)
SIP என்பது உங்கள் விருப்பப்படி மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒரு நிலையான தொகையை தொடர்ந்து முதலீடு செய்ய அனுமதிக்கும் ஒரு முறையான முதலீட்டுத் திட்டம். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திற்கு உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் கழிக்க அறிவுறுத்துவதன் மூலம், நல்ல வருமானம் தரும் தேர்ந்தெடுக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
நல்ல வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்டில் ஒரு முறையான முதலீட்டுத் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ. 20,000 முதலீடு செய்வதன் மூலம், ரூ.12 கோடி அளவுக்கு கணிசமான நிதியை உருவாக்க எத்தனை ஆண்டுகள் ஆகலாம் என்பதைக் எளிய கணக்கீடுகளின் உதவியுடன் அறிந்து கொள்ளலாம்.
முறையான முதலீட்டுத் திட்டம் (SIP)
SIP என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான ஒரு வழியாகும். இதன் மூலம் முதலீட்டாளர்கள் தங்கள் விருப்பப்படி மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் தங்கள் நிதியை சீரான முறையில் முதலீடு செய்யலாம். உங்கள் வசதி மற்றும் விருப்பத்தைப் பொறுத்து தினசரி, வாராந்திர, மாதாந்திர, காலாண்டு அல்லது ஆண்டுதோறும் முதலீடு என எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்.
SIP கணக்கீடு
தேவையான கார்பஸ்: ரூ.12 கோடி
மாதாந்திர முதலீடு: ரூ.20,000
சராசரி ஆண்டு வருமானம்: 12 சதவீதம்
மாதந்தோறும் ரூ.20,000 SIP மூலம் 10 ஆண்டுகளில் கிடைக்கும் கார்பஸ்
மொத்த முதலீட்டுத் தொகை ரூ.24,00,000 ஆகவும், மூலதன ஆதாயங்கள் ரூ.20,80,718 ஆகவும், மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய கார்பஸ் ரூ.44,80,718 ஆகவும் இருக்கும்.
மாதந்தோறும் ரூ.20,000 SIP மூலம் 20 ஆண்டுகளில் கிடைக்கும் கார்பஸ்
முதலீட்டுத் தொகை ரூ.48,00,000 ஆகவும், மூலதன ஆதாயங்கள் ரூ.1,35,97,147 ஆகவும், மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய கார்பஸ் ரூ.1,83,97,147 ஆகவும் இருக்கும்.
மாதந்தோறும் ரூ.20,000 SIP மூலம் 30 ஆண்டுகளில் கிடைக்கும் கார்பஸ்
முதலீட்டுத் தொகை ரூ.72,00,000 ஆகவும், மூலதன ஆதாயங்கள் ரூ.5,44,19,464 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.6,16,19,464 ஆகவும் இருக்கும்.
மாதந்தோறும் ரூ.20,000 SIP மூலம் 36 ஆண்டுகளில் கிடைக்கும் கார்பஸ்
முதலீட்டுத் தொகை ரூ.86,40,000 ஆகவும், மூலதன ஆதாயங்கள் ரூ.11,50,57,947 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.12,36,97,947 ஆகவும் இருக்கும்.
ஓய்வு பெறும் போது கையில் ரூ.12 கோடி
உங்களது 24 வது வயதில் மாதந்தோறும் ரூ.20,000 முதலீடு செய்யத் தொடங்கினால், 60வது வதியில் ஓய்வு பெறும் போது, உங்கள் கையில் ரூ.12 கோடி இருக்கும்.
SIP முதலீட்டில் கிடைக்கும் கூட்டுவட்டி வருமான நன்மை
SIP முதலீடு சிறந்த முறையில் பணம் சம்பாதிக்க உதவும் முதலீடாக இருக்கும். வங்கி ஆர்டி திட்டம் போன்ற முதலீடான இதன் மூலம் சிறிய தொகையாக செய்யப்படும் நீண்ட கால முதலீடு மூலம் லட்சக்கணக்கான நிதியை உருவாக்க முடியும். SIP முதலீட்டில் கூட்டுவட்டி வருமான நன்மை கிடைப்பதால் ஆயிரங்களை கோடிகளாக்குவது எளிது.
பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ