SBI Special FD Scheme: SBI வழங்கும் 'ஹர் கர் லக்பதி' திட்டம் என்னும் தொடர் வைப்புத் திட்டத்தின் உதவியுடன், முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் லட்சங்களில் நிதியை உருவாக்கலாம்.

SBI Har Ghar Lakhpati Scheme: பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) 'ஹர் கர் லக்பதி' திட்டத்தின் வட்டி விகிதங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வட்டி விகிதங்களை வங்கி 0.20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்றாலும், இது முதலீட்டளர்களை லட்சாதிபதியாக்கும் சிறந்த திட்டமாகவே உள்ளது. இதில், இப்போது பொது குடிமக்கள் அதிகபட்சமாக 6.55 சதவீதமும், மூத்த குடிமக்கள் அதிகபட்சமாக 7.05 சதவீத ஆண்டு வட்டியும் பெறுவார்கள்.
SBI வழங்கும் ஹர் கர் லக்பதி திட்டம் என்றால் என்ன
SBI வழங்கும் 'ஹர் கர் லக்பதி' திட்டம் ஒரு தொடர் வைப்புத் திட்டம் (RD) ஆகும். இந்தத் திட்டத்தின் உதவியுடன், முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் லட்சங்களில் நிதியை உருவாக்கலாம். இதில் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.600 முதலீடு செய்வதன் மூலம் 10 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் திரட்ட முடியும். இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான நிதியை எளிதாக உருவாக்கலாம். உங்கள் மாதாந்திர முதலீட்டுத் திறனைப் பொறுத்து, முதலீட்டை ரூ.5000 அல்லது ரூ.6000 என அதிகரித்தால் ரூ.10 லட்சத்திற்கு அதிபதியாவீர்கள்.
முதிர்வு காலம் மற்றும் வட்டி
ஹர் கர் லக்பதி திட்டத்தின் முதிர்வு காலம் பொதுவாக 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும். இந்தத் திட்டத்தில் நீங்கள் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். இந்த 3 அல்லது 4 ஆண்டுகள் முதிர்வைத் தேர்ந்தெடுக்கும்போது, பொது வாடிக்கையாளர்களுக்கு 6.55 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.05 சதவீத வட்டியும் கிடைக்கும். 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் முதிர்வைத் தேர்ந்தெடுக்கும்போது, பொது வாடிக்கையாளர்களுக்கு 6.30 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 6.80 சதவீத வட்டியும் கிடைக்கும். எளிய வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால், 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் முதிர்வைத் தேர்ந்தெடுக்கும்போது, கிடைக்கு வட்டி ஒரே உள்ளது. அதே நேரத்தில் 3 ஆண்டுகள் மற்றும் 4 ஆண்டுகள் கால அளவிற்கு அதிகபட்ச வட்டி பெறப்படுகிறது.
10 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கார்பஸ் பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்
பொது வாடிக்கையாளர்கள்
பொது வாடிக்கையாளர்களுக்கான வட்டி: ஆண்டுக்கு 6.30%
மாதாந்திர முதலீடு: ரூ. 6,000
மொத்த வைப்புத்தொகை: ரூ. 7,20,000
முதிர்ச்சியின் போது கிடைக்கும் தொகை: ரூ. 10,02,878
வட்டி வருமானம்: ரூ. 2,82,878
மூத்த குடிமக்கள்
மூத்த குடிமக்களுக்கான வட்டி: ஆண்டுக்கு 6.80%
மாதாந்திர முதலீடு: ரூ. 5,825
மொத்த வைப்புத்தொகை: ரூ. 6,99,000
முதிர்ச்சியின் போது கிடைக்கும் தொகை: ரூ. 10,00,717
வட்டி வருமானம்: ரூ. 3,01,717
10 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கார்பஸ் பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்
பொது வாடிக்கையாளர்கள்
பொது வாடிக்கையாளர்களுக்கான வட்டி: ஆண்டுக்கு 6.30%
மாதாந்திர முதலீடு: ரூ. 6,00
மொத்த வைப்புத்தொகை: ரூ. 72,000
முதிர்ச்சியின் போது கிடைக்கும் தொகை: ரூ. 1,00,287
வட்டி வருமானம்: ரூ. 28,287
மூத்த குடிமக்கள்
மூத்த குடிமக்களுக்கான வட்டி: ஆண்டுக்கு 6.80%
மாதாந்திர முதலீடு: ரூ. 585
மொத்த வைப்புத்தொகை: ரூ. 70,200
முதிர்ச்சியடையும் போது தொகை: ரூ. 1,00,500
லாபம்: ரூ. 30,300
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ