)
SBI Services Downtime: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) அதன் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகும், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது. இதனால் அதன் அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
எஸ்பிஐ அறிவிப்பின்படி, வங்கியின் பல டிஜிட்டல் சேவைகள் இன்று ஒரு மணிநேரத்திற்கு செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியிலான பராமரிப்பு பணி காரணமாக டிஜிட்டல் சேவைகள் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் பேங்கிங், IMPS, RTGS, NEFT, YONO, YONO Business, YONO Lite போன்ற சேவைகள் இன்று (செப். 7) மதியம் 1.20 மணிமுதல் 2.20 மணிவரை, அதாவது ஒருமணி நேரத்திற்கு தடைப்படும் என வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் ஆன்லைன் வழியாக பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியாது.
அதேநேரத்தில், எஸ்பிஐ வங்களின் ஏடிஎம் சேவையோ, UPI Lite சேவையோ பாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் யாருக்காவது பணம் செலுத்த வேண்டும் என்றாலோ அல்லது உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுத்தல், பணத்தை டெபாசிட் செய்தாக வேண்டாம் என்றாலோ அதற்கு எந்த தடையும் இருக்காது எனலாம்.
மேலும், மதியம் 2.20 மணிக்கு அனைத்து சேவைகளும் தொடங்கிவிடும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. அதன்பிறகு உங்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ள எவ்வித பிரச்னையோ இருக்காது. ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய நினைப்பவர்கள் அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்று எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
வங்கியின் அமைப்பை மேம்படுத்தவும் பாதுகாப்பை அதிகரிக்கவும் மட்டுமே பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது என எஸ்பிஐ விளக்கம் அளித்துள்ளது. வங்கியின் பராமரிப்பு பணி என்பது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட வழக்கமான செயல்பாடு ஆகும். வாடிக்கையாளர்கள் எதிர்காலத்தில் மிகவும் பாதுகாப்பான மற்றும் சிறந்த சேவையைப் பெற இந்த பராமரிப்பு பணி இன்றியமையாதது ஆகும்.
இன்று மதியம் 1.20 மணிமுதல் மதியம் 2.20 முதல் எஸ்பிஐயின் பல ஆன்லைன் சேவைகளை பயன்படுத்த முடியாத நிலையில், நீங்கள் UPI Lite ஆப்ஷனை தேர்வு செய்யலாம். UPI Lite என்பது இன்னும் பல வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் இருக்கிறது. எளிதாக சொல்ல வேண்டும் என்றால், UPI Lite Wallet-இல் நீங்கள் பணத்தை டாப்-அப் செய்து வைக்க வேண்டும். அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை UPI Wallet-ல் டாப்-அப் செய்து வைத்துக்கொள்ளலாம். ஒருநாளில் அதிகபட்சம் UPI Lite மூலம் ரூ.10 ஆயிரம் வரை பரிவர்த்தனை செய்ய முடியும். UPI Lite சேவையை பயன்படுத்தி நீங்கள் சிறு சிறு பரிவர்த்தனையையும் எளிதாக UPI PIN போடாமலும் மற்றும் இணைய வசதியின் உதவியில்லாமலும் பரிவர்த்தனை செய்யலாம். மேலும், ஒரு பரிவர்த்தனையில் உங்களால் ரூ.1000 தாண்டி பணம் அனுப்ப முடியாது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ