RBI Latest rules : நீங்கள் EMI செலுத்தினீர்களா இல்லையா என்பதை வங்கியின் கிரெடிட் ஸ்டேட்மென்ட் வழியாக தெரிந்து கொள்ளலாம். தொகை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அல்லது சிறியதாக இருந்தாலும் நீங்கள் முறையாக செலுத்தினீர்களா இல்லையா என்பதை கிரெடிட் ஸ்டேட்மென்ட் மற்றும் கிரெடிட் ஸ்கோர் வழியாகவும் அறிந்து கொள்ளலாம். கிரெடிட் ஸ்டேட்மென்ட் வங்கி அனுப்புகிறது. ஆனால், கிரெடிட் ஸ்கோர் யார் அனுப்புகிறார்கள், எப்படி உருவாக்கப்படுகிறது, அவை எப்படி உங்களின் கடன் ஹிஸ்டிரியை தெளிவாக கொடுக்க முடிகிறது என என்றாவது யோசித்திருக்கிறீர்களா?.
இந்தியாவை பொறுத்தவரை கடன் ஸ்டேட்மென்ட் மிகவும் வெளிப்படையானதாகவும் துல்லியமாகவும் இருப்பதை உறுதி செய்ய ரிசர்வ் வங்கி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்காக, 'Credit Information Reporting Directions, 2025' வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களின் கீழ், வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இப்போது கடன் வாங்குபவர்களின் தகவல்களை ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை, 7 மற்றும் 22 ஆம் தேதிகளுக்குள் கட்டாயமாக கடன் பணியகங்களுக்கு (credit bureau) அனுப்ப வேண்டும்.
இதுகுறித்து மைக்ரோசேவ் கன்சல்டிங்கின் BFSI தலைவர் சுபா பானு கூறுகையில், அடிக்கடி செய்யப்படும் அப்டேட்கள், தரவுகளில் உள்ள blind spots -களை குறைத்து கடன் முடிவுகளை மிகவும் பொறுப்பானதாக மாற்றும். credit bureau மூலம் உங்கள் கடன் அறிக்கை எவ்வாறு தயாரிக்கப்படுகிறது மற்றும் புதிய கடன் அறிக்கையிடல் முறை என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
புதிய கடன் அறிக்கையிடல் அமைப்பின் தாக்கம் (New Credit Reporting System)
முன்னதாக, கடன் தரவு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே புதுப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக கடன் தரவு 30 முதல் 40 நாட்களுக்கு அவுட்டேட்டாக இருந்தது. புதிய அமைப்பு, திருப்பிச் செலுத்துதல் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தாதது குறித்த தகவல்களை நிகழ்நேரத்தில் வழங்கும், இது வங்கிகளுக்கு சிறந்த risk assessment செய்ய உதவும். அனைத்து கடன் தகவல் நிறுவனங்களும் (CICகள்) இப்போது ஒரு சீரான மதிப்பெண் வரம்பை (300–900) ஏற்றுக்கொள்ள வேண்டும். இது கடன் வாங்குபவரின் கடன் தகுதியைப் புரிந்துகொள்வதை எளிதாக்கியுள்ளது.
இப்போது ஒவ்வொரு கடன் வாங்குபவரின் தரவும் அரசாங்க ஐடியுடன் (பான், பாஸ்போர்ட், வாக்காளர் ஐடி போன்றவை) இணைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து நிலுவையில் உள்ள /கட்டி முடிக்கப்பட்ட கடன்கள், தவணை தவறுதல்கள், சட்ட சிக்கல்கள் மற்றும் உத்தரவாததாரர் பொறுப்புகள் ஆகியவை ஒரே அறிக்கையில் அடங்கும். கடன் வாங்குபவரின் வெளிப்படையான அனுமதி இருந்தால், CIC-கள் இப்போது உரிமம் பெறாத நிறுவனங்களுடனும் கடன் தரவைப் பகிர்ந்து கொள்ள முடியும். இருப்பினும், இதற்கு கடுமையான தரவு பாதுகாப்பு தரநிலைகள் பொருந்தும்.
கடன் அறிக்கை என்றால் என்ன, அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
கடன் அறிக்கையில் ஒரு நபர் அல்லது நிறுவனத்தின் கடன் மற்றும் கடன் தொடர்பான முழுமையான தகவல்கள் உள்ளன. இதில் நீங்கள் எடுத்த கடன்கள், கிரெடிட் கார்டு பயன்பாடு, பணம் செலுத்தும் முறை, தவணைத் தவறுகள், காலதாமதம் மற்றும் கிரெடிட் ஸ்கோர் போன்ற தகவல்கள் அடங்கும். வங்கிகள் அல்லது பிற நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் credit bureau-க்கு வழங்கும் தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது. கடனை வழங்குவதற்கு முன் கடன் வாங்குபவரின் கடன் தகுதியை சரிபார்க்க இது உதவுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ