NPS: ரூ.4,500 மாத முதலீட்டில்... ஓய்வுக்கு பின் மாதம் ரூ.52,000 பென்ஷன் பெறலாம்

NPS Pension Calculator: தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இளம் வயதிலேயே சிறிய அளவில் முதலீட்டை செய்வதன் மூலம், ஓய்வு பெறும் போது, பெரும் தொகையை கையில் வைத்திருப்பதோடு, ஓய்வு காலத்தில் வழக்கமான ஓய்வூதியத்தையும் பெறலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 3, 2025, 12:45 PM IST
  • ஓய்வு காலத்தில் வழக்கமான ஓய்வூதியத்தையும் பெற உதவும் NPS திட்டம்.
  • 60 வயதில் ஆடம்பர வாழ்க்கை வாழ 21 வயதில் திட்டமிடவும்.
  • ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.52,000 ஓய்வூதியம் கிடைக்கும்.
NPS: ரூ.4,500 மாத முதலீட்டில்... ஓய்வுக்கு பின் மாதம் ரூ.52,000 பென்ஷன் பெறலாம்

NPS Pension Calculator: ஓய்வுக்குப் பிறகு உங்கள் வாழ்க்கையை அடுத்தவரை சாராமல் வாழ,மாதம் தோறும் பென்ஷனைப் போல் ஒரு நிலையான தொகையை வருமானமாக பெற, தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இளம் வயதிலேயே சிறிய அளவில் முதலீட்டை செய்வதன் மூலம், ஓய்வு பெறும் போது, பெரும் தொகையை கையில் வைத்திருப்பதோடு, ஓய்வு காலத்தில் வழக்கமான ஓய்வூதியத்தையும் பெறலாம். இது எப்படி சாத்தியம், எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் எளிய கணக்கீட்டின் மூலம் புரிந்து கொள்வோம்.

Add Zee News as a Preferred Source

ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானத்தை உறுதி செய்ய உதவும் திட்டம்

தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது இந்திய அரசின் ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாகும். இதன் நோக்கம் பணியில் இருக்கும் போதே ஓய்வுக்காக சேமிக்க உதவுவதும், ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானத்தை உறுதி செய்வதும் ஆகும். 2004 ஜனவரி மாதம் அரசு ஊழியர்களுக்காகத் தொடங்கப்பட்ட நிலையில், 2009ம் ஆண்டில் அனைத்து குடிமக்களுக்கும் ஆன திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது.

60 வயதில் ஆடம்பர வாழ்க்கை வாழ 21 வயதில் திட்டமிடவும் 

உங்களுக்கு 21 வயது ஆகிய நிலையில், 60 வயதில் ஓய்வு பெற முடிவு செய்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். NPS திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.4,500 முதலீடு செய்யத் தொடங்கிய நிலையில், நீங்கள் இந்த முதலீட்டை 39 ஆண்டுகள் தொடர்ந்தால் கிடைக்கும் கார்பஸை எளிய கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்வோம்.

முதலீட்டைத் தொடங்குவதற்கான வயது: 21 ஆண்டுகள்

ஓய்வூதிய வயது: 60 ஆண்டுகள்

மாதாந்திர முதலீடு: ரூ.4,500

ஆண்டு முதலீடு: ரூ.4,500 x 12 = ரூ.54,000

39 ஆண்டுகளில் மொத்த முதலீடு: ரூ.54,000 x 39 = ரூ.21,06,000

NPS திட்டத்தில், உங்கள் பணம் பல்வேறு நிதி மேலாளர்களால் பங்குச் சந்தை, பெருநிறுவனப் பத்திரங்கள் மற்றும் அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஆண்டுக்கு சராசரியாக 10% வருமானம் கிடைக்கும் என்று நாம் கருதினால், 60 வயதில் மதிப்பிடப்பட்ட மொத்த கார்பஸ், தோராயமாக ரூ.2.59 கோடி (இரண்டு கோடியே ஐம்பத்தி ஒன்பது லட்சம் ரூபாய்), இது கூட்டு வட்டியின் பலனால், ரூ.21 லட்சம் ரூ.2.59 கோடியாக பெருகியுள்ளது.

ஓய்வு பெறும்போது ரூ.1.56 கோடியை மொத்தமாகப் பெறலாம்!

NPS விதிகளின்படி, 60 வயதில், மொத்த வைப்புத் தொகையில் அதிகபட்சமாக 60% தொகையை மொத்தமாக எடுக்கலாம், இது வரி வலக்குட்ன கிடைக்கும். மொத்த கார்பஸில் 60%: ரூ.2.59 கோடியில் 60% = தோராயமாக ரூ.1.56 கோடி. ஓய்வு பெறும்போது இந்தத் தொகையை மொத்தமாகப் பெறுவீர்கள்.

ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.52,000 ஓய்வூதியம்

மீதமுள்ள 40% தொகை (ரூ.2.59 கோடி - ரூ.1.56 கோடி = ரூ.1.03 கோடி, சுமார் ரூ.1.04 கோடி என்ற அளவில் கணக்கிடப்பட்டுள்ளது) ஆனியுட்டி திட்டட்தில் முதலீடு செய்யப்பட வேண்டும். இந்த வருடாந்திரத் திட்டத்தில் நீங்கள் வழக்கமான ஓய்வூதியத்தைப் பெறலாம்.

வருடாந்திரத் திட்ட முதலீட்டுத் தொகை: தோராயமாக ரூ.1.04 கோடிகள்

மதிப்பிடப்பட்ட வருடாந்திர ஆண்டு விகிதம்: 6% (இந்த விகிதம் சிறிது மாறலாம்)

மாதாந்திர ஓய்வூதியம்: (ரூ.1,04,00,000 * 6%) / 12 = ரூ.51,848 ( சுமார் ரூ.52,000)

நீங்கள் விரும்பினால், நீங்கள் வருடாந்திர திட்டத்தில் 40% என்ற அளவிற்கும் அதிகமாக முதலீடு செய்யலாம். இது ஓய்வூதியத்தை மேலும் அதிகரிக்கும்.

NPS கணக்கு சில முக்கிய அம்சங்கள்

கணக்கு வகை: NPS இல் இரண்டு வகையான கணக்குகள் உள்ளன - Tier-1 (கட்டாய ஓய்வூதியக் கணக்கு) மற்றும் Tier-2 (தன்னார்வ முதலீட்டுக் கணக்கு, Tier-1 க்குப் பிறகுதான் அதைத் திறக்க முடியும்).

குறைந்தபட்ச முதலீடு: Tier-1 கணக்கை செயலில் வைத்திருக்க, ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ரூ.1,000 டெபாசிட் செய்வது அவசியம்.

முதலீட்டு வயது வரம்பு: நீங்கள் NPS இல் 18 வயதிலிருந்து 70 வயது வரை முதலீடு செய்யத் தொடங்கி 75 வயது வரை அதைத் தொடரலாம்.

சிறந்த வரி சேமிப்பை வழங்கும் திட்டம்

NPS திட்டத்தில் முதலீடு செய்வது உங்களுக்கு கவர்ச்சிகரமான வருமான வரி விலக்குகளை வழங்குகிறது.

பிரிவு 80CCD(1): ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு.

பிரிவு 80CCD(1B): ரூ.50,000 கூடுதல் விலக்கு (இது 80C பிரிவின் ரூ.1.5 லட்சம் வரம்பை விட கூடுதல் விலக்கு).

ஒட்டுமொத்தமாக, NPS திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.2 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். முதிர்ச்சியின் போது பெறப்படும் மொத்த தொகைக்கு 60% வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

பொறுப்பு துறப்பு: NPS இல் முதலீடு செய்வது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. வருமானத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மதிப்பிடப்பட்ட வருமானம் மற்றும் வருடாந்திர விகிதங்கள் விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே. முதலீடு செய்வதற்கு முன் அனைத்து திட்ட ஆவணங்களையும் கவனமாகப் படியுங்கள்.

மேலும் படிக்க | ஓய்வூதிய விதிகளில் மாற்றம்: இனி இந்த ஊழியர்களுக்கு பென்ஷன் கிடைக்காது, முக்கிய அப்டேட் இதோ

மேலும் படிக்க | 8வது ஊதியக்கூழு: 40-50% ஊதிய உயர்வு, ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News