மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், ஆயிரங்களை கோடிகளாக்கும் வல்லமை படைத்தவை. பரஸ்பர நிதியங்களில் ஒரு முறையான முதலீட்டு உத்தி மூலம் (SIP), மாதம் ரூ.500 என்ற அளவில் கூட முதலீடு செய்யலாம். அதோடு, முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடு செய்த நிதியை, தேவைப்படும் போது திரும்பப் பெறவோ அல்லது வசதி மற்றும் விருப்பதிற்கு ஏற்ப அதனை நிறுத்தவோ அல்ல்து மீண்டு தொடரவோ முடியும்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செய்யப்படும் நீண்ட் கால முதலீடு மூலம் கூட்டு வட்டி வருமானத்தில் பலனை முழுமையாக பெறலாம். கூட்டு வட்டி வருமானத்தின் சக்தி ஆயிரங்களை கோடிகளாக்கும் இப்போது, SIP மூலம் மாதந்தோறும் ரூ.14,000 முதலீடு செய்வதன் மூலம் ரூ.13 கோடி கார்பஸை எவ்வளவு விரைவாக உருவாக்க முடியும் என்பதை எளிய கணக்கீடு மூலம் அறிந்து கொள்வோம்.
முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) என்றால் என்ன?
SIP என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான ஒரு பிரபலமான வழியாகும். ஏனெனில் இது முதலீட்டாளர்கள் தங்கள் நிதியை அவர்கள் விரும்பும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சீராகச் செலுத்த அனுமதிக்கிறது. உங்கள் விருப்பத்தைப் பொறுத்து நீங்கள் தினசரி, வாராந்திர, மாதாந்திர, காலாண்டு அல்லது ஆண்டுதோறும் என முதலீடு செய்யலாம். மாத முதலீடுகள் இதில் சிறந்த தேர்வாக இருக்கும்
SIP எவ்வாறு செயல்படுகிறது?
ஒரு முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) ஒரு நிலையான தொகையை தொடர்ந்து முதலீடு செய்ய உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துடன் ஒரு SIP திட்டத்தை அமைத்து, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாந்திரம் போன்ற வழக்கமான இடைவெளியில் கழித்து, அதை நீங்கள் தேர்ந்தெடுத்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய அறிவுறுத்தலாம். இந்த அணுகுமுறை நீங்கள் ஒழுக்கமான முறையில் முதலீடு செய்யவும், காலப்போக்கில் செல்வத்தைபன்மடங்காக பெருக்கவும் உதவுகிறது. நீண்ட கால முதலீட்டிலிருந்து அதிகபட்ச வருமானத்தைப் பெற, ஒருவர் சம்பாதிக்க ஆரம்பிக்கும் போதே முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். இல்லை என்றால், 30 - 35 வயதிலாவது தொடங்குவது வல்லது.
SIP கணக்கீடு
இலக்கு கார்பஸ்: ரூ.13 கோடி கார்பஸ்
மாதாந்திர முதலீடு: ரூ.14,000
ஆண்டு வருமானம்: 12 சதவீதம்
ரூ.14,000 மாதாந்திர SIP மூலம் 10 ஆண்டுகளில் கிடைக்கும் கார்பஸ்
முதலீட்டுத் தொகை ரூ.16,80,000 ஆகவும், மூலதன ஆதாயங்கள் ரூ.14,56,502 ஆகவும், மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய கார்பஸ் ரூ.31,36,502 ஆகவும் இருக்கும்.
ரூ.14,000 மாதாந்திர SIP மூலம் 20 ஆண்டுகளில் கிடைக்கும் கார்பஸ்
முதலீட்டுத் தொகை ரூ.33,60,000 ஆகவும், மூலதன ஆதாயங்கள் ரூ.95,18,003 ஆகவும், மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய கார்பஸ் ரூ.1,28,78,003 ஆகவும் இருக்கும்.
ரூ.14,000 மாதாந்திர SIP மூலம் 30 ஆண்டுகளில் கிடைக்கும் கார்பஸ்
முதலீட்டுத் தொகை ரூ.50,40,000 ஆகவும், மூலதன ஆதாயங்கள் ரூ.3,80,93,625 ஆகவும், மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய நிதி ரூ.4,31,33,625 ஆகவும் இருக்கும்.
மாதந்தோறும் ரூ.14,000 SIP மூலம் 40 ஆண்டுகளில் கிடைக்கும் கார்பஸ்
முதலீட்டுத் தொகை ரூ.67,20,000 ஆகவும், மூலதன ஆதாயங்கள் ரூ.13,03,82,994 ஆகவும், மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய நிதி ரூ.13,71,02,994 ஆகவும் இருக்கும். மாதந்தோறும் ரூ.14,000 முதலீட்டில் ரூ.13 கோடிக்கு மேல் கார்பஸை திரட்ட தோராயமாக 40 ஆண்டுகள் ஆகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.)
மேலும் படிக்க | Mutual Fund: 28% முதல் 34% வரை வருமானம் தந்த டாப் 6 மியூச்சுவல் பண்டுகள் இவை தான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ