பென்ஷன் இல்லாதாவர்கள், ஓய்வு காலத்தில் வழக்கமான வருமானத்தை பெற மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் உதவும். மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் முதலீட்டாளர்கள் ஓய்வூதியத்திற்கான ஒரு கார்பஸை உருவாக்கவும் மற்றும் பிற குழந்தைகளின் திருமணம், வீடு, மனை வாங்குதல் போன்ற நிதி இலக்குகளுகளை அடைய மிகவும் சிறந்த முதலீட்டு தேர்வாக இருக்கும் . ஒரு முதலீட்டாளர் ஓய்வூதிய கார்பஸை உருவாக்க ஒன்று அல்லது பல மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அவர்கள் முதலீட்டு ஆலோசகரின் ஆலோசனைப்படி, ஒரு ஈக்விட்டி, கலப்பின அல்லது கடன் நிதியில் முதலீடு செய்யலாம் அல்லது அவர்கள் விரும்பினால், ஏதேனும் ஒரு நிதியை தேர்ந்தெடுத்தும் முதலீடு செய்யலாம்.
டென்ஷன் இல்லாத ஓய்வு கால வாழ்க்கையை பெறுவதற்கு, நீண்ட கால முதலீட்டுத் திட்டமிடல் பயனுள்ளதாக இருக்கும்., அங்கு ஒரு முதலீட்டாளர் தங்கள் முதலீடுகள் வளர போதுமான நேரத்தை வழங்க இயலும். தங்கள் நிதி இலக்கை அடைந்த பிறகு, அவர்கள் முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் திரும்பப் பெறலாம். அவர்கள் விரும்பினால், ஒரு மியூச்சுவல் ஃபண்டில் ஒரு முறையான திரும்பப் பெறும் திட்டம் (SWP) மூலம் அதை மாதா மாதம் வழக்கமான வருமானத்தை பெற திட்டமிடலாம்.
பரஸ்பர நிதியங்களில், வங்கி எஃப்டி முதலீடுகளை போல, ரூ.3,50,000 என்ற அளவில் ஒரு முறை முதலீடு செய்த பிறகு, 30 ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ரூ.59,000 மாத வருமானம் பெறலாம். அது எப்படி சாத்தியமாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஓய்வூதியத் திட்டத்திற்கான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
ஒருவர் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் (முறையான முதலீட்டுத் திட்டம், SIP) மியூச்சுவல் ஃபண்டில் தொடங்கலாம் அல்லது மொத்தமாக (ஒரு முறை முதலீடு) செய்யலாம். இது அவர்களின் வருமான சுழற்சி அல்லது அவர்கள் கையில் வைத்திருக்கும் தொகையைப் பொறுத்தது. எப்படியிருந்தாலும், அவர்களுக்கு நீண்ட கால முதலீடு தான் கூட்டு வட்டி வருமானத்தின் பலனை முழுமையாக பெற உதவும். அதே நேரத்தில், இது சந்தை அபாயத்தைக் குறைக்கவும் உதவும். தற்போது பல முதலீட்டாளர்கள் தங்கள் ஓய்வு கால வருமானத்திற்கு SWP திட்டத்தை பயன்படுத்துகின்றனர்.
முறையான திரும்பப் பெறும் திட்டம் (SWP)
SWP என்பது சிஸ்டமேடிக் மியூச்சுவல் ஃபண்டிலிருந்து மாத வருமானமாக, ஒரு குறிப்பிட்ட தொகையை திரும்பப் பெறுவதற்கான ஒரு வழியாகும். இதில் ஒரு முதலீட்டாளர் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ஒரு தொகையை முதலீடு செய்த நிலையில், அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையின் நிகர சொத்து மதிப்பை (NAVs) விற்று அதை தங்கள் கணக்கில் டெபாசிட் செய்யுமாறு நிதி நிறுவனத்திடம் கோரலாம். இதன் மூலம் குறிப்பிட்ட அளவிலான பங்குகள் விற்கப்பட்டு, உங்கள் வங்கி கணக்கில் மாதா மாதம் வர வைக்கப்படும்.
SWP மூலம் வழக்கமான வருமானத்தை பெறுவதற்கான கணக்கீடுகள்
பரஸ்பர நிதி மொத்த முதலீடு - ரூ.3,50,000
முதலீட்டு காலம் - 30 ஆண்டுகள்
ஆண்டு முதலீட்டு வருமானம் - 12%
SWP வருடாந்திர வருமானம் - 7%
ரூ.3,50,000 ஒரு முறை முதலீட்டிலிருந்து கிடைக்கும் ஓய்வூதிய நிதி
12 சதவீத வருடாந்திர வருமானத்தில், முதலீட்டிலிருந்து நீண்ட கால மூலதன ஆதாயங்கள் ரூ.1,01,35,973 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.1,04,85,973 ஆகவும் இருக்கும்.
ஓய்வூதிய நிதி மீதான வருமான வரி
முதலீட்டாளர் இந்த நிதிக்கு ரூ.1,25,000 வரி விலக்கு பெறுவார். அதன் பிறகு, 12.5 சதவீத வரி பொருந்தும். ரூ.1,25,000 வரி விலக்குக்குப் பிறகு வரி விதிக்கக்கூடிய மூலதன ஆதாயங்கள் ரூ.1,00,10,973 ஆக இருக்கும்; இந்த கார்ப்ஸ் மீதான மதிப்பிடப்பட்ட வரி ரூ.12,51,371.625 ஆக இருக்கும். வரிக்குப் பிந்தைய நிதித்தொகை ரூ.88,84,601.375 ஆக இருக்கும். இது SWP திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் மதிப்பிடப்பட்ட தொகை.
SWP முதலீட்டிலிருந்து கிடைக்கும் மாதாந்திர வருமானம்
கார்பஸிலிருந்து 7 சதவீத வருடாந்திர வருமானத்தில், அதே நிதித்தொகையிலிருந்து ஒருவர் திரும்பப் பெறலாம் . இதில் மதிப்பிடப்பட்ட மாதாந்திர வருமானம் ரூ.58,766 (சுமார் ரூ.59,000) ஆக இருக்கும். 30 ஆண்டுகளில் மொத்தமாக திரும்பப் பெறப்படும் தொகை ரூ. 2,11,56,581 (சுமார் 2 கோடி) ஆகவும், மதிப்பிடப்பட்ட இருப்பு ரூ.821 என்ற அளவிலும் இருக்கும்.