RBI KYC update rules 2025 : KYC அப்டேட் விஷயத்தில் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. இதன் கீழ், RBI இன் கீழ் வரும் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் KYC புதுப்பிப்பு விஷயத்தில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பொருத்தமான முறையில் அறிவிப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
RBI சுற்றறிக்கை
உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (Know Your Customer) -ன் சரியான நேரத்தில் அப்டேட்டில் அதிக எண்ணிக்கையிலான நிலுவையில் உள்ள வழக்குகளைக் கண்டதாக RBI ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. நேரடி நன்மை பரிமாற்றம் (DBT) / மின்னணு நன்மை பரிமாற்றம் (EBT)-த்தின் கீழ் நிதி பெறுவதற்காக திறக்கப்பட்ட கணக்குகள் மற்றும் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட கணக்குகள் ஆகியவை இதில் அடங்கும். வாடிக்கையாளர்களின் வசதிக்காக செயல்முறையை எளிதாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், KYC இன் சரியான நேரத்தில் புதுப்பிப்பு தொடர்பான வழிமுறைகள் திருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், வங்கி பிரதிநிதிகள் KYC-ஐ புதுப்பிக்கும் செயல்பாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும்
இந்த சூழலில், மத்திய வங்கி Know Your Customer (திருத்தம்) வழிகாட்டுதல்கள், 2025-ஐ வெளியிட்டது. புதிய அறிவுறுத்தல்களின்படி, ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள நிறுவனங்கள் (RE-கள்) தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் KYC-ஐ புதுப்பிக்க முன்கூட்டியே தெரிவிக்கும். KYC-ஐ சீரான இடைவெளியில் புதுப்பிக்கும் காலக்கெடுவிற்கு முன், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் KYC-ஐ புதுப்பிப்பது குறித்தது குறைந்தது மூன்று முன்கூட்டியே அறிவிப்புகளை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று ஆர்பிஐ புதிய அறிவிப்பு கூறியுள்ளது. இந்த அறிவிப்புகளில் குறைந்தபட்சம் ஒன்று கடிதம் மூலம் வழங்கப்படும்.
வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டல்
காலக்கெடு தேதிக்குப் பிறகும், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான இடைவெளியில் குறைந்தது மூன்று நினைவூட்டல்களை அனுப்பும். இவற்றில் குறைந்தபட்சம் ஒன்று கடிதம் மூலம் அனுப்பப்படும். முன்கூட்டியே அறிவித்த போதிலும் KYC தேவைகளுக்கு இணங்காத வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பை கொடுக்க வேண்டும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு இல்லையா? கவலை வேண்டாம்! ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம்
மேலும் படிக்க | ஏழைகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.. ஆண்டுக்கு வெறும் ரூ.20 தான்.. ரூ.2 லட்சம் கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ