PPF முதலீடு... மாதம் ரூ.12,500 போதும்.... 60 வயதில் கையில் ரூ.2.25 கோடி இருக்கும்... எளிய கணக்கீடு இதோ

PPF: உத்திரவாத வருமானத்துடன் கூடிய பாதுகாப்பான முதலீட்டை விரும்பும் முதலீட்டாளர்களுக்கான சிறந்த சாய்ஸாக பிபிஎஃப் இருக்கும். இதில் கூட்டு வட்டி கிடைப்பதால் பணம் பன்மடங்காவது எளிதாகிறது.  எனவே கோடியில் நிதியை சேர்க்கலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 2, 2025, 09:36 AM IST
  • PPF திட்டத்திற்கு 3 வழிகளில் கிடைக்கும் வரிச் சலுகை.
  • கூட்டு வட்டி வருமானத்துடன் ஆயிரங்கள் கோடிகளாகும்.
  • வட்டி வருமானமாக மட்டும் ரூ.1.75 கோடி பெறலாம்.
PPF முதலீடு... மாதம் ரூ.12,500 போதும்.... 60 வயதில் கையில் ரூ.2.25 கோடி இருக்கும்... எளிய கணக்கீடு இதோ

பாதுகாப்பான, வரிச் சலுகைகள் கொண்ட, அதே சமயத்தில் நல்ல வருமானம் தரக் கூடிய முதலீடு என்றால் நம் மனதில் வரக் கூடியது பொது வருங்கால வைப்பு நிதி என்னும் PPF. எந்த ஆபத்தும் இல்லாமல் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இந்த அரசு திட்டம் ஒரு வரப்பிரசாதம் எனலாம். இதில் செய்யப்படும் நீண்ட கால முதலீட்டில் கோடிகளில் பணம் சேர்க்கலாம். இந்தத் திட்டத்தின் மூலம் உங்கள் ஓய்வூதிய காலத்திற்கு ரூ.2 கோடிக்கு மேல் சேர்க்கலாம். 

Add Zee News as a Preferred Source

வருமானத்துடன் கூடிய பாதுகாப்பான முதலீடு

பங்கு சந்தையில் அதிக வருமானம் கிடைக்கும் என்றாலும் ரிஸ்க் உள்ளதை மறுக்க இயலாது. இந்நிலையில், உத்திரவாத வருமானத்துடன் கூடிய பாதுகாப்பான முதலீட்டை விரும்பும் முதலீட்டாளர்களுக்கான சிறந்த சாய்ஸாக PPF என்னும் பொது வருங்கால வைப்பு நிதி இருக்கும். இதில் கோடியில் நிதியை சேர்ப்பது எளிது. இதனை பெற, நீங்கள் இளம்வயதில், அதாவது சம்பாதிக்க ஆரம்பித்த உடனேயே தொடங்க வேண்டும். 

கூட்டு வட்டி வருமானத்துடன் ஆயிரங்கள் கோடிகளாகும்

PPF திட்டத்தின் மூலம் 2 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க, இந்தத் திட்டத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகள் முதலீடு செய்த நிலையில் முதிர்ச்சியடையும் போது, அதனை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். அதுவும் 4 முறை நீட்டிக்க வேண்டும். அதாவது, PPF திட்டம் 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும். ஆனால்  அதிலிருந்து பணத்தை எடுக்காமல் திட்டத்தை 35 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும். இதனால், கூட்டு வட்டி வருமானத்துடன் ஆயிரங்கள் கோடிகளாகும்.

வட்டி வருமானமாக மட்டும் ரூ.1.75 கோடி பெறலாம்

பிபிஎஃப் திட்டத்தில் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் முதலீடு செய்யலாம். அதாவது மாதம் ரூ.12,500 என்ற அளவிலான முதலீடு தேவை. தற்போது இந்த திட்டத்திற்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. எனினும் இதில் கூட்டு வட்டி என்பதால் பணம் பன்மடங்காவது எளிதாகிறது. PPF திட்டத்தில் 25 வயதில் முதலீடு செய்யத் தொடங்கி, 35 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சத்தைத் தொடர்ந்து முதலீடு செய்தால், 35 ஆண்டுகளில் மொத்தம் ரூ.52,50,000 முதலீடு செய்திருப்பீர்கள். 7.1% விகிதத்தில், உங்களுக்கு ரூ. 1,74,47,857 வட்டியாகப் பெறுவீர்கள். உங்கள் முதலீட்டை விட வட்டி மூன்று மடங்கு இருக்கும். இந்த வழியில், 35 ஆண்டுகளில் நீங்கள் முதிர்வுத் தொகையாக மொத்தம் ரூ.2,26,97,857 பெறுவீர்கள்.

PPF கணக்கை நீட்டிக்கும் முறை

PPF கணக்கை நீட்டிக்க, உங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். முதிர்வு தேதியிலிருந்து 1 வருடம் முடிவதற்குள் இந்த விண்ணப்பத்தை சமர்ப்பித்து நீட்டிப்புக்கான படிவத்தை நிரப்ப வேண்டும். PPF கணக்கு தொடங்கப்பட்டுள்ள அதே தபால் அலுவலகம்/வங்கி கிளையில் படிவம் சமர்ப்பிக்கப்படும். இந்த படிவத்தை சரியான நேரத்தில் சமர்ப்பிக்க முடியாவிட்டால், உங்கள் கணக்கில் நீங்கள் முதலீடு செய்ய இயலாது.

PPF திட்டத்திற்கு 3 வழிகளில் கிடைக்கும் வரிச் சலுகை

PPF திட்டம் EEE பிரிவில் வைக்கப்படுவதால் மூன்று வழிகளில் வரியைச் சேமிக்கிறது. PPF கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பணம், அதிலிருந்து பெறப்பட்ட வட்டி மற்றும் முதிர்ச்சியின் போது பெறப்படும் தொகை ஆகிய அனைத்திற்கும் முற்றிலும் வரிவிலக்கு கிடைக்கும்.

60 வயதில் லட்சங்களில் மாத வருமானம் தரும் திட்டம்

25ல் முதலீடு செய்ய ஆரம்பித்தால், 60 வயதில் கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள்.
25 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால், 60 ஆண்டுகளில் உங்களை கோடீஸ்வரராக்கி, உங்கள் முதுமை காலத்தை வசதியாக கழிக்கலாம். உங்களிடம் இருக்கும் கார்பஸை நிலையான வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்து, லட்சங்களில் மாத வருமானம் பெறலாம்.

மேலும் படிக்க | SIP Mutual Fund: ரூ.5000 முதலீட்டை... ரூ.6 கோடியாக பெருக்கும் 5x12x40 ஃபார்முலா

மேலும் படிக்க | EPFO claim செயல்முறையில் ஏப்ரல் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: முழு லிஸ்ட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News