குத் தெரியுமா? நாம் அவ்வப்போது பணத்தை கணக்கில் டெபாஸிட் செய்கிறோம். ஆனால் ரிசர்வ் வங்கி மற்றும் வருமான வரியின் சில முக்கியமான விதிகளைப் பற்றி பலருக்கு தெரியாமல் தான் உள்ளது. நீங்கள் அதிக அளவில் டெபாசிட் செய்யும் போது,அதன் விளைவாக வருமான வரி நோட்டீஸ் வரக்கூடும்.

சேமிப்புக் கணக்கில் பணத்தை வைத்திருப்பதற்கான வரம்பு உங்களுக்குத் தெரியுமா?

சேமிப்பு கணக்கில், அடிக்கடி அதிக அளவில் பணம் டெபாஸிட் செய்யப்படுவது வருமான வரித் துறையின் கவனத்தை ஈர்க்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவும். ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகள் மற்றும் தொடர்புடைய வரி விதிகளை அறிந்துகொள்வது, சிக்கல் அல்லது அபராதத்தைத் தவிர்க்க உதவும். எனவே சேமிப்புக் கணக்கு தொடர்பான முக்கியமான விதிகளை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

சேமிப்புக் கணக்கு வரம்பு

இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI) வருமான வரித் துறையும் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளைக் கண்காணித்து வருகின்றன. ஒரு நிதியாண்டில் உங்கள் சேமிப்புக் கணக்கில் ரூ.10 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்யப்பட்டால், உங்கள் வங்கி வருடாந்திர தகவல் அறிக்கையின் (AIR) கீழ் வரி அதிகாரிகளிடம் அதைப் புகாரளிக்க வேண்டும். இதற்காக உங்களுக்கு வரி விதிக்கப்படும் என்று அர்த்தமல்ல. ஆனால் பரிவர்த்தனை உங்கள் அறிவிக்கப்பட்ட வருமானத்தை விட அதிகமாக இருந்தால், அது விசாரணைக்கு உட்படுத்தப்படலாம்.

நடப்புக் கணக்கு வரம்பு?

நடப்புக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதற்கான வரம்பு அதிகமாக உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். ஒரு நடப்புக் கணக்கில், ஒரு நிதியாண்டில் ரூ.50 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

எந்தெந்த பரிவர்த்தனைகளுக்கு PAN எண் அவசியம்?

ஒரு நபர் ஒரே பரிவர்த்தனையில் ரூ.50,000 அல்லது அதற்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தால், பான் எண் (நிரந்தர கணக்கு எண்) அவசியம். ஒரு முறை செய்யும் வைப்புத் தொகை ரூ.50,000 க்கும் குறைவாக இருந்தாலும், பரிவர்த்தனை தொகை ஒரு வருடத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறினால், அது வரித் துறையின் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம், குறிப்பாக அறிவிக்கப்பட்ட வருமானத்தை விட அதிகமாக இருந்தால்.

நிர்ணயிட்ட வரம்பு மீறப்பட்டால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் விபரம்

எந்தவொரு சட்டபூர்வமான ஆதாரமும் இல்லாமல் நீங்கள் அதிக அளவு பணத்தை டெபாசிட் செய்தால், வருமானத் துறை பிரிவுகள் 131, 142(1) அல்லது 148 இன் கீழ் உங்களை விசாரிக்கக்கூடும். பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து திருப்திகரமான பதிலை நீங்கள் அளிக்க முடியாவிட்டால், அந்தத் தொகையை விவரிக்கப்படாத வருமானமாகக் கருதி, பிரிவு 68 இன் கீழ் 60% நிலையான விகிதத்தில் வரி விதிக்கலாம், அதோடு கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் வரியும் விதிக்கப்படும்.

பண வைப்புத்தொகை மற்றும் உங்கள் படிவம் 26AS அல்லது AIS

உங்கள் வங்கியால் அறிவிக்கப்பட்ட அனைத்து உயர் மதிப்பு பரிவர்த்தனைகளும் உங்கள் படிவம் 26AS அல்லது புதிய AIS (ஆண்டு தகவல் அறிக்கை) ஆகியவற்றில் பிரதிபலிக்கின்றன. வரி அதிகாரிகள் இந்தப் பதிவுகளைப் பயன்படுத்தி நீங்கள் தாக்கல் செய்த வருமான வரி வருமானங்களுடன் அவற்றைப் பொருத்துவார்கள். ஏதேனும் முரண்பாடு இருந்தால், உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படலாம்.

மேலும் படிக்க | Gpay, Paytm பயனர்கள் ஷாக்... பணப் பரிவர்த்தனையில் சிக்கல் - என்ன தான் ஆச்சு?

மேலும் படிக்க | தட்கல் புக்கிங் செய்ய சரியான நேரம் எது தெரியுமா? இந்த தவறுகளை பண்ணாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News