)
Anil Ambani SBI: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, சமீபத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் ஐந்து இயக்குநர்களுக்கு எதிராக வெளியிட்ட விளக்கம் அளிக்கும் நோட்டீஸ்களை திரும்பப் பெற்றிருந்தது.
அதேபோல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அனில் அம்பானியின் கணக்குகளை மோசடியானவை என அதன் கடன் வழங்குநர்களில் ஒன்றான கனரா வங்கி வகைப்படுத்தியிருந்தது. இதையடுத்து, கடந்த ஜூலை 10ஆம் தேதி அன்று கனரா வங்கி, இந்த கணக்குகளை மோசடியானவை என வகைப்படுத்திய முடிவை மும்பை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையின்றி திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அனில் அம்பானி மீதும், அதன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCOM) நிறுவனம் மீதும் வைக்கப்பட்ட புகார்களை எஸ்பிஐ மற்றும் கனரா வங்கிகள் நிபந்தனையற்ற வகையில் திரும்பப் பெற்றிருப்பது சந்தேகங்களை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அனில் அம்பானிக்கு எதிரான எஸ்பிஐயின் நடவடிக்கை, உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள கொள்கைகளைப் பின்பற்றவில்லை என்று அனில் அம்பானியின் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் எஸ்பிஐ தனது நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஏனெனில் அது ஏற்கனவே ஐந்து இயக்குநர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட விளக்கம் அளிக்கும் நோட்டீஸ்களை திரும்பப் பெற்றுள்ளது என்று அனில் அம்பானியின் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அனில் அம்பானியின் தரப்பு நியாயத்தை சொல்ல எஸ்பிஐ அனுமதிக்கவே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்பானியின் மீதான இந்த புகார்களில் எஸ்பிஐ மற்றும் கனரா வங்கிகள் முன்னுக்கு பின் முரணான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், வங்கி அமைப்பிற்குள் தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான செயல்பாடுகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளன. இவை வங்கிகளின் முடிவெடுக்கும் செயல்முறைகளின் நியாயத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மையை கேள்விக்குள்ளாக்குகின்றன. அனில் அம்பானியின் கணக்குகளை மோசடியானவை என வகைப்படுத்தும் முன் அனில் அம்பானி தரப்பு நியாயங்களை எஸ்பிஐ கேட்கவில்லை என்றும் இது சட்ட விரோதமானது என்றும் வாதிடப்படுகிறது.
இதுகுறித்து அனில் அம்பானி வழக்கறிஞர் தெரிவிக்கையில், "அனில் அம்பானிக்கு தனது தரப்பை முன்வைக்க வாய்ப்பு வழங்காமல், எஸ்பிஐ அதன் உத்தரவை ஒருதலைப்பட்சமாக நிறைவேற்றியிருக்கிறது. இது உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட இயற்கை நீதியின் கொள்கைகள் பின்பற்றப்படவில்லை எனலாம்.
இத்தகைய ஒருதலைப்பட்ச முடிவுகள் வங்கியின் நம்பகத்தன்மையை பலவீனப்படுத்துவது மட்டுமல்லாமல், பங்குதாரர்களின் நற்பெயரும், நிதி தாக்கமும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் நேரத்தில் நிதி நிறுவனங்கள் எவ்வாறு நடத்துகொள்கின்றன என்பதற்கு ஒரு மோசமான முன்னுதாரணமாகவும் இகு அமைகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
அனில் அம்பானியின் தரப்பை விசாரணையில் கேட்காமல் மறுப்பது அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது எனலாம். மிக முக்கியமாக, எஸ்பிஐ மற்றும் கனரா வங்கி ஆகிய இரண்டும் நீதித்துறை மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை மீறிச் செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. ஆர்பிஐ வழிகாட்டுதல்களின்படி, வங்கிகள் நியாயத்தன்மை மற்றும் உரிய நடைமுறையின் கொள்கைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்தக் கட்டுப்பாட்டு விதிகளைத் தவிர்த்து, எஸ்பிஐ சட்டத்தை மீறியதாக கூறப்படுகிறது. இதன்மூலம், எஸ்பிஐ மற்றும் கனரா வங்கிகளின் இந்த திரும்பப்பெறும் முடிவு அனில் அம்பானிக்கு அநீதி இழைக்கப்பட்டதா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ