தனியார் ஊழியர்களின் ஓய்வு கால கவலைகளை நீக்கும் சில சிறந்த பென்ஷன் திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டங்களில் முதலீடு செய்து வந்தால், அரசு ஊழியரை போல் ஓய்வூதியம் போன்ற வழக்கமான வருமானத்தை பெறலாம்.

இளம் வயதில், சம்பாதிக்கத் தொடங்கும் போதே ஓய்வூதியத்தைத் திட்டமிடுவது அவசியமாகிவிட்டது. ஓய்வூதியத்தை சரியாக திட்டமிடவில்லை என்றால், வயதான காலத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தனியார் வேலை செய்பவர்களின் ஓய்வு கால கவலைகளை நீக்கும் சில சிறந்த பென்ஷன் திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. அதாவது அரசு வேலை இல்லாவிட்டாலும் இந்த திட்டங்களில் முதலீடு செய்து வந்தால், அரசு ஊழியரை போல் ஓய்வூதியம் போன்ற வழக்கமான வருமானத்தை பெற்று நிம்மதியாக வாழலாம்.
தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS)
தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம். NPS திட்டத்தில் முதலீடு செய்யும் நபர்கள், 80C பிரிவின் கீழ் ₹1.5 லட்சம் வரையிலும், 80CCD(1B) பிரிவின் கீழ் கூடுதலாக ₹50,000 வரையிலும் வரிச் சலுகைகளைப் பெறலாம். வழக்கமான பங்களிப்புகள் மற்றும் வரிச் சலுகைகளை வழங்குவதால் இந்தத் திட்டம் நீண்ட கால ஓய்வூதியத் திட்டத்திற்கு ஏற்றது. இதன் மூலம் கோடிகளில் நிதியை சேர்த்து, முதலீட்டின் அளவுக்கு ஏற்ப, ரூ.50,000, ரூ.80,000 என மாத வருமானம் பெறலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
அஞ்சல் அலுவலகத்தின் PPF திட்டம் ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். இந்த அரசாங்க திட்டத்தில், முதலீட்டாளர்கள் 7.1% வட்டி கிடைக்கிறது. இதில் குறைந்தபட்ச ஆண்டு முதலீடு ரூ.500, அதிகபட்சம் ரூ.1.5 லட்சம். PPF திட்டத்திற்கு EEE வகுப்பின் (விலக்கு-விலக்கு-விலக்கு) நிலையைக் கொண்டுள்ளது, அதாவது முதலீட்டுத் தொகை, பெறப்பட்ட வட்டி மற்றும் முதிர்வுத் தொகை என எதற்கும் வரி செலுத்த வேண்டியதில்லை. நீண்ட கால முதலீட்டு திட்டமான இது, வரிச் சலுகைகள் ஓய்வூதியத் திட்டமிடல் போன்றவற்றுக்கான நம்பகமான முதலீடாக அமைகிறது. இதன் மூலம் உங்கள் முதலீட்டை பொறுத்து ரூ. 1 லட்சம் என்ன அதற்கு மேலும் கூட மாத வருமானம் பெறலாம்.
பிரதம மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY)
பிரதம மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) என்பது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான உத்தரவாத ஓய்வூதியத் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ், 7.4% என்ற நிலையான வட்டி விகிதம் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ₹15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதில் முதலீட்டாளர் முதலீடுகளுக்கு ஏற்ப மாதாந்திர, காலாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையில் நிலையான ஓய்வூதியத்தைப் பெறுகிறார். முதிர்ச்சியின் போது முதலீடு செய்யப்பட்ட அசல் தொகை திரும்பப் பெறப்படும். திட்ட காலத்தில் முதலீட்டாளர் இறந்துவிட்டால், முதலீட்டுத் தொகை முழுமையாக நாமினிக்கு திருப்பித் தரப்படும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டங்கள் (SCSS)
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டங்கள் (SCSS) என்பது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கும் திட்டங்களில் ஒன்றாகும். SCSS திட்டங்களுக்கு தற்போது 8.2% வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ₹30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள். இதனை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம். ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி செலுத்தப்படுகிறது, இது வழக்கமான வருமானத்தை வழங்குகிறது. SCSS திட்டத்தின் செய்யப்படும் முதலீடுகள் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு பெற தகுதியுடையது. ஆனால் அதில் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ