ஓய்வு காலத்திற்கான சரியான திட்டமிடல் இருந்தால், வயதான காலத்தில் எப்படி வாழ்க்கை நடத்துவது, சிகிச்சை உள்ளிட்ட செலவுகளை சமாளிப்பது என்ற கவலை இருக்காது. நீங்கள் 30 வயதுடையவராக இருந்தாலும் சரி அல்லது 40 வயதுகளில் இருப்பவர் ஆனாலும் சரி, பாதுகாப்பான நிதி எதிர்காலத்தை உருவாக்குவதற்கு தொலைநோக்குப் பார்வையும்,டர் முதலீடும் தேவை. ஓய்வூதியம் போல் வழக்கமான வருமானத்தை பெற உறுதி செய்வது என்பது உங்கள் வாழ்க்கை முறையைப் பராமரிக்கவும், உங்கள் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், நிதி அழுத்தமின்றி வாழவும் உறுதி செய்வதாகும்.நீங்கள் எவ்வளவு சீக்கிரம் திட்டமிடத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு எளிதாக ஒரு நல்ல நிதியை உருவாக்க முடியும்.
சிறந்த ஓய்வூதியத் திட்டம்
நீங்கள் வருமானத்தை அள்ளிக் கொடுக்கும், SIP என்னும் பரஸ்பர முதலீட்டை தொடங்குவதானாலும் சரி, சிறந்த ஓய்வூதியத் திட்டம் அல்லது PPF, NPS போன்ற ஓய்வூதியத் திட்டங்களானாலும் சரி, முதலீட்டை தொடங்குவதற்கு முன் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில காரணிகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கூட்டு வட்டி வருமானத்தின் பலனை அதிகபட்சம் பெறவது எப்படி
சம்பாதிக்க தொடங்கிய உடனேயே எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு அதிக வருமானம் பெறலாம். உங்கள் பணம் கூட்டு வட்டி வருமானத்தின் மூலம் ஆயிரம் கோடிகளாகும். 60 வயது ஓய்வூதிய இலக்கோடு 25 வயதில் சேமிக்கத் தொடங்குவது 35 ஆண்டுகள் காலம் தொடர் முதலீடு செய்யும் வாய்ப்பினை அளிக்கிறது. இதனால் கூட்டு வட்டி வருமானத்தின் பலனை அதிகபட்சம் பெறலாம்.
உங்கள் ஓய்வூதிய நிதியைக் கணக்கிடுங்கள்
ஓய்வூதிய நிதியை திட்டமிடுகையில், கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, ஓய்வுக்குப் பிறகு உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை மதிப்பிடுவது. ஓய்வு பெறும் போது உங்கள் வருடாந்திர செலவுகளைப் போல 20-25 மடங்கு அதிகமாக ஓய்வூதிய நிதியை உருவாக்குவதே பொதுவான விதி. இந்த மதிப்பீடு பணவீக்கம், வாழ்க்கை முறை தேர்வுகள், உங்களைச் சார்ந்திருக்கும் மக்கள் மற்றும் எதிர்பாராத அவசரநிலைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பணவீக்கம், சுகாதாரச் செலவுகள்
பணவீக்கம் செலவு செய்யும் திறனைக் குறைக்கிறது. இன்று ரூ.50,000 ஓய்வூதியம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு போதுமானதாக இருக்காது. ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சராசரி பணவீக்க விகிதம் 4% முதல் 6% வரை உள்ளது. மருத்துவ செலவுகள் தொடர்பான பணவீக்கம் ஆண்டுதோறும் 14% ஆகும்.
உங்கள் முதலீட்டை பல்வகைப்படுத்துங்கள்
எப்போதுமே பணத்தை ஒரே இடத்தில் முதலீடு செய்யக் கூடாது. பங்கு, கடன் மற்றும் மத்திய அரசாங்க ஆதரவு பெற்ற திட்டங்கள் என பனமுகப்படுத்தி முதலீடு செய்வது வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை இரண்டையும் உறுதி செய்கிறது. இளம் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் அதிக நாட்டம் கொண்டிருக்கலாம். அதே நேரத்தில் வயதானவர்கள் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் அல்லது கடன் பரஸ்பர நிதிகள் போன்ற பாதுகாப்பான வழிகளில் முதலீடு செய்ய வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









