வேலையே செய்யாமல்..மாதம் ரூ.15,000 வருமானம்! SBI-ன் ‘இந்த’ திட்டம் பற்றி தெரியுமா?

SBI Fixed Deposit Scheme : வீட்டில் இருந்துகொண்டே மாதம் ரூ.15,000 சம்பாதிக்க எளிய திட்டம் ஒன்று இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம் வாங்க. 

Written by - Yuvashree | Last Updated : Dec 15, 2025, 05:40 PM IST
  • மாதம் ரூ.15,000 வருமானம்!
  • SBIன் FD திட்டம்..
  • இதோ முழு விவரம்!
வேலையே செய்யாமல்..மாதம் ரூ.15,000 வருமானம்! SBI-ன் ‘இந்த’ திட்டம் பற்றி தெரியுமா?

SBI Fixed Deposit Scheme : நீங்கள் வேலையே செய்யாமல், மாதா மாதம் உங்கள் வங்கி கணக்கிற்கு ரூ.15,000 வந்து விடும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? உண்மையில், நீங்கள் சரியான முதலீடு ஐடியாவை வைத்திருந்தால், வங்கி கணக்கில் இருந்து வரும் வட்டியே உங்களுக்கு சரியான வருமானத்தை ஈட்டித்தரும். நாட்டில் விலை ஏற்றம் எகிறி வரும் நிலையில் பணம், உங்களது மாத வருமானத்துடன் இந்த தொகையானது சேரும் போது, அது கண்டிப்பாக உங்களுக்கு வருங்காலத்தில் உபயோகமானதாக இருக்கும். இதற்கு Fixed Deposit எனப்படும் நிலையான வைப்புத்தொகைதான் பெரிய தொகை முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்கும் என்பது பலரது கணிப்பாக உள்ளது.

Add Zee News as a Preferred Source

SBI FD Rate : வட்டி விகிதம் 

State Bank Of India (SBI) வங்கியில், வாடிக்கையாளர்களுக்கு FD வட்டி விகிதமானது 6.05 % ஆக இருக்கிறது. 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலவரையறை கொண்ட நிலையான வைப்புநிதிகளுக்கு, சாதாரண வாடிக்கையாளர்களுக்கு மேற்கூறிய வட்டி விகிதத்தை வழங்குகிறது SBI வங்கி. மூத்த குடிமக்களுக்கு, இந்த விகிதம் சற்றே அதிகமாக இருக்கிறது அவர்களுக்கான FD வட்டி விகிதம், 7.05% ஆக உள்ளது. இந்த வட்டி விகிதத்தை வைத்து கணக்கிடும் போது, 15,000 எனும் தொகை மாதா மாதம், வட்டியாக வருமானமாக கிடைக்கிறது. இதை வைத்து கணக்கிட்டால், வருடத்திற்கான தொகை, 1,80,000 ஆக இருக்கிறது. 

எவ்வளவு தொகை தேவைப்படும்?

SBI, சாதாரண வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் 6.05 சதவீதம் எனும் வட்டி விகிதத்தை வைத்து கணக்கிட்டு பார்த்தால், நமக்கு வட்டியாக வரும் தொகை மட்டுமே வருடத்திற்கு, ரூ.1,80,000 ஆக இருக்கிறது. இதற்கு முதலீடாக, சுமார் 29.7 லட்ச ரூபாய் முதல் 30 லட்ச ரூபாய் வரை தேவைப்படலாம். சுருக்கமாக சொல்லப்போனால், FD மூலம் மாதம் ரூ.15,000 வருமானம் பெற நீங்கள் 30 லட்ச ரூபாய் வரை FDல் முதலீடு செய்திருக்க வேண்டும்.

மூத்த குடிமக்களுக்கு..

மூத்த குடிமக்களுக்கான FD வட்டி விகிதம், SBI-ல் 7.05 சதவீதமாக இருக்கிறது. இதை வைத்து பார்க்கையில், வருடத்திற்கான வட்டித்தொகை, ரூ.1,80,000 ஆக இருக்கிறது. இதற்கான FD முதலீடு, ரூ.25.5 லட்சம் முதல், ரூ.26 லட்சம் வரை இருக்கிறது. இது, சாதாரண வாடிக்கையாளர்களை விட சுமார் 2.5 லட்சம் குறைந்த தொகையாகும். 

வரி:

FDல் இருந்து வரப்படும் வருமானத்தின் வரி விகிதம் குறித்து தெரிந்து கொள்வதும் அவசியம். உங்கள் வருமானமானது, விதிக்கப்பட்ட வரம்பிற்குள் வந்தால், நீங்கள் பெறும் தொகையானது குறைவாக இருக்கலாம். வரிப்பிடித்தங்களை தாண்டி, நீங்கள் ரூ.15,000 பெற விரும்பினால், முதலீட்டுத்தொகை அதிகரிக்க வேண்டிய வாய்ப்பிருக்கும்.

சுருக்கமாக: பொது வாடிக்கையாளர், ரூ.15,000 மாத வருமானமாக FD மூலம் பெற விரும்பினால், அதற்கு தோராயமாக ரூ.30 லட்சம் வரை முதலீட்டு தொகை தேவைப்படும். மூத்த குடிமக்களுக்கு ரூ.26 லட்சம் வரை தேவைப்படும்.

மேலும் படிக்க | EPFO : விண்ணப்பித்த 3 நாட்களில் பிஎப் பணம்! இவர்களுக்கு மட்டும் கிடைக்காது

மேலும் படிக்க | ஓய்வூதியம், கிராஜூவிட்டி குட் நியூஸ்! தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News