வீட்டுக்கடன், வாகன கடன் வாங்கியவர்களுக்கு விடுவு காலமா? ஏப்ரல் 8 வரும் முக்கிய அப்டேட்!

இந்திய ரிசர்வ் வங்கி, புதிய நிதியாண்டின் முதல் நாணய கொள்கை கூட்டத்தை சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. 2 நாட்கள் நடைப்பெற்ற இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள், வரும் ஏப்ரல் 8ஆம் தேதியான நாளை காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Apr 7, 2026, 07:53 PM IST
வீட்டுக்கடன், வாகன கடன் வாங்கியவர்களுக்கு விடுவு காலமா? ஏப்ரல் 8 வரும் முக்கிய அப்டேட்!

உலக பொருளாதாரம் கடந்த சில நாட்களாக தடதடவென சரிந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி, இப்படி ஒன்றாம் தேதி புதிய நிதியாண்டின் (2026-27) முதல் நாணய கொள்கை கூட்டத்தை கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தின் முடிவுகள், ஏப்ரல் 8 ஆம் தேதியான நாளை காலை 10 மணிக்கு அறிவிக்கப்பட இருக்கின்றன. ஈரான் போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோக பாதிப்பானது உலக நாடுகள் பலவற்றில் பண வீக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Add Zee News as a Preferred Source

இந்த சூழலில் தான், இந்திய ரிசர்வ் வங்கி முதல் நாணய கொள்கைகளை அறிவிக்க இருக்கிறது. தற்போது வரை, இந்தியாவில் ரீ-டைல் சந்தைகளில் எரிபொருள் விலையானது உயரவில்லை. இருப்பினும், மொத்த விற்பனை எரிபொருள், வணிக சிலிண்டர்களின் விலை, எல்பிஜி தட்டுப்பாடு உள்ளிட்ட பல கச்சா எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருட்களின் விலையானது, விமான எரிபொருள் விலையினை உயர்த்தியிருக்கிறது. இதையடுத்து, உணவகங்களில் உணவுகளின் விலை அதிகரிப்பு, காகறிகளின் விலை அதிகரிப்பு உள்ளிட்டவையும் நிகழ்ந்து வருகிறது.

வட்டி விகிதம்:

பொதுவாக, ரிசர்வ் வங்கி இப்படி நாணய கொள்கைக்ளை அறிவிக்கும் போது, வட்டி விகிதங்களில் சில மாற்றங்களை செய்யும். பென்ச்மார்க் வட்டி விகிதங்கள் எனப்படும் ரெப்போ விகிதம், நாட்டின் பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதை குறித்து நாளை ஒரு முக்கிய அப்டேட் வெளியாகலாம். இது, சாமானிய மக்களுக்கு உதவுமோ இல்லையோ, முதலாளிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் உதவும். 

MPC

RBI 2 நாள் நாணய கொள்கை கூட்டத்தை, ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு நடத்துகிறது. இக்குழு, நாட்டின் வட்டி விகித நிலையை ஆராய்வதோடு பணவீக்கத்தின் போக்கு என்ன என்பதையும் பிற பொருளாதார வளர்ச்சி குறித்தும் விரிவாக ஆய்வு செய்து, ஏப்ரல் 8ஆம் தேதியான நாளை தனது முடிவுகளை வெளியிட இருக்கிறது.

எதிப்பார்ப்பு:

பொருளாதார நிபுணர்களின் கருத்தின் படி, ஆர்பிஐ வட்டிவிகிதத்தை மாற்றாமல் வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதே சமயத்தில், பணவீக்கம் அதிகரிக்கும் சாத்தியம் இருக்கிறது என்பதால், கடுமையான முடிவுகளும் கூட எடுக்கப்படலாம். இதையடுத்து, எம்பிசி கூட்டம் முதலீட்டாளர்கள் வங்கிகள் மற்றும் பொதுமக்களுக்கு முக்கியமானதாக மாறியிருக்கிறது.

மேலும் படிக்க | EPFO எச்சரிக்கை: உங்கள் PF கணக்கில் இந்த தேதிகள் தவறு உள்ளதா? பணம் கிடைப்பதில் சிக்கல்!

மேலும் படிக்க | அகவிலைப்படி அதிகரிப்பு: டிஏ, சம்பளம் எவ்வளவு உயரும்? அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் எப்போது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News