)
RBI Repo Rate Latest News: இந்திய ரிசர்வ் வங்கி இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்துள்ளது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பணவியல் கொள்கை குழு (MPC) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
#WATCH | RBI Governor Sanjay Malhotra says, "... The MPC decided to reduce the policy Repo Rate under the liquidity adjustment facility by 50 basis points to 5.5%. This will be with immediate effect. Consequently, the Standing Deposit Facility (STF) Rate shall stand adjusted to… pic.twitter.com/siUUlBmcrG
— ANI (@ANI) June 6, 2025
கடன் வாங்கியவர்களுக்கு நல்ல செய்தி
வீடு மற்றும் வாகன கடன் வாங்குபவர்களுக்கு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பெரும் நிவாரணத்தை அளிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை முக்கிய வட்டி விகிதங்களைக் குறைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது.
முன்னாள் ஆர்பிஐ கவர்னராக இருந்த சக்திகாந்த தாஸுக்குப் பிறகு, புதிய RBI ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா மத்திய வங்கியில் பொறுப்பேற்றார். இது அவரது மூன்றாவது நாணயக் கொள்கையாகும். புதன்கிழமை தொடங்கிய ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு (MPC) கூட்டம், ரெப்போ விகிதங்களை 50 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 5.50 சதவீதமாக மாற்றும் முடிவை அறிவித்தது.
நாணயக் கொள்கைக் குழு ஒருமனதாக கொள்கை விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 5.50 சதவீதமாக மாற்ற முடிவு செய்துள்ளதாக RBI ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
ஏப்ரல் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கடைசி MPC கூட்டத்தில், RBI ஏற்கனவே ரெப்போ விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்திருந்தது. இது 6.25 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைத்தது. பிப்ரவரி மாத தொடக்கத்தில், மத்திய வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து, 6.5 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாகக் குறைத்தது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை மிகவும் இணக்கமான கொள்கை அணுகுமுறையை நோக்கிய தெளிவான மாற்றத்தைக் காட்டுகிறது.
பணவீக்கம் தளர்த்தப்பட்டு, ஏற்கனவே இரண்டு தொடர்ச்சியான விகிதக் குறைப்புகளை ஆர்பிஐ செய்த நிலையில், ரிசர்வ் வங்கியின் விகிதக் குறைப்பு சந்தை எதிர்பார்ப்புகளுடன் மிகவும் ஒத்துப்போகிறது.
Repo Rate: ரெப்போ விகிதம் என்றால் என்ன?
இந்திய ரிசர்வ் வங்கி, எந்த விகிதத்தில் வங்கிகளுக்கு கடன் கொடுக்கிறதோ அது ரெப்போ விகிதம் எனப்படுகிறது. ரெப்போ விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள் சாமானிய மக்களையும் பாதிக்கிறது. கார் கடன், வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரெப்போ விகித மாற்றங்கள் EMI-யில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கிகள் மலிவான வட்டியில் கடன்களைப் பெற முடிந்தால், வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த விகிதத்தில் க்டன் கிடைக்கும். வங்கிகள் கடன் வாங்குவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும், அதற்கு ஈடாக வாடிக்கையாளர்களிடமிருந்து எவ்வளவு வட்டி வசூலிக்கப்படும் என்பதையும் ரெப்போ விகிதம் தீர்மானிக்கிறது. அதாவது, ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை அதிகரித்தால், வங்கிகள் மீது சுமை அதிகரிக்கும். இதனால் வாடிக்கையாளர்களின் வட்டியின் அளவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ