SBI மியூச்சுவல் ஃபண்டின் வரி சேமிப்புத் திட்டமான எஸ்பிஐ ELSS வரி சேமிப்பு நிதி அற்புதமான வருமானத்தை கொடுத்து வருகிறது. திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, இது முதலீட்டை 135 மடங்கு பெருக்கியுள்ளது. முன்னதாக இந்தத் திட்டம் எஸ்பிஐ நீண்ட கால ஈக்விட்டி ஃபண்ட் என்ற பெயரில் தொடங்கப்பட்டது, பின்னர் இது SBI Long Term Equity Fund என மறுபெயரிடப்பட்டது. இந்தத் திட்டத்தின் வலுவான செயல்திறன் மற்றும் சிறந்த முதலீட்டு உத்தி காரணமாக, வேல்யூ ரிசர்ச் அமைப்பில் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
எஸ்பிஐ இஎல்எஸ்எஸ் வரி சேமிப்பு நிதிக்கு 3 ஆண்டுகள் லாக் இன் காலம். இருப்பினும், இந்தத் திட்டத்தை நீங்கள் விரும்பும் வரை தொடரலாம். இந்த ஈக்விட்டி நிதி 1993 மார்ச் 31 அன்று தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்டதிலிருந்து, இது மொத்த முதலீட்டில் ஆண்டுக்கு 16.45 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. மறுபுறம், எஸ்ஐபி செய்பவர்கள் 15.66% வருடாந்திர வருமானத்தைப் பெற்றுள்ளனர். பல கட்டங்களில், வருமானத்தின் அடிப்படையில் இது அதன் அளவுகோலை முறியடித்துள்ளது.
ரூ.1 லட்சம் முதலீடு ரூ.1.35 கோடியாக பெருகியது
எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் தொடங்கப்பட்டதிலிருந்து (31 மார்ச் 1993), இந்தத் திட்டம் 16.45 சதவீத ஆண்டு வருமானத்தை அளித்துள்ளது. இந்த நிதி தொடங்கப்பட்டபோது ரூ.10,000 முதலீடு செய்தவர்களுக்கு, அதன் மதிப்பு இப்போது ரூ.13,45,635 பெருகியிருக்கும். அதேசமயம், ரூ.1 லட்ச முதலீட்டை ரூ.1,34,56,350 ஆக இந்த பரஸ்பர நிதி பெருக்கியுள்ளது.
திட்டம் தொடங்கப்பட்ட தேதி: 31 மார்ச் 1993
தொடங்கப்பட்டதிலிருந்து வருமானம்: ஆண்டுக்கு 16.45%
ஒரு முறை முதலீடு: ரூ.1,00,000
ரூ.1 லட்சம் முதலீட்டின் மதிப்பு: ரூ.1,34,56,350
நிதி vs பெஞ்ச்மார்க்: 1 முதல் 5 ஆண்டுகள் வரை வருமானம்
SBI ELSS வரி சேமிப்பு நிதி 1 வருடத்தில் 9.83%, 3 வருடங்களில் ஆண்டுக்கு 27.05% மற்றும் 5 வருடங்களில் ஆண்டுக்கு 29.63% வருமானத்தை அளித்துள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட் SIP செயல்திறன்
SBI ELSS வரி சேமிப்பு நிதி 18 ஆண்டுகளுக்கு SIP வருமான தரவைக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் 18 ஆண்டுகளில் SIP செய்யும் முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 15.66 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. இதில், 18 ஆண்டுகளில் ரூ.5,000 மாதாந்திர SIP-ன் மதிப்பு சுமார் ரூ.53 லட்சமாக மாறியது. 18 ஆண்டுகளில் வருடாந்திர வருமானம்: 15.66%
மாதாந்திர SIP: ரூ. 5,000
முதலீட்டு காலம்: 18 ஆண்டுகள்
18 ஆண்டுகளில் மொத்த முதலீடு: ரூ. 10,80,000
18 ஆண்டுகளில் SIP மதிப்பு: ரூ. 52,71,099
தகவல்: வேல்யூ ரிசர்ச் அமைப்பு
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.)
மேலும் படிக்க | PM Kisan 20வது தவணை இந்த நாளில் வருகிறது: மிகப்பெரிய அப்டேட் இதோ
மேலும் படிக்க | ஆதார் மூலம் பரிவர்த்தனை! மத்திய அரசு கொடுத்த குட் நியூஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









