PPF முதலீடு: ரூ.1 கோடி கார்பஸுடன் ... வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.60,000 வரியில்லா ஓய்வூதியம் பெறலாம்

ஓய்வூதியத் திட்டமிடலுக்கு பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதில் திட்டமிட்டு முதலீடு செய்தால், இதன் மூலம் மாதம் தோறும் ரூ.60,000 என்ற அளவில் வாழ்நாள் முழுவதும் வரி இல்லாத வருமானம் பெறலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 26, 2025, 12:52 PM IST
  • பொது வருங்கால வைப்பு நிதி மூலம் வாழ்நாள் முழுவதும் வரி இல்லாத வருமானம் பெறலாம்.
  • ஓய்வூதியத் திட்டமிடலுக்கு பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
  • PPF கணக்கில் உள்ள பணத்தை எடுக்காமல் தொடருவதால் கிடைக்கும் நன்மைகள்.
PPF முதலீடு: ரூ.1 கோடி கார்பஸுடன் ... வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.60,000 வரியில்லா ஓய்வூதியம் பெறலாம்

Retirement Planning: உங்கள் முதுமை காலத்தை யாரையும் சாராமல், வசதியாக கழிக்க விரும்பினால், இளமையிலேயே அதற்கான திட்டமிடல் அவசியம். ஒரு சீரான அணுகுமுறையை பின்பற்றி முதலீடு செய்தன் மூலம், கோடிகளில் கார்பஸை உருவாக்கலாம். உங்கள் சிறந்த எதிர்காலத்தைப் பற்றி யோசித்து முதலீடு செய்ய பொது வருங்கால வைப்பு நிதி சிறந்த தேர்வாக இருக்கும். இதன் மூலம், கோடிகளில் கார்பஸ் கிடைப்பதோடு, அதே நேரத்தில் ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானத்தையும் பெறலாம்.

Add Zee News as a Preferred Source

பொது வருங்கால வைப்பு நிதி என்பது நீண்ட கால முதலீட்டிற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு அரசுத் திட்டம். இது சம்பளம் வாங்கும் வகுப்பினரிடையே மிகவும் பிரபலமானது. PPF திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள், ஆனால் முதலீட்டாளர் விரும்பினால் 5 - 5 ஆண்டுகளுக்கு, எவ்வளவு முறை வேண்டுமானாலும் நீட்டிக்க முடியும். 

PPF கால்குலேட்டர்: 30 வயது முதல் 55 வயது வரிய செய்யப்படும் முதலீட்டில் கிடைக்கும் காப்ர்பஸ்

உங்களது 30வது வயதில் PPF கணக்கைத் தொடங்கி 55 வயது வரை 15 ஆண்டுகள், தொடர் முதலீடு செய்து வர வேண்டும். முதிர்ச்சியடைந்த பிறகு இரண்டு முறை 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் ரு.1 கோடி கார்பஸ் கிடைக்கும்.

ஒரு நிதியாண்டில் செய்யப்படும் வைப்புத்தொகை: ரூ.1.50 லட்சம்

வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7.1 சதவீதம்

15 ஆண்டுகளில் மொத்த வைப்புத்தொகை: ரூ.22,50,000

15 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் மொத்த நிதி: ரூ.40,68,209

PPF கணக்கை இரண்டு முறை நீட்டித்தால் கிடைக்கும் கார்பஸ்

25 ஆண்டுகளில் மொத்த வைப்புத்தொகை: ரூ.37,50,000

25 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் மொத்த நிதி: ரூ.1.03 கோடி

PPF கணக்கை நீட்டிப்பதன் நன்மைகள்

1. PPF சேமிப்புத் திட்டத்தை நீட்டிப்பதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், நீங்கள் ஓய்வு பெறும் வரை இதன் மூலம் ரூ.1.03 கோடி என்ற அளவில், ஒரு பெரிய நிதியை உருவாக்க முடியும்.

2. இரண்டாவது நன்மை என்னவென்றால், 15 ஆண்டுகள் முதிர்ச்சியடைந்த பிறகு அல்லது திட்டத்தை 20 ஆண்டுகள் தொடர் முதலீட்டிற்கு பிறகு அல்லது திட்டத்தை 25 ஆண்டுகள் தொடர் முதலீட்டிற்கு பிறகு, நீங்கள் விரும்பினால், எதையும் முதலீடு செய்யாமல் அதை நீட்டிக்கலாம். இதைச் செய்வதன் மூலம், 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி இருப்பு எதுவாக இருந்தாலும், தற்போதைய வட்டி அதற்குக் கிடைக்கும், இது தற்போது ஆண்டுக்கு 7.1 சதவீதமாக உள்ளது. 

ரூ.1 கோடி இறுதி இருப்பில் கிடைக்கும் வழக்கமான வருமானம்

25 ஆண்டுகளில் 1 கோடி நிதி திரட்டிய பிறகு நீங்கள் அதிலிருந்து மாதந்தோறும் சம்பாதிக்க விரும்பினால், அதை நீட்டித்து பயன்படுத்திக் கொள்ளலாம். எதையும் முதலீடு செய்யாமல் 5 ஆண்டுகளுக்கு நீங்கள் திட்டத்தை நீட்டித்திருந்தால், இறுதி இருப்பில் ஆண்டு வட்டி கிடைக்கும். அதே நேரத்தில், ஒவ்வொரு வருடமும் முழுத் தொகையில் நீங்கள் விரும்பிய தொகையை திரும்பப் பெறலாம்.

இங்கே, 1 கோடி இறுதி இருப்பில் 7.1 சதவீத ஆண்டு வட்டி கிடைக்கும். அதாவது ஒரு வருடத்தில் ரூ.7,31,300 ஆக இருக்கும். இந்த முழு வட்டித் தொகையையும் நீங்கள் ஒரு வருடத்திற்கு ஒரு முறை திரும்பப் பெறலாம். நீங்கள் அதை 12 மாதங்களில் பிரித்தால், அது மாதத்திற்கு சுமார் ரூ.60,000 என்ற அளவில் இருக்கும். அதே நேரத்தில், இதற்கு வரி எதுவும் இருக்காது.

மேலும் படிக்க | EPF உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி: அதிரடி மாற்றங்களை செய்த EPFO, விவரம் இதோ

மேலும் படிக்க | Mutual Fund: கடந்த 5 வருடங்களில் 30% - 40% வரை வருமானம் தந்த டாப் 50 மியூச்சுவல் ஃபண்டுகள் இவை தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News