RBI Monetary Policy: ஆர்பிஐ அளித்த குட்நியூஸ், ரெப்போ ரேட் குறைந்தது, கடன் EMI குறையும்

RBI MPC Meeting 2025: வீட்டு கடன், கார் கடன், தனிநபர் கடன் வாங்கியவர்களுக்கு இன்று ஆர்பிஐ ஒரு மிகப்பெரிய நிவாரணத்தை அளித்தது. ஆர்பிஐ கவர்நர் சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (bps) குறைப்பதாக அறிவித்தார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 7, 2025, 02:57 PM IST
  • பணவியல் கொள்கை அறிக்கையின் முக்கிய அறிவிப்புகள்.
  • ரெப்போ ரேட் குறைந்தது
  • கடனுக்கான வட்டி குறையும்
RBI Monetary Policy: ஆர்பிஐ அளித்த குட்நியூஸ், ரெப்போ ரேட் குறைந்தது, கடன் EMI குறையும்

RBI MPC Meeting 2025: இந்திய ரிசர்வ் வங்கி இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு RBI இந்த முறை ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளது. ஆர்பிஐ  ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்துள்ளது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா  பணவியல் கொள்கை குழு (MPC) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். 

Add Zee News as a Preferred Source

Reserve Bank of India MPC

வீடு மற்றும் வாகனக் கடன் வாங்குபவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கிட்டத்தட்ட ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

சக்திகாந்த தாஸுக்குப் பிறகு, புதிய RBI ஆளுநராக பொறுப்பேற்றுள்ள சஞ்சய் மல்ஹோத்ராவின் தலைமையில் நடக்கும் முதல் பணவியல் கொள்கை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. புதன்கிழமை தொடங்கிய ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு (MPC) கூட்டம், ரெப்போ விகிதங்களை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 6.25 சதவீதமாக மாற்றும் முடிவை அறிவித்துள்ளது.

கோவிட் தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஊரடங்கையும் தொடர்ந்து, மே 2020 இல், RBI கடைசியாக ரெப்போ விகிதத்தை 40 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 4 சதவீதமாகக் குறைத்தது.

பணவியல் கொள்கை அறிக்கையின் முக்கிய அறிவிப்புகள்:

கொள்கை விகிதம்: 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.25% ஆகக் குறைக்கப்பட்டது
காரணம்: பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் துறை வளர்ச்சியை ஆதரிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

EMI -இல் என்ன தாக்கம் இருக்கும்?

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதங்களை குறைத்துள்ளதால் வங்கியில் கடன் வாங்குபவர்களின் வட்டி, EMI குறையும் வாய்ப்புகள் உள்ளன. கார் கடன், வீட்டு கடன், தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி குறைந்து EMI குறையும் என்பது நிம்மதி தரும் செய்தியாக உள்ளது. 

Repo Rate: ரெப்போ விகிதம் என்றால் என்ன?

இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதம் ரெப்போ விகிதம் எனப்படும். ரெப்போ விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள் சாமானியர்களையும் பாதிக்கும். வீடு அல்லது கார் கடன் வாங்கியுள்ளவர்களுக்கு ரெப்போ விகிதம் EMI-யில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிகள் கடன் வாங்குவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும், அதற்கு ஈடாக வாடிக்கையாளர்களிடமிருந்து எவ்வளவு வட்டி வசூலிக்கப்படும் என்பதையும் ரெப்போ விகிதம் தீர்மானிக்கிறது. அதாவது, ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை அதிகரித்தால், வங்கிகள் மீது சுமை அதிகரிக்கும். இதனால் வாடிக்கையாளர்களின் வட்டியின் அளவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | PM Kisan முக்கிய அப்டேட்: இந்த நாளில் வருகிறது 19வது தவணை, விவசாயிகள் செய்யவேண்டியது இதுதான்

மேலும் படிக்க | LIC: தினமும் ரூ.200 குறைவாக சேமித்து... ஓய்வுகாலத்தில் பெரிய தொகையை பெறலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News