SBI Jan Nivesh Mutual Fund: பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஜன் நிவேஷ் என்னும் SIP திட்டத்தை தொடங்கியுள்ளது. இதில் வெறும் 250 ரூபாயில் முதலீட்டை தொடங்கலாம். குறைந்த வருமானம் உள்ளவர்களையும் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறுதுளிகள் பெருவெள்ளமாகும்
பணத்தை பனமடங்காக்க, உங்கள் முதலீட்டுத் தொகை சிறியதா அல்லது பெரியதா என்பது முக்கியமில்லை. நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்யும் வரை, உங்கள் கார்பஸ் வளர்ந்து கொண்டே இருக்கும். மாதம் ரூ. 250 முதலீடு செய்வதன் மூலம் பெரிய அளவில் நிதியை சேர்ப்பது சாத்தியமே என்பதை அறிந்தால் ஆச்சரியம் உண்டாகும். சிறுதுளிகள் பெருவெள்ளமாகும் என்பதை மறுக்க இயலாது .
எஸ்பிஐ ஜன் நிவேஷ் எஸ்ஐபி முதலீடு
ஜன் நிவேஷ் மியூச்சுவல் ஃபண்டின் கீழ் முதலீட்டாளர்கள் எஸ்பிஐ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இது ஒரு ஹைப்ரிட் டைனமிக் சொத்து ஒதுக்கீடு திட்டமாகும். இது நல்ல வருமானத்துடன், ரிஸ்கை நிர்வகிக்க ஈக்விட்டி மற்றும் கடன் இரண்டிலும் முதலீடு செய்கிறது. ஒவ்வொரு மாதமும் ரூ.250 என்ற சிறிய தொகையில் இந்த ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்கலாம்.
வெறும் ரூ.250 எஸ்ஐபி ரூ.29 லட்சமாக பெருகும்
எஸ்பிஐ பேலன்ஸ்டு அட்வாண்டேஜ் ஃபண்டில் ஜன் நிவேஷ் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.250 எஸ்ஐபி செய்து வந்தால், 40 ஆண்டுகளுக்குப் பிறகு, 12% வருடாந்திர வருமானத்தின் அடிப்படையில், உங்கள் பரஸ்பர நிதியம் மூலம் உங்கள் முதலீடு சுமார் ரூ.29,70,605 லட்சமாக அதிகரித்திருக்கும். இதில் நீங்கள் செய்த மொத்த முதலீட்டு தொகை ரூ.1,20,000 .
எஸ்பிஐயின் ஜன் நிவேஷ் எஸ்ஐபியில் முதலீடு செய்வது எப்படி?
பயனர்கள் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டில், SBI YONO இயங்குதளத்திலும் Paytm, Groww மற்றும் Zerodha போன்ற பிற fintech தளங்கள் மூலமும் முதலீடு செய்யலாம்.
Paytm மூலம் ஜன் நிவேஷ் SIP இல் முதலீடு செய்வது எப்படி?
1: முதலில் உங்கள் Paytm செயலியைத் திறக்கவும்.
2. பிறகு JanNivesh SIP@250 தாவலைக் கிளிக் செய்யவும்.
3. தொகைக்கு (தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திரம்) எந்த விருப்பத்தையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
4. பிறகு நீங்கள் உங்கள் பான் எண்ணை உள்ளிட வேண்டும், அதன் பிறகு நீங்கள் KYC மற்றும் SIP தொகுப்பை முடிக்க வேண்டும்.
5. சரிபார்த்த பிறகு, ஒவ்வொரு மாதமும் நீங்கள் தேர்ந்தெடுத்த வங்கிக் கணக்கிலிருந்து SIP தொகை தானாகவே கழிக்கப்படும்.
ஜன் நிவேஷ் எஸ்ஐபியின் நன்மைகள்
1. சிறிய முதலீட்டில் தொடங்கலாம்
தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர முதலீட்டுத் திட்டங்களுடன் வெறும் 250 ரூபாய் முதல் நெகிழ்வான SIP விருப்பங்களை Jan Nivesh SIP வழங்குகிறது. இதன் மூலம், மாதந்தோறும் பெரிய தொகையை முதலீடு செய்ய முடியாதவர்கள் தங்கள் முதலீட்டு பயணத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்பையும் இந்தத் திட்டம் வழங்குகிறது.
2. டிஜிட்டல் அணுகல்தன்மை
எஸ்பிஐ திட்டத்தில் இணையும் வசதி SBI YONO இயங்குதளத்திலும் Paytm, Groww மற்றும் Zerodha போன்ற பிற fintech தளங்களிலும் கிடைக்கிறது. இதன் மூலம் பயன்படுத்த எளிதாக இருக்கும் டிஜிட்டல் இடைமுகத்தின் மூலம் தங்கள் முதலீடுகளை எளிதாக அணுகலாம் மற்றும் நிர்வகிக்கலாம்.
3. செலவு குறைவு மற்றும் நிலையானது
ஜன் நிவேஷ் SIP முதலீடு செலவு குறைந்ததாகவும், நிலையான வளர்ச்சியை உறுதி செய்யவும் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.)
மேலும் படிக்க | உங்கள் குழந்தை பெயரில் SIP முதலீடு தொடங்குவது எப்படி... சில முக்கிய விபரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









