பெற்றோர்கள் அனைவருமே வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகளை தங்கள் குழந்தைகள், எதிர்கொள்ள கூடாது என்று நினைக்கிறார்கள். இதற்காக, அவர் எல்லா வழிகளிலும் முயற்சி செய்கிறார்கள். குழந்தையின் கல்வி மற்றும் திருமணத்திற்கு கூட திட்டமிட்டு பணம் சேர்க்கிறார்கள். அந்த ஒரு சிறிய முதலீட்டில் உங்கள் குழந்தையின் ஓய்வு கால வாழ்க்கையையும் பாதுகாக்க, நீங்கள் NPS வாத்சல்யா திட்டத்தின் கீழ் குழந்தையின் கணக்கைத் திறக்க வேண்டும். இதில் நீங்கள் ₹1000 முதலீடு செய்யத் தொடங்கினால், 60 வயதில், உங்கள் குழந்தையிடம் ரூ.3.8 கோடி நிதி இருக்கும். மேலும் ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் கிடைக்கும்.
NPS வாத்சல்யா கணக்கை யார் திறக்கலாம்?
NPS வாத்சல்யா என்பது மத்திய அரசின் திட்டமாகும். இதன் மூலம் உங்கள் குழந்தைக்கான ஓய்வூதியத்தை ஏற்பாடு செய்ய முடியும். பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் பெயரில் இந்தக் கணக்கை 18 வயது வரை திறந்து முதலீடு செய்யத் தொடங்கலாம். இதில் குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ரூ.1000. அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு இல்லை. இந்தக் கணக்கு குழந்தையின் பெயரில் திறக்கப்படுகிறது, இருப்பினும், குழந்தை 18 வயதை அடையும் வரை அந்தக் கணக்கை குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் கவனித்துக்கொள்வார்கள். 18 வயதுக்குப் பிறகு, குழந்தை இந்தக் கணக்கை தானே கையாளலாம்.
குழந்தை வளரும்போதே கோடீஸ்வரராக்கும் முதலீடு
நீங்கள் ஒரு குழந்தையின் NPS வாத்சல்யா கணக்கைத் திறந்து, 18 வயது வரை அதில் ரூ.1000 முதலீடு செய்து வரும் நிலையில், உங்கள் குழந்தை 19வது வயதிலிருந்து 60 வயது வரை இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 முதலீட்டைத் தொடர்ந்தால், 60 வயது வரை மொத்த முதலீடு ரூ.7,20,000 மட்டுமே இதில் அவருக்கு 10% வருமானம் கிடைத்தால், அவருக்கு வட்டியாக மட்டுமே ரூ.3,77,61,849 கிடைக்கும். அவருடைய மொத்த காபர்பஸ் ரூ.3,84,81,849 ஆக இருக்கும்.
ரூ.3.8 காபர்பஸ் உடன் ரூ.1 லட்சம் ஓய்வூதியமும் கொடுக்கும் முதலீடு
NPS திட்டத்தில், ரூ.3.8 காபர்பஸ் கிடைத்த நிலையில் குறைந்தது 40% தொகையை வருடாந்திரத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் குழந்தை ஆண்டுத் திட்டத்தில் 40 சதவீதத்தை முதலீடு செய்தால், அவர் ரூ.1,53,92,740 என்ற அளவில் அன்யுட்டி முதலீடு செய்ய வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், அவருக்கு ஓய்வூதிய நிதியாக ரூ.2,30,89,109 கிடைக்கும். நீங்கள் 8% வருடாந்திர வருமானத்தைப் பெற்றால் கூட, ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக ரூ.1,02,618 பெறுவீர்கள்.
NPS வாத்சல்யா கணக்கை எங்கே திறக்கலாம்?
NPS வாத்சல்யா கணக்கை பெரிய வங்கிகள், இந்திய அஞ்சல் துறைகளில் திறக்கலாம். இருப்பினும், இந்தக் கணக்கு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படும். இந்தக் கணக்கை ஆன்லைனில் திறக்க விரும்புவோர் NPS அறக்கட்டளையின் eNPS தளத்திற்குச் சென்று கணக்கைத் திறக்கலாம்.
18 வயது வரை 3 முறை பகுதி திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு
குழந்தை 18 வயதை அடையும் வரை மூன்று முறை பகுதியளவு பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இதற்கு NPS கணக்கு குறைந்தது 3 ஆண்டுகள் தொடர வேண்டும். கல்வி, எந்தவொரு குறிப்பிட்ட நோய்க்கான சிகிச்சை மற்றும் 75% வரை இயலாமை ஏற்பட்டால், பெற்றோர்கள் அதிகபட்சமாக 25% பங்களிப்பை ஓரளவு திரும்பப் பெறலாம்.
சந்தாதாரர்கள் விரும்பினால் 18 வயதில் NPS கணக்கிலிருந்து வெளியேறலாம்
குழந்தைக்கு 18 வயதாகும் போது NPS வாத்சல்யா கணக்கு வழக்கமான NPS கணக்காக மாற்றப்படும். அத்தகைய சூழ்நிலையில், குழந்தை மூன்று மாதங்களுக்குள் புதிய KYC-நடைமுறையை வேண்டும். சந்தாதாரர்கள் விரும்பினால் 18 வயதில் NPS கணக்கிலிருந்து வெளியேறலாம். ஆனால் நிபந்தனை என்னவென்றால், குறைந்தபட்சம் 80% கார்பஸை ஆண்டுத் திட்டத்தில் மீண்டும் முதலீடு செய்ய வேண்டும், அதே நேரத்தில் 20% மொத்தத் தொகையாகத் திரும்பப் பெறலாம். மொத்த தொகை ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் எடுக்கலாம்.
மேலும் படிக்க | ஓய்வு காலத்தில் கைநிறைய பணம் வேண்டுமா... இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









