நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI), நிலையான வைப்புத்தொகை (FD) மீதான வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. 2025 ஏப்ரல் 15ம் தேதி முதல் புதிய வட்டி விகிதம் அமலாகிறது. 1 முதல் 3 ஆண்டுகள் வரையிலான கால அவகாசம் கொண்ட நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களை வங்கி 10 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது. இதனுடன், எஸ்பிஐ தனது சிறப்பு எஃப்.டி திட்டமான 'அம்ரித் விருஷ்டி' திட்டத்தையும் திருத்தப்பட்ட வட்டி விகிதங்களுடன் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
வட்டி விகிதம் குறைக்கப்பட்டதற்கான காரணம்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தைக் குறைத்ததைக் கருத்தில் கொண்டு இந்த வட்டி விகிதக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. SBI வங்கியில் FD செய்ய விரும்புபவர்கள், புதிய வட்டி விகிதங்களை அறிந்து கொண்டு முதலீடு செய்வது நல்லது. இப்போது, 1 முதல் 3 வருட நிலையான வைப்புத்தொகைகளுக்கு முன்பை விட குறைவான வட்டி கிடைக்கும். எனினும், பிற திட்டங்களுடன் ஒப்பிடுகையில் "அம்ரித் விருஷ்டி" போன்ற சில திட்டங்கள் இன்னும் கவர்ச்சிகரமான வருமானத்தை அளித்து வருகின்றன என்பதையும் மறுக்க இயலாது. மூத்த குடிமக்களுக்கும், மிகவும் மூத்த குடிமக்களுக்கும் SBI திட்டங்கள் இன்னும் சிறந்த தேர்வு தான்.
FD முதலீடுகளுக்கு இனி வட்டி விகிதம் எவ்வளவு கிடைக்கும், என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்கள்
பொது வாடிக்கையாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான 1 முதல் 3 ஆண்டுகள் வரையிலான கால அவகாசம் கொண்ட நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களை பாரத ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது.
பொது வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதங்கள் விபரம்
1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதம் இப்போது 6.80% லிருந்து 6.70% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான கால அவகாசம் கொண்ட நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதம் 7.00% லிருந்து 6.90% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதங்கள் விபரம்
மூத்த குடிமக்களுக்கும் இதேபோல் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இப்போது 1 முதல் 2 வருட நிலையான வைப்புத்தொகைகளில், மூத்த குடிமக்கள் 7.30% க்கு பதிலாக 7.20% வட்டி பெறுவார்கள். மேலும் 2 முதல் 3 வருட நிலையான வைப்புத்தொகைகளில், மூத்த குடிமக்கள் 7.50% க்கு பதிலாக 7.40% பெறுவார்கள்.
மற்ற காலகட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை
7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால அவகாசம் கொண்ட பிற நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை. பொது வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் 3.50% முதல் அதிகபட்சம் 6.90% வரை வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு இந்த விகிதம் 4.00% முதல் 7.50% வரை இருக்கும். "SBI We-Care" திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு 0.50% கூடுதல் வட்டி கிடைக்கும்.
அமிர்த விருஷ்டி நிரந்தர வைப்புத் திட்டத்திலும் வட்டி விகிதமும் குறைப்பு
எஸ்பிஐ தனது சிறப்பு எஃப்.டி திட்டமான 'அம்ரித் விருஷ்டி' என்னும் 444 நாட்கள் கால அவகாசம் கொண்ட எஃப்டி திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அதற்கான வட்டி விகிதம் 20 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இப்போது இந்தத் திட்டத்தின் கீழ், பொது வாடிக்கையாளர்கள் 7.25% க்கு பதிலாக 7.05% ஆண்டு வட்டியைப் பெறுவார்கள். அதே நேரத்தில், மூத்த குடிமக்களுக்கு 7.55% வட்டியும், சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு 7.65% வட்டியும் வழங்கப்படும். இந்த திட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதிக வட்டியை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கானது. இந்தத் திட்டம் மற்ற FD விருப்பங்களை விட சிறந்த வருமானத்தைத் தருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | Gpay, Paytm பயனர்கள் ஷாக்... பணப் பரிவர்த்தனையில் சிக்கல் - என்ன தான் ஆச்சு?
மேலும் படிக்க | தட்கல் புக்கிங் செய்ய சரியான நேரம் எது தெரியுமா? இந்த தவறுகளை பண்ணாதீங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









