PIB Fact Check, cyber fraud alert : PIB ஃபேக்ட் செக் வெளியிட்டுள்ள அந்த எச்சரிக்கை என்னவென்றால், RBI-யைப் போல நடித்து வரும் போலி வாய்ஸ் கால் மோசடி (கணக்கை பிளாக் செய்யப்படும் என பயமுறுத்தல்), 'SBI ரிவார்ட்ஸ்' போலி ஆப் மோசடி (வைரல் செய்திகள் மூலம் பரப்பப்படும் தீங்கிழைக்கும் APK கோப்புகள்) குறித்து தெரிவித்துள்ளது.
1. RBI போலி வாய்ஸ் கால் மோசடி – என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?
PIB ஃபேக்ட் செக் ஒரு போலி RBI வாய்ஸ் மெயில் (voicemail) மோசடியை அடையாளம் கண்டுள்ளது. இதில்: "உங்கள் கிரெடிட் கார்டில் சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனை இருப்பதால், உங்கள் வங்கிக் கணக்கு பிளாக் செய்யப்படும்" என்று பொதுமக்கள் பயமுறுத்தப்படுகிறார்கள். இதை தவிரக்க வேண்டும் என்றால் ஒரு எண்ணை அழுத்தவும்" என்று அந்த மோசடி அழைப்பில் கூறப்பட்டுள்ளது. இது ஒரு பிஷிங் (phishing) தந்திரம். அந்த வாயிஸ் மெயிலில் உள்ளது போல் நீங்கள் செய்தீர்கள் என்றால் உங்கள் வங்கி விவரங்கள், OTP அல்லது பணம் எல்லாம் நொடியில் காணாமல் போய்விடும்.
எப்படி தவிர்க்கலாம்?
- RBI அல்லது எந்த வங்கியும் கணக்கை பிளாக் செய்யும் எச்சரிக்கைக்காக வாய்ஸ் கால்/எஸ்எம்எஸ் அனுப்பாது.
- OTP, கார்டு விவரங்கள், UPI பாஸ்வேர்ட் போன்றவற்றை யாருக்கும் சொல்லாதீர்கள்.
- சந்தேகமான செய்தி/கால் வந்தால், வங்கி கஸ்டமர் கேர் (toll-free number) ஐ தொடர்பு கொள்ளவும்.
PIB எச்சரிக்கை: RBI-யிடமிருந்து வந்ததாக கூறும் போலி வாய்ஸ் மெயில்களில் நம்பிக்கை வைக்காதீர்கள். இது ஒரு மோசடி என தெரிவித்துள்ளது.
2. SBI ரிவார்ட்ஸ் போலி ஆப் மோசடி – என்ன ஆபத்து?
பரவலாக WhatsApp/எஸ்எம்எஸ்-ல் பரப்பப்படும் ஒரு போலி செய்தி என்னவென்றால் "எஸ்பிஐ ரிவார்ட்ஸ் கிடைக்கிறது! இந்த APK ஐ டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்" என்று கூறப்படுகிறது. இந்த APK கோப்பு (Android Package Kit) ஒரு மால்வேர் (malware) – உங்கள் ஃபோனில் நுழைந்து வங்கி விவரங்கள், OTP, பணம் அனைத்தையும் திருடும்.
எப்படி பாதுகாக்கலாம்?
- SBI எந்த APK கோப்புகளையும் SMS/WhatsApp-ல் அனுப்பாது.
- Google Play Store-ல் இல்லாத ஆப்ஸ் டவுன்லோட் செய்ய வேண்டாம்.
- "SBI ரிவார்ட்ஸ்" போன்ற போலி ஆப்ஸ்களில் நம்பிக்கை வைக்காதீர்கள்.
PIB & SBI அதிகாரப்பூர்வ எச்சரிக்கை: எஸ்பிஐ ஒருபோதும் ரிவார்ட்ஸ் க்ளெயிம் செய்ய APK லிங்குகள் அனுப்பாது. இது மோசடி.
கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
- OTP, UPI PIN, வங்கி லாகின் ஐடி/பாஸ்வேர்ட் யாரிடமும் சொல்லாதீர்கள்.
- Play Store/App Store-ல் மட்டுமே ஆப்ஸ் டவுன்லோட் செய்யவும்.
- RBI, SBI போன்றவை நேரடியாக கால்/மெசேஜ் அனுப்பாது – எப்போதும் அதிகாரப்பூர்வ வலைத்தளம்/ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ளுங்கள்.
- சந்தேகமான செய்தி வந்தால், PIB Fact Check (https://factcheck.pib.gov.in/) ஐ தொடர்பு கொள்ளுங்கள்.
எச்சரிக்கையாக இருங்கள் – உங்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை மோசடியாளர்களிடம் இழந்துவிடாதீர்கள்
மேலும் படிக்க | RBI புதிய விதிகள்: செயல்படாத கணக்குகள், கோரப்படாத வைப்புத்தொகை.... சமீபத்திய அப்டேட்
மேலும் படிக்க | FD வட்டியை குறைத்து... வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்துள்ள சில முக்கிய வங்கிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ