)
RBI Repo Rate Cut December 2025: நீங்கள் வீட்டுக் கடன் (Home Loan) அல்லது கார் கடன் (Car Loan) வாங்கியிருப்பவரா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நற்செய்தி காத்திருக்கிறது. வரும் டிசம்பர் மாதம் உங்கள் கடனுக்கான மாதத் தவணை (EMI) தொகையில் கணிசமான குறைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வட்டி விகிதம் குறைந்தால் சாமானிய மக்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள ரிசர்வ் வங்கியின் (RBI) கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும், இது நேரடியாக உங்கள் EMI சுமையைக் குறைக்கும்.
பிரபல நிதி நிறுவனமான மார்கன் ஸ்டான்லி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, வரும் டிசம்பர் மாதம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் (0.25%) வரை குறைப்பை அறிவிக்கலாம். அப்படி நடந்தால், தற்போது 5.50 சதவீதமாக இருக்கும் ரெப்போ விகிதம் 5.25 சதவீதமாக குறையும்.
ஒருவர் 20 வருட கால அவகாசத்தில் ரூ.10 லட்சம் வீட்டுக் கடன் வாங்கியுள்ளார் என்று வைத்துக்கொள்வோம்.
பழைய வட்டி (9%): மாதம் செலுத்த வேண்டிய EMI சுமார் ரூ. 8,992.
புதிய வட்டி (8.75% - உத்தேசம்): வட்டி 0.25% குறைந்தால், புதிய EMI சுமார் ரூ. 8,850 ஆக இருக்கும்.
இதன் மூலம் மாதம் சுமார் ரூ. 142 சேமிக்கலாம். இது சிறிய தொகையாகத் தெரிந்தாலும், 20 வருடங்களில் இது பல ஆயிரங்களை மிச்சப்படுத்தும்.
ஒருவர் ரூ.50 லட்சம் கடன் சுமார் 20 வருடங்களுக்கு வாங்கியிருந்தால்
பழைய வட்டி (9%): மாதம் செலுத்த வேண்டிய EMI சுமார் ரூ. 44,960.
புதிய வட்டி (8.75%): வட்டி குறைந்த பின் EMI சுமார் ரூ. 44,125 ஆக மாறும்.
இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ. 835 வரை சேமிக்க முடியும்.
ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு ஏற்கனவே இரண்டு முறை வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது:
ஏப்ரல் 9, 2025: ரெப்போ விகிதம் 6.25%-லிருந்து 6%-ஆகக் குறைக்கப்பட்டது.
ஜூன் 9, 2025: ரெப்போ விகிதம் 6%-லிருந்து 5.50%-ஆகக் குறைக்கப்பட்டது.
ஜூன் மாதத்திற்குப் பிறகு இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது டிசம்பரில் மீண்டும் ஒரு குறைப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ