மியூச்சுவல் ஃபண்டுகளில் இரண்டு வகைகளில் முதலீடு செய்யலாம். வங்கி ஆர்டி திட்ட்ம போல ஒன்று மாதா மாதம் எஸ்ஐபி திட்டம் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தல். மற்றொன்று, எஃப்டி திட்டம் போல ஒரு முறை மொத்தமாக முதலீடு செய்தல். இதில், ஒரு முறை மொத்தமாக முதலீடு செய்து, குறிப்பிட்ட காலத்திற்கு பின், முறையான பணத்தைத் திரும்பப் பெறும் திட்டம் (SWP) மூலம் மாதம் ரூ.2,50,000 வருமானம் பெறுவது எப்படி என்பதை இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
அதிக வருமானத்திற்கான சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகள்
ஒரு முறை ரூ.10 லட்சத்தை முதலீடு செய்வதன் மூலம், ஒவ்வொரு மாதமும் ரூ.2.5 லட்சம் சம்பாதிக்க முடியுமா என்ற சந்தேகம் எழலாம். ஆனால் பங்குச் சந்தையின் சக்தி மற்றும் கூட்டு வட்டி வருமானம் இணைந்து இந்த மாயாஜாலத்தை சாத்தியமாக்குகிறது. நீண்ட கால முதலீடு மூலலம் கூட்டு வட்டியின் பலனை அதிகபட்சம் பெறலாம். இதன் மூலம் வலுவான நிதி எதிர்காலம் சாத்தியமாகிறது.
நீங்கள் 30 வயதில் ரூ.10 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த முதலீடு உங்களுக்கு சராசரியாக 12% ஆண்டு வருமானத்தை அளித்தால் கூட வல்ல வருமானம் பெறலாம். அதை ஒரு நல்ல ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் அல்லது ஸ்மார்ட் ஸ்டாக் போர்ட்ஃபோலியோவை தேர்வ்டதெடுப்பதன் மூலம் இந்த தொகை 30 ஆண்டுகளில் சுமார் ரூ.3 கோடி (₹2,99,59,922) ஆக வளரக்கூடும்.
முதலீட்டுத் தொகை: ₹10,00,000
மதிப்பிடப்பட்ட வட்டி/லாபம்: ₹2,89,59,922
மொத்த நிதி: ₹2.99 கோடி
இப்போது உங்கள் 55 வயதில் ஓய்வு பெற்று இந்தத் தொகையை SWP (முறையான திரும்பப் பெறுதல் திட்டம்) கீழ் முதலீடு செய்து, நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை பெறலாம். மீதமுள்ள நிதி முதலீடு செய்யப்படுகிறது, அதில் வட்டி தொடர்ந்து வருகிறது.
அடுத்த 15 ஆண்டுகளுக்கு (அதாவது 70 வயது வரை) ஒவ்வொரு மாதமும் ₹2.5 லட்சம் வருமானம் பெறலாம். நீங்கள் 60 வயதிற்கு பிறகு பணத்திய எடுக்க திட்டமிட்டாலோ அல்லது மாதம் ரூ.1.5 லட்சம் பணட்தை எடுக்க திட்டமிட்டாலோ, நீங்கள் கிட்டத் தட்ட 100 வயது வரை விரும்பினால், ரூ.1.5 லட்சம் வருமானத்தை பெறலாம்.
15 ஆண்டுகளுக்கு ₹2.5 லட்சம் வருமானம் கிடைப்பதற்கான கணக்கீடு
தொடக்கத் தொகை: ₹2.99 கோடி
திரும்பப் பெறும் காலம்: 15 ஆண்டுகள் / 180 மாதங்கள்
வருமானம்: ஆண்டுக்கு 7%
மொத்த திரும்பப் பெறுதல்: ₹4.5 கோடி
இறுதியில் மீதமுள்ள தொகை: ₹28 லட்சம்
மொத்த வட்டி ஈட்டப்பட்டது: ₹1.88 கோடி
அதிகபட்ச வருமானத்தை பெற முதலீடு சரியான இடத்திலும் சரியான முறையிலும் செய்யப்பட வேண்டியது முக்கியம். ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன், அவற்றின் வரலாறு, செயல்திறன் மற்றும் ஆபத்தை கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், அவ்வப்போது போர்ட்ஃபோலியோவை மதிப்பாய்வு செய்வதும் முக்கியம். எதிர்காலத்தில் பணவீக்கம் அதிகரிக்கும் என்பது உண்மைதான். இன்றைய ₹2.5 லட்சத்தால் அடுத்த 30 ஆண்டுகளில் அவ்வளவு வாங்க முடியாமல் போகலாம். ஆனால் அது இன்னும் வலுவான மற்றும் சுதந்திரமான ஓய்வூதியத்திற்கான அடிப்படையை உருவாக்க முடியும்.
முறையான பணத்தைத் திரும்பப் பெறும் திட்டம் என்றால் என்ன?
SWP அல்லது முறையான பணத்தைத் திரும்பப் பெறும் திட்டம் என்பது உங்கள் முதலீடுகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை எடுப்பது. இதற்கு, உங்கள் மியூச்சுவல் ஃபண்டில் மாதத்தின் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபிட் செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும். அப்போது முதலீட்டு பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். திரும்பப் பெற்ற பிறகு, முதலீட்டில் மீதமுள்ள நிதி மீதான வருமானம் தொடந்து கிடைக்கும். இதனால் கூட்டு வட்டி வருமானத்தின் பலனை தொடர்ந்து பெறுவீர்கள்.
(குறிப்பு: SIP மற்றும் SWP கால்குலேட்டரை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு, அடதன் அடிப்படையில் நாங்கள் இங்கே தகவல்களை வழங்கியுள்ளோம். எந்தவொரு பங்குத் திட்டத்திலும் முதலீடு செய்வதற்கான ஆலோசனையை நாங்கள் வழங்கவில்லை. நீண்ட காலத்திற்கு பங்குத் திட்டத்தில் அதிக வருமானம் சாத்தியம் என்பதை கூறியுள்ளோம். பங்கு சந்தையில் ஏற்ற இறக்கங்கள் உள்ளன. எனவே முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









