RBI New Rules On Gold Loan: தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 2025ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இருப்பினும், தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. எவ்வளவு விலை ஏறினாலும், தங்கத்தை மக்கள் தொடர்ந்து வாங்கி குவித்தே வருகின்றனர்.
தங்கத்தை அடமானம் வைப்பது இனி கஸ்டம்
தங்கம் விலை உயர்ந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில், தங்கத்தை அடமானம் தங்களது தேவைகளை மக்கள் பூர்த்தி செய்து வருகின்றனர். தங்கம் அடமானம் வைக்கும் சில விதிமுறைகளில் இந்திய ரிசர்வ் வங்கி சில மாற்றங்களை அவ்வப்போது கொண்டு வருகிறது. இதன் மூலம், சில மோசடிகளும் அரங்கேறுவது தவிர்க்கப்படுகிறது. அந்த வகையில், தற்போதும் இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை அடமானம் வைப்பது குறித்து புதிய விதிகளை கொண்டுள்ளது.
அதாவது, வங்கிகளும், நிதி நிறுவனங்களும், நகை கடைகளும் வேறொருவர் அடகு வைத்த தங்கத்தை வைத்து, மற்றொருவருக்கு கடன் வழங்க கூடாது என இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதாவது, தங்கத்தின் உரிமையாளருக்கு மட்டும் கடன் வழங்க அனுமதிக்கப்படுகிறது. இந்த விதிமுறையை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
வங்கியாளர்கள் கூறுகையில், தங்கத்தை அடகு வைக்கும் உரிமையாளர்ளுக்கு கடன் வழங்க உரிமை உள்ளது. ரிசர்வ் வங்கி இப்போது அடமானம் வைத்த தங்கத்தை வைத்த மற்றவர்களுக்கு கடன் தர அனுமதியில்லை என கூறுகிறது. எனவே, அத்தகைய கடன்களை வழங்கிய கடன் வழங்குநர்கள் அவற்றைப் புதுப்பிக்க முடியாது.
ஆர்பிஐ போட்ட புது உத்தரவு
மேலும், தங்கத்தை மறு அடமானம் கடன் வழங்கும் நடைமுறை வங்கிகளில் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். பவுன் ப்ரோக்கர்கள் தான் அதிகளவில் இதுபோன்று தங்கத்தை வைத்து வேறொருவருக்கு கடன் வழங்கி வருகின்றனர் என்றும் இதனால், எவ்வளவு நகைகள் இதுபோன்று அடமானம் வைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிவது சிரமம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவதற்கான விதிமுறைகளை ஜூன் 2025 ஆர்பிஐ திருத்தியது. அதில் அடகு வைத்த தங்கத்தின் மீது மீண்டும் கடன் வழங்குவதை தடை செய்தது. மேலும், "ஒரு கடன் வழங்குபவர் தனது கடன் வாங்குபவர்களால் அடமானம் வைக்கப்பட்ட தங்கம் அல்லது வெள்ளியை மீண்டும் அடமானம் வைத்து கடன்களைப் பெறக்கூடாது.
அல்லது அத்தகைய கடன் வழங்குபவர்கள், நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுக்கு அடமானமாக தங்கம் அல்லது வெள்ளி பிணையத்தை ஏற்றுக்கொண்டு பிற கடன் வழங்குபவர்கள், நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுக்கு கடன்களை வழங்கக்கூடாது" என்று ரிசர்வ் வங்கியின் தங்கக் கடன் விதிமுறைகளில் திருத்தி கூறியுள்ளது.மேலும், கடன் வழங்குபவர்கள் தங்கத்தை உண்மையான உரிமையாளர் என்பதை சரி பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. இதன் மூலம், கடன் வாங்குபவர்கள் மட்டுமே தங்க கடன் பெறுவதை ஆர்பிஐ புதிய விதி தடுக்கிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: இலவசம் தான்! உங்கள் குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்வது ஈஸி.. எப்படி தெரியுமா?
மேலும் படிக்க: பான் கார்டு வச்சிருக்கீங்களா? உடனே செக் பண்ணுங்க.. டிசம்பர் 31 கடைசி நாள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









